தமிழகத்தில் சில அருவிகள் இருந்தாலும்
கூட சில மாதங்களில் மட்டுமே அருவியில்
நீர் வரும். திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக
இருக்கிறது. திற்பரப்பு அருவியானது
கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5கி .மீ தொலைவில்
உள்ளது .திருவந்தபுரத்தில் இருந்து
85 கி .மீ தொலைவில்
இருக்கிறது.இந்த அருவிக்கு குமரி குற்றாலம் என்று மற்றொரு பெயர் உண்டு .
கன்னியாகுமரியானது இந்தியாவில்
மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்காமல் இருந்த போது பத்மனாதபுரம் அரண்மனை ஆளுகைக்கு உட்பட பகுதியாக இருந்திருக்கிறது
.மொழி வாரியாக பிரிக்கப்படும்போது
தமிழகத்தில் சேர்ந்தது.திற்பரப்பு அருவி மேல் வந்து பாயும் ஆற்றின் பெயர்
கோதை ஆறு .இந்த அருவியில் குளிப்பதற்கு ஆண்களுக்கு
ஆழமான பகுதியும் , பெண்களுக்கு ஆழமற்ற
பகுதியும் தனித்தனியாக இருக்கிறது.உடை
மாற்றும் பகுதியும் இருக்கிறது. இந்த அருவி தமிழ் நாடு சுற்றுலா துறையினால்
பராமரிக்க படுகிறது.
அருவியின் மேல் பகுதியில் உல்லாச குளியல் போடும் யானைகள்
திற்பரப்பு அருவியில் உள்ள
பூங்காவில் குழந்தைகளுக்கு
விளையாட என்று பெரிய பொம்மைகளும் உண்டு .
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல் உள்நாட்டு மக்களும் வந்து செல்கிறார்கள் .காலை
முதல் மாலை வரை எல்லா நாட்களிலும் அனுமதி உண்டு .பேருந்து வசதி ஒரு குறை .சொந்தமாக
வாகனம் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் குற்றாலம் போல கூட்டம் நெரிசல் இருக்காது .நேரம் கிடைத்தால் ஒரு முறை
சென்று பாருங்கள் !
படத்தின் பின் பகுதியில் தெரிவது தான் சிவன் கோவில்
இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில்
உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு
உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு
அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம்
கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய
சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது
திற்பரப்பு அருவியிலிருந்து ஐந்து
கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள்
அமைந்துள்ளன.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.