Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிவப்பாக வேண்டுமா? உங்களுக்கான பலன் தரக் கூடிய மாஸ்க் வழிமுறைகள் - fair skin treatment at home
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
அனைவரும் அழகிய மற்றும் பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமெனவே ஆசைகொள்கின்றனர் . சிகிச்சைகளின் மூலம் பிரகாசமான சருமத்தை நீங்கள்...

அனைவரும் அழகிய மற்றும் பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமெனவே ஆசைகொள்கின்றனர். சிகிச்சைகளின் மூலம் பிரகாசமான சருமத்தை நீங்கள் பெறுவதுடன், இலகுவான சரும நிறத்தினை அது தந்தாலும் அவற்றின் விலையை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நாம் பயன்படுத்தும் அனைத்தும் இயற்கை பொருளாக இருக்கும்போதிலும்... அலர்ஜி பிரச்சனைகளை தவிர்க்க, இதனை ஒரு முறை சோதனை செய்து பார்த்துகொள்வது நல்லதாகும். ஆனால், நீங்கள் இதனை தொடர்ந்து பின்பற்றிவர, இதன் பயன்களை கண்டிப்பாக விரைவில் உணர்வீர்கள். அதனால் உங்கள் பொறுமைக்கு கால அவகாசம் தந்து இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவது உங்களை நோயாளி ஆக்காமல் காக்க பெரிதும் உதவுகிறது. கண்டிப்பாக இந்த வழிமுறைகளால் பயனடைந்து, உங்கள் தோழர்களையும் பின்பற்ற சொல்வீர்கள் என்பதே உண்மை. இப்பொழுது வீட்டிலிருந்துகொண்டே அழகிய சருமத்தை பெற சில டிப்ஸ் உங்களுக்காக...


லெமன் ஜூஸ் மற்றும் கிளிசரின் மாஸ்க்:
தேவையான பொருட்கள்
லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன் 
கிளிசரின் - 1 டீஸ்பூன் 
காட்டன் பஞ்சு -
எப்படி பயன்படுத்துவது: உங்கள் முகத்தை ப்ளைன் வாட்டரை அல்லது லேசான கிளியன்சரை கொண்டு முதலில் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பௌல் எடுத்துகொண்டு, அதில் லெமன் ஜூஸ் மற்றும் கிளிசரினை மிக்ஸ் பண்ண வேண்டும். ஒரு காட்டன் பஞ்சினை கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். மறு நாள் காலை உங்கள் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். நீங்கள் மிக்ஸ் பண்ணும் போது எழுமிச்சையை மட்டும் நன்றாக பிழிய வேண்டியதை கவனத்தில் கொள்ளவும். ஆம், அப்பொழுது தான் அது மிக விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடையுமாம். இந்த முறையை நீங்கள் இரவில் செய்ய, அதனால் காலையில் சூரியன் இந்த ஆக்ஸிஜனேற்ற முறைக்கு பெரிதும் உதவுகிறது. உங்கள் சருமத்தில் கிழிந்து அல்லது சிராய்ப்புகள் இருந்தால்...அந்த இடத்தை விட்டு தேய்ப்பது மிக நல்லதாகும்.


தக்காளி மற்றும் பப்பாளி மாஸ்க்:
தேவையான பொருட்கள்
1 மீடியம் சைஸ் தக்காளி - முனுக்கியது 
½ கப் பப்பாளி - பிசைந்தது 
எப்படி பயன்படுத்துவது: இந்த தக்காளியையும், பப்பாளியையும் நன்றாக மிக்ஸ் பண்ணிக்க வேண்டும். முகத்தை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அந்த மிக்ஸ் செய்ததை முகத்தில் தடவ வேண்டும். அது ட்ரை ஆகும் வரை காத்திருந்து, அதன் பின்னர், இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.


க்ரீன் டீ மற்றும் புல்லர் எர்த் மாஸ்க்:
தேவையான பொருட்கள்
க்ரீன் டீ பேக்ஸ் -
தண்ணீர் - ½ கப் 
புல்லர் எர்த் - 2 டீ ஸ்பூன் 
எப்படி பயன்படுத்துவது: முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, க்ரீன் டீ பேக்குகளை அதில் செங்குத்தாக போட வேண்டும். இந்த க்ரீன் டீ யை புல்லர் எர்த்தில் கவனமாக ஊற்றி அதன் பின்னர் மிக்ஸ் பண்ணவும். அந்த முகமூடி போன்றதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு அதனை எடுத்துவிட்டு இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.


கடுகு எண்ணெயை கற்பூரத்துடன் உட்புகுத்துவது:
தேவையான பொருட்கள்
கடுகு எண்ணெய் - 2 டீ ஸ்பூன் 
இயற்கை கற்பூரம் - 1 லிருந்து 2 கிராம்கள் 
இதனை பயன்படுத்துவது எப்படி: ஒரு பௌல் எடுத்துகொண்டு அதில் கற்பூரத்தை போடவேண்டும். அதன் பிறகு அதில் கடுகு எண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த எண்ணெயை, கற்பூரம் சிதையும் வரை சூடுபடுத்தி கொண்டிருக்க வேண்டும். அந்த எண்ணெயை நாம் தொட குளிர்ந்து காணப்படும். அதன் பின் உங்கள் முகம் ப்ரெஷ்ஷாக இருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொண்டு, இந்த பௌலில் இருப்பதை முகத்தில் தடவ வேண்டும். இரவு முழுக்க வைத்திருந்து அதன் பின் லேசான கிளியன்சரை கொண்டு துடைக்க வேண்டும்.


உருளைக்கிழங்கு மற்றும் கார்ன் ஸ்டார்ச் க்யூப்ஸ்:
தேவையான பொருட்கள்
1 சிறிய உருளைகிழங்கு - துண்டுகளாக்கப்பட்டது 
பால் - ¼ கப் 
கார்ன் ஸ்டார்ச் - 1 டீ ஸ்பூன் 
எப்படி பயன்படுத்துவது: பாலை கொண்டு உருளைக்கிழங்கினை முதலில் கூளாக ஆக்கிகொள்ள வேண்டும். அதில் கார்ன் ஸ்டார்ச்சை மிக்ஸ் பண்ண வேண்டும். இந்த மிக்ஸ் செய்யப்பட்டதை, ஒரு சிறிய ஐஸ் ட்ரே அல்லது ப்ரீஷரில் வைக்க வேண்டும். அதன் பிறகு உறைந்து போன க்யூபை கொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒருவாரம் தொடர்ந்து இரவு பொழுதில் செய்து வர, அது உங்கள் சருமத்தை அழகாக்குகிறது. இது ஒரு வலிமையான முகமூடியை போன்றது. அதனால், மேல் புறத்தின் தோல்கள் பளபளவென காட்சி தருவது நிச்சயம்.


ஸ்ட்ராபெரி, ஹனி மற்றும் ஜிஞ்ஜர் பேஸ் பேக்:
தேவையான பொருட்கள்
ஸ்ட்ராபெர்ரி - 1 கப் 
இஞ்சி - 1" பீஸ் தேன் - 1 டீ ஸ்பூன் 
எப்படி பயன்படுத்துவது: ஸ்ட்ராபெர்ரியையும் இஞ்சியையும் நன்றாக கூளாக்கி கொள்ள வேண்டும். அதில் தேனை சேர்க்க வேண்டும். பின் அதனை முகம் முழுவதும் முகமூடி போல் தடவி, 30 நிமிடங்கள் கழித்து அதனை எடுக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரினை கொண்டு நன்றாக துடைக்க வேண்டும்.


கிராம் மாவு ஸ்க்ரப்:
க்ராம் மாவு - 2 டீ ஸ்பூன் 
பால் - 2 டீ ஸ்பூன் 
குங்குமப்பூ - 2 லிருந்து 4 இழைகள் 
மஞ்சள் - ½ டீ ஸ்பூன் 
எப்படி பயன்படுத்துவது: முதலில் பாலினை சூடு படுத்திகொள்ள வேண்டும். அத்துடன் குங்குமப்பூவை அதில் நன்றாக ஊற வைக்க வேண்டும். மேலும் க்ராம் மாவையும் மஞ்சளையும் அத்துடன் சேர்க்க வேண்டும். நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை சருமத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக துடைக்க வேண்டும். இந்த மாவினை, நம் முகம் மற்றும் உடம்பு முழுவதும் தேய்த்து சருமத்தின் பளபளப்பை நாம் பெறலாம்.


ரோஜா மற்றும் வெள்ளரிக்காய் மிஸ்ட்:
தேவையான பொருட்கள்
ரோஜா இதழ்கள் - 1 கப் 
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று 
தண்ணீர் - 500 மில்லி 
ரோஜா அத்தியவாசிய ஆயில் - 2 சொட்டு 
எப்படி நாம் பயன்படுத்துவது: வெள்ளரிக்காயை துண்டு துண்டாக நறுக்கிகொள்ள வேண்டும். வெள்ளரியின் தோல்களை உரிக்க தேவையில்லை. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை விட்டு இறக்க வேண்டும். நறுக்கப்பட்ட வெள்ளரிக்காயை ஒவ்வொன்றாக அதில் போட வேண்டும். அத்துடன் ரோஜா இதழ்களையும் அதில் போட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த நீரினை பார்க்க நன்றாக திரிந்து குளிர்ச்சியுடன் காணப்படும். இப்பொழுது, உங்களுடைய ரோஜா மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு செய்யப்பட்ட பேஸ் மிஸ்ட் ரெடி. அதனை ஒரு ஷ்ப்ரே பாட்டிலிற்கு மாற்ற வேண்டும். அந்த பாட்டிலில் இருக்கும் நீரினை, இரவு பொழுதில் உங்கள் கழுவிய முகத்தில் ஷ்ப்ரே போல் (அடித்து) வர, உங்கள் முகம் பளபளப்புடன் விரைவில் மாறுகிறது.


சந்தன பேஸ்ட்:
தேவையான பொருட்கள்
ஒரு சந்தனக் குச்சி சந்தனக்கட்டை - நன்கு அரைக்கப்பட்டது 
தண்ணீர் - 3 லிருந்து 4 டீ ஸ்பூன் 
இதனை நாம் பயன்படுத்துவது எப்படி: அரைக்கப்பட்ட சந்தனக்கட்டையில், 1 டீ ஸ்பூன் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதோடு நம்மிடம் இருக்கும் சந்தனக்கட்டையை நன்றாக வட்டமான வடிவத்தில் இழைத்து (தேய்த்து) கொள்ள வேண்டும். அது பேஸ்ட் போன்ற அமைப்பிற்கு வர, அதனை எடுத்து ஒரு பௌலில் கொட்ட வேண்டும். நம்மிடம் இருக்கும் தண்ணீரின் பயன்பாடு முழுமை அடையும் வரை கொட்ட வேண்டும். அதன் பிறகு 2 டீ ஸ்பூன் சான்டல்உட் பேஸ்டை எடுத்துகொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் நன்றாக தடவ வேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்து அதன் பின், குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.


துளசி மாஸ்க்:
தேவையான பொருட்கள்
துளசி இலைகள் - 1 கப் 
தேன் - 1 டீ ஸ்பூன் எப்படி நாம் பயன்படுத்துவது: துளசி இலைகளை நன்றாக நசுக்கி அத்துடன் தேனையும் சேர்க்க வேண்டும். அதனை முகத்தில் தேய்த்துகொண்டு 10 நிமிடங்கள் கழித்து...குளிர்ந்த நீரினை கொண்டு துடைக்க வேண்டும். இந்த அனைத்து வழிமுறைகளும் உங்கள் சரும சிக்கலுக்கு தீர்வாக அமைய, அதனை நீங்கள் தினமும் பயன்படுத்திவர, ஒரு நாள் இந்த இயற்கை பொருள்களின் பண்புகளால் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும் என கூறலாம். ஆனால், இந்த முறைகளால் கிடைக்கும் பலன் என்பதற்கான கால அவகாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்க, நாம் குறைந்தது இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து பொறுமை காத்துவர, ஒரு நாள் உங்கள் சருமத்தை கண்டு நீங்களே ஆச்சரியபடுவீர்கள். 

01 Jun 2017

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...