தேசிக
விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20
நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய
கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப்
பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ.
படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர்
ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம்
முடித்தார்.
எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய
ஜோதி' யைத்
தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத்
தழுவி தமிழில் எழுதினார்.
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல
அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம்
மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்
பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத்
தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
24 டிசம்பர் 1940 ல் சென்னை
பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம்
வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை
போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து
விட்டார். 1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம்
அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச்
சிறப்பித்தது.
கவிமணியின்
நூல்கள்
ஆசிய ஜோதி
, (1941)
மலரும்
மாலையும், (1938)
மருமக்கள்வழி
மான்மியம், (1942)
கதர்
பிறந்த கதை, (1947)
உமார்
கய்யாம் பாடல்கள், (1945)
தேவியின்
கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்
கவிமணியின்
உரைமணிகள்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.