கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரம். பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரில் தான் சிறுவாணி உள்ளது. அணையின் கட்டுமானப்பணி ஆங்கிலேயர்களால் 1927 – தொடங்கப்பட்டு 1931-ல் முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 23 அடிகளாகும். உலகச் சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது சிறுவாணி ஆறு.
பாவனி நதியின் துணைநதியான சிறுவாணி கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகிறது. அங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கும் மேற்கே பாவனியுடனும் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆற்றில் ஒரு சிறு அணைகட்டி அந்த அணையில் தேங்கிய நீரை ஒரு குகை மூலம் மலையின் மறுபுறம் அதாவது கிழக்குப் பக்கம் கொண்டு வந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் நீர்வீழ்ச்சி நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 – ஆம் ஆண்டு புதிய அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது.
இது கோவை மற்றும் பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயணத்தலமாக விளங்குகிறது.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON