Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இந்தியாவில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மிகச்சிறந்த இடங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம் /best places celebrate christmas india
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
வைக்கோலின் மேல் வைரமாய் உதித்த ஏசுபிரானின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் உலகம் முழுக்க இருக்கும் மக்களால் பெரும் உவகையுடன் கொண்டாடப்படுகிறத...
வைக்கோலின் மேல் வைரமாய் உதித்த ஏசுபிரானின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் உலகம் முழுக்க இருக்கும் மக்களால் பெரும் உவகையுடன் கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் சர்சுகளில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கேக்குகளையும், பரிசுகளையும் பரிமாறி மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும்.   இவ்வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையை புதுமையாக கொண்டாட வேண்டும் என விரும்புகிறீர்களா? குடும்பத்தினருடன் அற்புதமான சுற்றுலாத்தலதிற்கு சென்று அங்கே மனமுருகி நம்மை ரட்சிக்க வந்த ஆண்டவனை ஜபித்து ஆனந்தமாக இந்த விடுமுறை காலத்தை கொண்டாலாமா நண்பர்களே?. வாருங்கள் இந்தியாவில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மிகச்சிறந்த இடங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம்.

கோவா Goa கிறிஸ்மஸ் கால சொர்க்கம்
பார்டி கொண்டாட்டங்களின் நகரமாக கருதப்படும் கோவா நகரம் தான் இந்தியாவில் கிறிஸ்மஸ் கொண்டாட மிகச்சிறந்த இடமாகும். ரோமன் கத்தோலிக்க கிருத்துவர்கள் இங்கே அதிகமாக வசிப்பதும்சில நுற்றாண்டுகளுக்கு முன் இந்நகரத்தை கைப்பற்றிய போர்துகீசியர்களின் தாக்கம் இன்றும் இருப்பதும் இதன் காரணங்களாகும்.
வீடுகள், வீதிகள், கடைகள் என எல்லா இடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே கிறிஸ்மஸ் காலத்தில் வண்ண மழையில் நனைகிறது.
இங்கே மக்கள் நள்ளிரவில் கோவாவில் இருக்கும் பழமையான சர்சுகளில் கூடி கீதங்கள் பாடி ஏசுபிரான் பிறந்ததை கொண்டாடுகின்றனர். ஸி கதீட்ரல், போம் ஜீசஸ் பசிலியா, புனித கதிஜன் சர்ச் போன்றவை கோவாவில் இருக்கும் சில புகழ்பெற்ற, நாம் கட்டாயம் செல்ல வேண்டிய சர்ச்சுகள் ஆகும்.

எப்போதும் போல கிறிஸ்துமஸ் தினத்திலும் கோவா கடற்க்கரைகளில் பார்டிகள் களைகட்டுகின்றன. கிருஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முழுக்க கடற்க்கரைகளில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களில் ஒன்று கிருஸ்துவர்கள் அல்லாதவர்களும் இந்த கொண்டாட்டங்களில் தாராளமாக கலந்து கொள்ளலாம் என்பதே.

கோவாவில் கிருஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என நினைப்பவர்கள் பல நாட்கள் முன்னரே திட்டமிட்டு ஹோட்டல்களை முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. கிறிஸ்மஸ்   மற்றும் புத்தாண்டை ஒன்றாக கொண்டாட இங்கே அதிகமானோர் வருவார்கள் என்பதால் நெரிசலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்



பாண்டிச்சேரி Pandichary : 
சக மக்களுடன் ஒன்றாக ஜெபித்து மனமார இறைவனை வேண்டி மன அமைதியுடன் அதேசமயம் புதுமையாகவும் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாட நினைப்பவர்கள் நிச்சயம் பாண்டிச்சேரிக்கு ஒருமுறையேனும் கிறிஸ்மஸ் காலத்தில் வர வேண்டும்.

அரை நூற்றாண்டு முன்பு வரை பிரஞ்சு காலனியாக இருந்ததாலேயே என்னவோ இந்தியாவின் குட்டி பிரான்சு என்று அழைக்கும் அளவிற்கு பிரஞ்சு கலாசார கலவையுடன் மிளிர்கிறது இந்நகரம். காணும் இடமெல்லாம் ஒளிரும் நட்சத்திரங்கள், ஒளிவெள்ளத்தில் மிதக்கும் சர்ச்சுகள் என பாண்டிச்சேரி ஆண்டில் வேறெப்போதும் இல்லாத அளவிற்க்கு விழாக்கோலம் தரிக்கிறது.


இங்கே பிரஞ்சு காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான சர்சுகளில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் நாம் பங்கேற்கலாம். 1690ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆரோக்கிய மாதா சர்ச், தூய இருதைய ஆண்டவர் சர்ச் போன்ற சர்ச்சுகள் பாண்டிச்சேரியில் பிரபலமானவை.


கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை முடித்து விட்டு குடும்பத்தினருடன் பாண்டிச்சேரியில் இருக்கும் ஆரோவில்லே, கலங்கரை விளக்கம்,பாண்டிச்சேரி கடற்க்கரை என அங்கிருக்கும் சில நல்ல சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று வாருங்கள். 
 

பாண்டிச்சேரிக்கு சென்று விட்டு அங்குள்ள பிரஞ்சு உணவகங்களில் கிடைக்கும் அந்நாட்டு உணவுகளை சுவைத்து ரசிக்க மறந்து விடாதீர்கள்


குமரி மாவட்ட கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள்
தமிழ்நாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட மிகச்சிறந்த இடமாகும். கிருத்துவர்கள் இங்கே அதிகமாக வசிப்பதும்சில நுற்றாண்டுகளுக்கு முன் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும் இங்கு வந்த பல மிசினரிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் தாக்கம் இன்றும் இருப்பதும் இதன் காரணங்களாகும்.


டிசம்பர் 23, 24, 25 நடகளில் குமரி மாவட்டம் முழுவதும் வண்ண ஒழி மயமாக தான் காணப்படும்.  டிசம்பர்  24 இரவில் நாகர்கோயிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும்போடது வழிஎங்கும் பல வித வித மான அலகாரத்தை பார்க்கலாம் 


பின்னர் கருங்கல் வந்து இந்தியாவில் பெரிய குடில் ஐ பார்க்கலாம் அங்கு இருந்து பாலபள்ளம் இங்கும் பல குடில் பார்க்கலாம்



குளச்சல் லில் இருந்து கடற்கரை வழியாக கன்னியாகுமரி வந்து பின்னர் நாகர்கோயில் வந்தால் குமரி மாவட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நன்கு உணரலாம்


இங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் மற்றும் கிறிஸ்துமஸ் காரல்ஸ் , குடில் போட்டி ஸ்டார்ஸ் அலங்காரம் , கிறிஸ்துமஸ் தாத்தா சிலைகள், church அலங்காரம் street அலங்காரம் கிறிஸ்துமஸ்  சிறப்புகள் ஆகும்.


கேரளா - 
கடவுளின் தேசத்தில் இறைவனின் பிறந்த நாளை கொண்டாடலாம்: இயற்கை அழகு நிறைந்திருக்கும் சொர்க்க பூமியான கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது கிருஸ்மஸ்


திருச்சூரில் இருக்கும் புத்தன்பள்ளி சர்ச், சான்டா குருஸ் சர்ச், புனித பிரான்சிஸ் சர்ச் போன்றவை இங்கிருக்கும் பிரபலமான சர்சுகள் ஆகும். கேரளாவில் உள்ள படகு வீடுகளில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கெடுப்பதும் புதுமையான அனுபவமாக இருக்கும்.




தாமன் & தையு: குஜராத் மாநிலத்திற்கு பக்கத்தில் அமைந்திருக்கும் இந்த யூனியன் பிரதேசமானது அற்புதமாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுகிறது. கோவாவை போன்றே போர்துகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த இடத்தில் இன்றும் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது போர்த்துகீசிய நடமான கொரிந்தினோ ஆடப்படுகிறது. அதே போன்று நகரம் முழுக்க பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


கொல்கத்தா: சுவையான கேக்குகள், ஒளிரும் நகரங்கள் என 'மகிழ்ச்சியின் நகரம்' என்று சொல்லப்படும் கொல்கத்தா கிறிஸ்மஸ் விழாவை தசராவிற்கு இணையாக உயிர்ப்புடன் கொண்டாடுகிறது. இங்குள்ள பார்க் வீதி தான் கொண்டாட்டங்களின் மையமாக திகழ்கிறது.


கொல்கத்தா: எங்கு பார்த்தாலும் மக்கள் சிவப்பு நிற கிறிஸ்மஸ் குல்லாவை அணிந்தபடி குழுக்களாக ஒன்று சேர்ந்து பாடல்கள் பாடி குதுகலமாக இனிப்புகள் பரிமாறி இவ்விழாவை கொண்டாடுகின்றனர். ஷாப்பிங் செய்திடவும், இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் கொல்கத்தாவிற்கு வர வேண்டும்.


மனாலி: வெளிநாடுகளில் இருப்பது போன்று வெண்பனி நிறைந்த குளிரான ஓரிடத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் செல்லவேண்டிய இடம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் மணாலிக்கு தான்.


குளிர்காலமான டிசம்பர் மாதத்தில் இந்நகரம் முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டு எங்கே பார்த்தாலும் வென்மயமாக காட்சி தருகிறது. இங்கே அழகான ஒரு தாங்கும் விடுதியில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் குடும்பத்தினருடன் ஒன்றாக கைகோர்த்து ஜெபம் செய்து கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடலாம்.

மெர்ரி கிறிஸ்மஸ்!: இந்த வருட கிறிஸ்மஸ் விழாவை மேலே சொன்ன இடங்கள் ஏதேனும் ஒன்றிற்கு சென்று ஆத்மார்த்தமாக இறைவனை வேண்டி மனமகிழ்வுடன் ஆண்டவரின் பிறந்த நாளை கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top