பலர் பல அறிவியல் மற்றும் அரசியல் காரங்களை சுட்டிக்காட்டி அதனை எதிர்த்தனர் . ஒரு சாதாரண குடிமகனாய் எனது அறிவுக்கு எட்டிய கருத்துகளை உங்களுடன் இங்கு பகிர ஆசை படுகிறேன்.
இந்தியாவில் மொத்தம் 6 இடங்களில் அணுஉலைகள் இருக்கின்றன .இதில் 3 அணுஉலைகள் தமிழகத்தில்தான் உள்ளது என்பது அதிர்ச்சிதரும் உண்மை. 29 மாநிலங்கள் உள்ள ஒரு நாட்டில் ஏன் ஆறில் இரண்டு அணுஉலைகளை தமிழகத்தில் அமைக்கவேண்டும் ?
ஏதேனும் விபத்து உண்டாகி இழப்பு நேர்ந்தால் எல்லை ஓரமாய் நிகழட்டும் என்றுதானே ? நாம் சோதனை எலிகளாய் தான் இன்றும் இருகின்றோம் .
அதுவும் இல்லாமல் நாம் நாட்டு எல்லையை சுற்றி எதிரிகளை கொண்டுள்ள நாடு பாகிஸ்தான் வரம் இருமுறை போர்நிறுத்த ஒப்ந்ததை மீறி நாம் வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தும் நாடு.
அடுத்தது சீனா , தலாய்லாமாவீர்க்கு இந்தியா அடைக்கலம் குடுத்ததிலிருந்து நம் மீது கோவம் கொண்டுள்ள நாடு . அதுமட்டுமா அடிக்கடி நம் எல்லையில் உடுருவி வருகிறது இந்தியாவிற்கு சொந்தமான ஒரு கிராமத்தை அபகரித்துவிட்டது என செய்திதாளில் படித்தேன் .
அடுத்தது இலங்கை , இதை பற்றி தனியாக நான் சொல்லவேண்டாம்.
அடுத்தது இரு நாட்டிற்கு போர் முண்டால் கண்டிப்பாக அந்த நாடுகள் முதலில் அடுத்த நாட்டின் அனுஊலைகலையே முதலில் குறிவைத்து தாக்கும் .அப்பொழுது நம் கல்பாக்காம் , கூடங்குளம் இரண்டும் கண்டிப்பாக குறிவைக்கப்படும். தமிழ் இனம் சுவடில்லாமல் அழிக்கப்படும் .
அணுஉலை மிகவும் பாதுகாப்பானது என கூறும் மத்திய அரசே ? என் அதை கடல் ஓரமாய் இந்தியாவின் எல்லையில் அமைத்துள்ளிர்கள் ?
இதில் முன்றாம் உலக போர் இந்திய மகாசமுத்திரத்தை குறிவைத்து நடக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். அப்பொழுது நம் எதிர்கால சந்ததினருக்கு அந்த அணுஉலைகள் மிகுந்த அச்சுறுத்தலாய் இருக்கும்.
இந்திய மின்சக்தி தயாரிப்பில் அணு மின்சக்தி தயாரிப்பு நான்காம் இடத்தில் தான் உள்ளது .மற்ற மின் உற்பத்தியை பெருக்கலாமே ? மற்ற மின் உற்பத்தியை விட அணு மின் உற்பத்தி தான் மிகுந்த செலவு அதிகமானது.
கூடங்குளம் அணுஉலை ரஷ்ய தொழில் நுட்பத்துடன் இணைத்து உருவாக்கபடுகிறது . முதல் அணுஉலை விபத்து ரஷ்யாவில் அவர்களின் தொழில்நுட்பத்தில் உருவான chernobyl என்னும் இடத்தில்தான் நிகழ்ந்தது என இந்தியா மறந்துவிட்டதா? தோல் நுட்பத்தில் நமைமிஞ்சிய ஜப்பானின் அனுஉலையே கடல் சிற்றதில் விபத்துக்கு உள்ளானபோது போது நம் உலை பாதுகாப்பானதா?
நாஞ்சில் நாடு
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.