தாடி மென்மையாக இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
Tips make your beard soft
Tips make your beard soft
ஆண்களுக்கு அழகே அவர்களின் தாடியும், மீசையும் தான்.
அதிலும் தாடி வைத்த ஆண்களைத் தான் பல பெண்கள் விரும்புவார்கள். அதற்கு காரணம் பல
இருந்தாலும், அந்த தாடியை மென்மையாக வைத்துக் கொண்டால்,
உங்கள் காதலி/துணைவி உங்களுக்கு முத்தம் கொடுக்கும் போது, அவர்களை குத்தி காயப்படுத்தாமல் இருக்கும் அல்லவா? ஆகவே
தமிழ் போல்ட் ஸ்கை தாடியை மென்மையாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகளைக்
கொடுத்துள்ளது. அதன்படி தினமும் பின்பற்றினால், நிச்சயம்
உங்களின் தாடியானது மென்மையாக இருக்கும். ஷேவிங் மூலம் 'மிஸ்டர்
பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...
ஷாம்பு
எப்படி தலையில் உள்ள முடி மென்மையாக இருக்க, அதனை முறையாக பராமரிக்கிறோமோ, அதேப் போல் தாடியையும்
சரியாக பரிமரிக்க வேண்டும். அதற்கு வாரம் இரண்டு முறை தாடியை ஷாம்பு போட்டு அலச
வேண்டும். இதனால் தாடியானது மென்மையாக இருக்கும். அதிலும் தாடிக்கு என்று தனியாக
கடைகளில் ஷாம்பு விற்கப்படுகிறது. அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர்
தாடிக்கு ஷாம்பு மட்டுமின்றி, கண்டிஷனர் போட்டு அலசினால்,
தாடியானது மென்மையாக பட்டுப்போன்று இருக்கும். எப்படி தாடிக்கு
ஷாம்பு உள்ளதோ, அதேப்போல் கண்டிஷனரும் உள்ளது.
ஃபேஷ் வாஷ்
தினமும் முகத்தை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன், தாடியும்
மென்மையாக இருக்கும்.
ட்ரிம்
தாடியின் முனைகள் தான் கடினமாக இருக்கும். எனவே அத்தகைய தாடியின்
முனைகளை அவ்வப்போது ட்ரிம் செய்தால், தாடியானது மிருதுவாக இருக்கும்.
ஷேவிங்
ஷேவிங் செய்யும் போது நல்ல க்ரீம் மற்றும் ரேசர் பயன்படுத்தி வாரம்
ஒருமுறை ஷேவிங் செய்தால், தடிமனாக இருக்கும் முடிகளானது போய், புதிய முடி வளர ஆரம்பிக்கும். இப்படி புதிதாக வளரும் முடி மென்மையாக
இருக்கும்.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
super
ReplyDelete