அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலா ளர் ப்ரீத்தி ஷா. ‘இ ன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசி ரியராகவும் இருக்கிறார். விளம்பரங்க ளால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித் து எண்ணற்ற வீடுகளில் காலை உண வாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என் று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன் னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வு க்கு எடுத்துக் கொ ள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுக ள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உண வுத் தரக் கட்டுப்பாட்டு முகமையி ன் அளவுகளை வைத்து இந்தத் தர ச்சோதனை நடந்தது. இதில் வெளி யான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திரு க்கிறார் ப்ரீத்தி ஷா.
ஆய்வு சொல்லும் முடிவுகள்:
சோதனை செய்யப்பட்ட எந்த முன் னணி நிறுவனங்களின் நூடுல் ஸும் விளம்பரங்களில் காட்டப்ப டுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந் தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல் லை.
அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டி லும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனும திக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியா வில் விற்கப்ப டும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில் லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொ ழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வ தைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத் து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாள ங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
ப்ரீத்தி ஷா சொல்கிறார் .
”ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர் பாக விளக்கம் கேட்டு 15 நிறுவ னங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார் பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடித ங்களுக் கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறு தானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெரு நிறுவ னங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமை ப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர் வோ டு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வள ர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோ யாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது” என்றார் அக்கறை யுடன். உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.