Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கடலிலே காவியமான காவியநாயகர்கள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
அன்றும் ஒரு இதேநாள் ! வஞ்சக இந்திய வலையிலே , வங்கக்கடல் நடுவிலே! மானம் காக்க உயிர்துறந்தார் ; பார் புகழும் கிட்டண்ணை ! jj ...

அன்றும் ஒரு இதேநாள் !
வஞ்சக இந்திய வலையிலே,
வங்கக்கடல் நடுவிலே!
மானம் காக்க உயிர்துறந்தார்;
பார் புகழும் கிட்டண்ணை !
jj
கேணல் குட்டிசிறியுடனும்-இனம்
காக்க வந்த எண்மவரும்;
வானம் பார்த்த நடுக்கடலில்
வீரச்சாவை எய்திநின்றார் !
சிங்களனுக்கு மாமாவாம்
சிறு நரி புத்தி இந்தியா !
திடுமென அண்ணையை சுற்றியே
திருட்டுத் தனமாய் தாக்கியதே !

வானுலங்கு ஊர்திகளும்
வளமான ஆயுதப் படைகளும்
கொண்டு எம்மைதாக்கிடவே
கொண்ட கொள்கை வீரத்துடன்
துமிக்கு பிடித்து எதிர்த்து நின்றார் !

சரணடையக் கூறி சவால் விட்டது,
சாக்கடை மேயும் இந்தியநாய் !
எம்முயிர் இழப்போம் !
மானம் இழப்போமா ?
எதிர்த்து நின்றது
ஈழத்துப் புலி

தாக்குப்பிடித்தனர்
பதினைந்தாம் நாள்முழுதும்,
துமிக்கு பிடித்த கைகளுடன் !
விடிந்ததும் பொழுது ஜனவரி பதினாறு ;
தமிழீழவிடியலின் விளக்காக
எரிந்தார் கிட்டண்ணை
தோழர்களுடன் வீரச்சாவெய்தி !

அடங்கமாட்டோம் !
ஓடுங்கமாட்டோம் !
ஆக்கிரமிப்பு இந்தியசிங்களமே!
அடிமைத் தளையுடைத்து
ஆர்த்தெழுவோம் !
மீண்டும் யாம் ; அப்பொழுது ?
முன்களத்தில் நின்றடிக்கும்
கேணல் கிட்டு பீரங்கி படையணி !

மீண்டு எழுவோம் !
மீண்டும் வருவோம் !

- தமிழரசன் (அப்துல் காதர்).

நன்றி!!!

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top