Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப்பிரியா மற்றும் போராளிகள் சிங்கள பயங்கரவாத இராணுவத்தின் பிடியில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப்பிரியா மற்றும் போராளிகள் சிங்கள பயங்கரவாத இராணுவத்தின் பிடியில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி...

படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப்பிரியா மற்றும் போராளிகள் சிங்கள பயங்கரவாத இராணுவத்தின் பிடியில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது!

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் சிங்கள பயங்கரவாத 
இராணுவத்தின் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் குழியில் இறக்கப்பட்டு பின்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகின்றது.



இசிங்கள பயங்கரவாத இராணுவத்தின் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. உலகத் தமிழர்கள் ஓர்நாள் பதிலடி கொடுப்பார்கள் இது நிச்சயம்.



மே18 , 2009, ஒட்டுமொத்த தமிழகமும் அரசியல் தற்கொலை செய்துகொண்ட தினம்.

அரசியல் தத்துவங்களை வைத்து மயிர் பிளக்கும் வாதங்களை விவாதிக்கும் எவரும், வீரவசனங்கள் பேசும் எவரும், மனித நேயம் பேசும் எவரும், புரட்சி பேசும் எவரும் இந்திய அரசிற்கு எதிராக
 ஒரு கல்லைக் கூட எரியாமல் இந்தியாவிடம் சரணடைந்த தினத்தின் நினைவு நாள் இன்று.




தமிழீழத்தில் ஒடுக்கப்படும் செய்திகளை நாம் தினம் தோறும் கேட்ட போதிலும், தமிழகத்தின் செயலற்ற தன்மை இன்றளவும் மாறவில்லை.

கொலை களத்திற்கு இழுத்து வரப்படும் இசைப்பிரியாவின் படங்களைப் பார்த்து அமைதியாக கடந்து போவோரில் நானும் இருக்கிறேன் என்பதை அவமானத்துடன் ஒத்துக்கொள்கிறேன்.

நம்மை எல்லாம் நம்பி புலிகள் களத்தில் நிற்கவில்லை.

இசைப்பிரியாவின் முகத்தில், ”எவரேனும் நம்மை காக்க வருவார்களாஎன்ற எந்த ஒரு எண்ணமும் ஓடியதாக தெரியவில்லை.



சிறைப்பட்ட எவரின் முகத்திலும் அந்த எதிர்பார்ப்பு இல்லை.

விடுதலைக்காக வீரமரணத்தினை எதிர்நோக்கும் மனம் தான் அனைவரின் முகத்திலும் தெரிகிறது.

தமிழகத் தமிழர்களே! கட்சிக்கும், சாதிக்கும், மதத்திற்கும், சினிமாவிற்கும் விசுவாசமாக இருக்கும் நாம் என்று இவற்றினையெல்லாம் கடந்து சர்வதேசம் தொடுத்துள்ள இப்பெரும் போரினை எதிர்கொள்ளப் போகிறோம்?..




About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top