பிறப்பு - 06-07 -1980 மாவீரன் – 08-01-2007
கறுப்பும்
சிவப்புமாய………………………
அன்றை நாளில்
எல்லோரையும் போல்
அவனும் ஒரு-போராளி
நோயாளி-எனக்கு..!
மென்மையும் குறும்பும்
அவனது கண்களின்
கொடை!
வீரமும் துணிவும்
அவன்
இலட்சியப்பாதை!
தமிழும்-தன்
நாடும்-அவன்
உயிரின் மூச்சு!
ஊா் தூங்கிப் போன-
ஒர் நாளில்
குருதி குடித்திருந்த
கட்டுதுணியுடன்-
எம் மருத்துவ மனை
நுழைந்தான்………!!!
கூடவே
என் தோழனுமானான!்
ஈராறு தடவைகள்
வீரப்புண்கள் சுமந்தும்
மீள உயிர்வாங்கி
மீண்டவன் அவன்..!
சுடலைக் குருவியும்
துக்குறிகளும்-அவன்
துணிவு கண்டு
அஞ்சிப் போனது!
வௌவால்களும்
ஆந்தைகளும்
அலறத்தொடங்கிய
பொழுதொன்றை -மேவிய
சன்னங்களும்
இடப்பெயர்வுகளும்
தூங்கவிடாது
எழுப்பியது அவனை..!
விழுப்புண்ணின்
வேதனையை
நெஞ்சு மையத்தில்
ஒழித்தெழுந்து
பச்சை புண்
காயும்-முன்பே
சத்தமின்றி
ஒற்றை செருப்பை
தேடிப் பிடித்தான!்
விடிந்தும் விடியாத
காலைக் குளிரில்
விடை பெறுதலுடன்
நடக்க தொடங்கினான்..!
பின்னொரு நாளில்
சத்திர சிகிச்சை
அறையில் நுழைந்தது -
அவன்
இல்லாத செய்தி மட்டும!்
இப்பொழுது எனைத்
தேடி வந்த கடிதத்தில்
எழுதியிருந்தது
“நான் அவனது
அண்ணா
அவனைப் போலவே
நானும்”
கறுப்பும் சிவப்புமாய்…!!
-மிதாயா கானவி்
நன்றி!!!
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON