பகல் தூக்கம் என்பது பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் பலரும் செய்யும் விஷயம். ஆனால், பகல் தூக்கம் தவறான பழக்கம் என்று பலரும் கூறுவது உண்டு.மேலும் பகலில் தூங்கும் பெண்களை மாரடைப்பு, வலிப்பு நோய் உள்ளிட்டவை விரைவாக தாக்குவதாதாக அண்மையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பகலில் தூங்கும் பழக்கத்தை கொண்ட சுமார் 84 ஆயிரம் அமெரிக்க பெண்களிடம் விஞ்ஞானிகள் இந்த ஆய்வு மேற்கொண்டனர் என்றும் இந்த ஆய்வில், அந்த பெண்களிடம் இதய சம்பந்தமான நோய்கள் உண்டாவதற்கான அறிகுறிகள் இருமடங்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், இந்த ஆய்வு முடிவுக்கும் சம்பந்தமில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே இந்த பெண்களின் பகல் தூக்கம் குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிப்பது என்னவென்றால்,” பகல் தூக்கம் யாருக்கு நல்லது, யாருக்குக் கெடுதலைத் தரும் என்ற விபரங்களை ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது. உத்தராயணம் எனும் சூரியனின் வடக்கு நோக்கிய பாதையின் பயணத்தால் தமிழகத்தில் கோடையின் தாக்கம் நன்றாகத் தொடங்கிவிட் டது.
மனிதர்களுக்கு குளிர்ச்சியான பொருட்களின் மீது ஏற்படும் மோகத்தாலும், காற்றில் ஈரப் பதம் குறைந்துள்ள வறட்சியான நிலையாலும், பகல் நீண்டு இரவின் நேரம் குறைவதாலும், உடலில் வாயுவின் சில குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி போன்றவை அதிகரிப்பதால் தன் இருப்பிடங்களாகிய பெருங்குடல், இடுப்பு, தொடை, செவி, எலும்பு, தோல் ஆகிய பகுதிகளில் சீற்றம் கொள்கிறது.
ஆனாலும் வெளிக்காற்றில் உள்ள சூட்டினால் அந்த வாயுவானது உடலில் மற்ற பகுதி ளுக்குப் பரவுவதில்லை. அதனால் உடல் வலியை ஏற்படுத்தும் இந்த வாயுவின் சீற்றத்தை அடக்குவதில் பகல் தூக்கம் மிகவும் சிறந்தது. வீட்டில் கடுமையாக உழைக்கும் பெண்களைப் பொறுத்த வரை பகலில் தூங்குவது ஒரு சிறந்த வலி நிவாரணச் செயலாகவே அமைந்துள்ளது என்கிறார்கள்.எனவே, வீட்டில் அதிகாலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் கடுமையாக செய்யும் பெண்கள், பகலில் சிறிது நேரம் உறங்குவது நன்மையே தரும் என்றும் சொல்வவர்களும் உண்டு!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON