ஆனால், இந்தக் காலத்தில் ஆண்களைப் போலவே பெரும்பாலான பெண்களுக்கும் நெஞ்சு வலி வருவது சாதாரணமாகிவிட்டது. நெஞ்சு வலிதான் பெண்களைக் கொல்லும் முதல் எதிரி என்றும் கூறப்படுகிறது.
2012 இல் ரோஸி ஓ’டன்னல் என்ற பெண்ணுக்கு, மற்ற பெண்களுக்கு வருவதைப் போல “ஹாலிவுட் நெஞ்சு வலி” வரவில்லை. மாறாக, அவர் மார்பு மற்றும் கைகளில் வலி ஆகியவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் ஈரமாவது ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
இங்கு அப்படி பெண்களுக்கு மாரடைப்பு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில விசித்திரமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்
நெஞ்சு வலியால் அவதிப்படும் பெண்களில் 42% பேர் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாம். இது எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று வரும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் என்று கூறப்படுகிறது.
மேல் உடம்பு வலி
பொதுவாகவே நெஞ்சு வலி வரும் போது உடம்பின் மேல் பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. கழுத்து, பல், தாடை, முதுகு, கைகள் (குறிப்பாக இடது கை) மற்றும் தோள்பட்டை ஆகியவற்றில் வலி ஏற்படும். நரம்புகள் மூலம் இவற்றுக்கு இதயத்துடன் இணைப்பு இருப்பதால், நெஞ்சு வலி வரும் போது இந்த பாகங்களிலும் வலி ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி
இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்குத் தான் 2 மடங்கு அதிகம். நெஞ்சு வலி வரும் போது, இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் களைப்பு ஏற்படுகிறது. 515 பெண்களைப் பரிசோதித்ததில், அவர்களில் 70.7 சதவீதத்தினர் களைப்பால் அவதிப்பட்டனர். அதே போல், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் பிரச்சனைகள் வந்தன.
ஃப்ளூ காய்ச்சல்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் ஏற்படும். இதனால் அவர்களுக்குக் களைப்பும் வரும்.
குளிர் வியர்வை
பெண்களுக்கு மெனோபாஸ் வராத நேரத்தில் குளிர் வியர்வை ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அப்போது உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவது அவசியம்.
மார்பில் அழுத்தம், வலி
நெஞ்சு வலிக்கு இவை பெரிய அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவை கண்டிப்பாக ஏற்படும். இவை புதிதாக ஏற்பட்டால், நெஞ்சு வலி நிச்சயம் தான் என்று கூறலாம்.
லேசான தலை வலி, கிறுகிறுப்பு
பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலிக்கு இவையும் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதயத்துக்குப் போகும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது இவை ஏற்படும். ஒரு ஆய்வில், நெஞ்சு வலி வந்த பெண்களில் 39% பேருக்கு இந்த அறிகுறிகள் இருந்தன. சிலருக்கு வலிப்பும் ஏற்பட்டதாம்.
தாடை வலி
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு கூடவே தாடை வலியும் தொற்றிக் கொள்ளுமாம். இதயத்திலிருந்து செல்லும் சில நரம்புகளுடன் தாடைக்குத் தொடர்பு இருப்பதால் இது ஏற்படும். தாடை வலி தொடர்ந்து இருந்தால், அது பல்வலி தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இவ்வலி விட்டுவிட்டு வந்தால், நெஞ்சு வலி இருக்கக்கூடும்.
எரிச்சல்
நெஞ்சு எரிச்சல், கனமாக இருத்தல், அழுத்தமாக இருத்தல், இறுக்கமாக இருத்தல், பிழிவது போல இருத்தல் ஆகியவையும் நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் தான். இவை திடீரென்று வராது; தீவிரமாகவும் இருக்காது. சில வாரங்களுக்கு இருக்கும்; சில வாரங்களுக்கு இருக்காது. இந்த அறிகுறிகளுடன் கூடவே வயிற்றுப் போக்கும் இருந்தால், டாக்டரிடம் காண்பிப்பது நலம்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.