ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டில்.
இந்த அரண்மனையின் சிறப்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டில். அரண்மனை கட்டிடத்தோடு இல்லாமல் தனியாக அமைந்துள்ள ஒரு சதுர வடிவிலான ஒரு பெரிய அறை. அதைச் சுற்றிலும் காற்று வருவதற்கு வசதியாக மரத்தில் செய்யப்பட்ட அடைப்புச் சுவர்கள். அறையின் நடுவில் உயர்ந்த பீடம், அதன் மேல் தான் இந்தக் கட்டில் காட்சியளிக்கிறது. பீடத்தில் நான்கு தூண்கள், தூண்களின் மேல் கூரை, கூரையைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பூவேலைப்பாடுகள் இன்றும் தெளிவாகக் காட்சியளிக்கிறது.
ஆனால் இப்போது பெரிய தோட்டம் காடுபிடித்துக் கிடக்க அதன் நடுவே இடிந்துசரிந்து பாழடைந்து விசித்திரமான பேய் பங்களா போல இருந்தது அரண்மனை. இரணியல் அரண்மனை நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள் பொதுவாக அங்கே போவது இல்லை. அங்கே பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றும் இல்லைதான்.
இது பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை என்று சொல்லப்படுகிறது. பதினைந்து கடைசிக்காலத்தில்குலசேகர ஆழ்வார் தங்கியிருந்த அரண்மனை என்றும்சிலர் சொல்கிறார்கள் இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை போல மரத்தாலானதுதான். பிற்பாடு ஓடுவேயப்பட்டது. இருபதுவருடம் முன்பு கூட இது நன்றாக இருந்தது இதையும் எடுத்துக்கொள்ள கேரள அரசு விரும்பியது . தமிழக அரசு தரவில்லை. இப்போதோ. இங்கே விறகு தவிர ஏதும் இல்லை
அரண்மனையின் பூமுகத்தில் கருங்கல்லால் ஆன அஸ்திவாரம் மட்டுமே மீதி. உள்ளே கட்டிடத்தில் கூரையே இல்லை. மிகப்பெரிய தேக்கு உத்தரங்கள் வெறித்து துருத்தி நின்றன.அங்கணத்தில் கூரை சரிந்து இறங்கும் இடத்தில் அது ஏதோ பிரம்மாண்டமான சிலந்தியின் வலைப்போல இருந்தது. சுவர்கள் முழுக்க அமர இலக்கியங்கள், குகை ஓவியங்கள்.உள்ளேயெ தாவரங்கள் முளைத்திருந்தன. மாடிக்கு படிகள் உடைந்து கிடந்தது. ஆழமான மெளனம். வெளியே ஒரு இடிந்த குளம். அதற்குள் நூற்றாண்டுகளாக மாறாத நீர். அதில் இலையாட்டம் . ஏதோ புராதன மிருகத்தின் கண் போல. வழியில் ஒரு சிற்பத்தூண் கிடந்தது. 'இதுதான் நாம் கடைசியாக இந்த அரண்மனையைப் பார்ப்பதாக இருக்கும் ஒவ்வொரு நாளும் இது தேய்ந்து அழிந்து கொண்டு இருக்கிறது
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.