செக் குடியரசு நாட்டில், "செட்லெக்' என்ற
இடத்தில், ஒரு சர்ச் உள்ளது. இதை,
"சர்ச்
ஆப் போன்ஸ்' அதாவது, எலும்புகளால்
ஆன சர்ச் என்று அழைக்கின்றனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு, சர்ச் முழுக்க, ஒரு இடம் பாக்கி இல்லாமல், பல வடிவங்களில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து
செல்கின்றனர்
ஒரு காலத்தில், இந்த பகுதியில்,
தொடர்ந்து,
சண்டை நடந்து வந்துள்ளது.
அப்போது,
ஏராளமானோர் இறந்து போயினர்.
இறந்தவர்களை புதைப்பதற்கு, போதிய இடவசதி இல்லாமல்,
ஏற்கனவே புதைத்து,
மண்ணோடு மண்ணானவர்களின்
எலும்புக் கூடுகளை, வெளியே எடுத்து,
அந்த இடத்தில் இறந்தவர்களின் உடலை,
புதைத்தனர். எடுத்த எலும்புக்
கூடுகளை,
என்ன செய்வது என்று
யோசித்தனர். கை எலும்பு, கால் எலும்பு என,
தனித்தனியாக பிரித்து,
அவற்றை சர்ச்சுக்குள் அலங்கார
மணிகள் தொங்க விடுவதைப் போல், அழகுற அமைத்து விட்டனர்.
தொங்கு சர விளக்குகள், பக்கவாட்டு விளக்குகள்,
மதுக்கிண்ணங்கள்,
எலும்புகளை கடித்தபடி
இருக்கும் மண்டை ஓடு என, கற்பனையை இஷ்டத்துக்கு அழகுப்படுத்தி
விட்டனர்.
போரில், எவ்வாறெல்லாம் காயம்பட்டு இறந்திருக்க கூடும் என்பதை காட்டும் விதத்தில், எலும்புகளால் ஆன, கண் காட்சியையும் அமைத்துள்ளனர். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.
போரில், எவ்வாறெல்லாம் காயம்பட்டு இறந்திருக்க கூடும் என்பதை காட்டும் விதத்தில், எலும்புகளால் ஆன, கண் காட்சியையும் அமைத்துள்ளனர். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.
பிரான்டிசெக் ரின்ட் (František
Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார் பல
ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார். பிரான்டிசெக்
ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint) பொறித்து
வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது
ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும்
தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில்
ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில்
எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு
மிகுந்த, மக்கள்
விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள்
இங்கு அதிகமாக வருகிறார்கள்.
ஸ்க்வார்ஸென்பெர்க்
என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ
கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு
பாகங்கள், மண்டையோடுகள்
பிரித்துவைக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை
ஆன்டன் என்ற கிருத்துவர சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று
வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து, அவனது
முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது
தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால்
இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது
சரி... இவற்றை பார்த்தவர்கள் என்ன சொல்கின்றனர் என்று
பார்ப்போமா...
"அச்சமூட்டும் வகையில் உள்ள இந்த சர்ச்சுக்குள், ஒரு வித புல்லரிப்பு உணர்வுடன் சென்று வந்தோம்...' என்கின்றனர் சிலர்.
"அச்சமூட்டும் வகையில் உள்ள இந்த சர்ச்சுக்குள், ஒரு வித புல்லரிப்பு உணர்வுடன் சென்று வந்தோம்...' என்கின்றனர் சிலர்.
அங்கேயே தங்கி, வேலை பார்க்கும் பெண் அடித்த கமென்ட் என்ன தெரியுமா... "எனக்கு, இந்த எலும்பு கூடுகளை பார்த்தால், பயம் ஏற்பட வில்லை. நடமாடும் நிஜ மனிதர்களை கண்டால் தான், பயமாக இருக்கிறது...' என்கிறார்.
இந்த சர்ச், வாரம் ஏழு நாட்களும் திறந்திருக்கும். சர்ச்களில் வழக்கமாக நடைபெறும், பிரார்த்தனை கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 24, 25 தேதி மட்டும் மூடியிருக்கும்.
நன்றி
சுபாஷ் குமார்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON