Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வட்டக்கோட்டை பயணம் - Vattakottai
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனையில் அமைந்துள்ள ஓர்அழகிய படைத்தளக் கோட்டை தான் வட்டக்கோட்டை. குமரிமுனையிலிருந்துவடகிழக்காக 6 கி.மீ...


இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனையில் அமைந்துள்ள ஓர்அழகிய படைத்தளக் கோட்டை தான் வட்டக்கோட்டை. குமரிமுனையிலிருந்துவடகிழக்காக 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கருங்கல் கோட்டைமுகப்பில் RV என்ற எழுத்துக்கள் கொண்ட இரட்டை யானையும் சங்கும்பொறிக்கப்பட்டச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டை வட்டக் கோட்டைஎன்றாலும் வட்டமாக இல்லை. செவ்வக வடிவமாக காட்சித் தருகிறது. ஒருசெவ்வகத்தின் ஓரத்தில் இன்னொரு செவ்வகத்தைப் பொருத்திய வடிவம். அதன்மொத்தப்பரப்பு மூன்றரை ஏக்கர்.


முகப்பில் உயர்ந்த கற்சுவர்கள் 25 முதல் 26 அடி உயரத்தில் காட்சிஅளிக்கிறது. முன்சுவரின் அகலம் மட்டும் 29 அடி. மூலைகளில் 18 அடியும்பின்புறம் 6 அடி அகலத்திலும் கோட்டைச் சுவர்கள் அமைந்துள்ளன இக்கோட்டை பாசறையாக இருந்துள்ளது. படைவீரர்கள் எல்லையைக் காக்ககுதிரைப்படையுடன் தங்கி இருந்த அமைப்புகளைக் காணமுடிகிறது. சுற்றிலும்கோட்டை ஓரங்களில் ஓய்வு மண்டபங்கள், இடதுபுறம் கடைசி மூலையில் ஒருசாய்வான கல்தளமும் படிகளும் ஏறுகின்றன. அங்கு நீண்ட புல்தரைகாணப்படுகிறது.  அடுத்து அமைந்துள்ள கோட்டை சுவரை அடுத்து கடல்உள்ளது. கடலுக்குள் நீண்டு பரந்த மேடு இரண்டாவது செவ்வகப் பகுதி. கடலின்முழுப் பரப்பையும் கண்காணிக்கும் விதமாக கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.


கடலுக்குள் நீண்டு இருக்கும் இந்தக் கோட்டை கடலில் பயணம் செய்யும்கப்பல்களைக் கண்காணிக்க கூடியதாக உள்ளது. முற்காலத்தில் குமரி ஒருதுறைமுகமாகச் செயல்பட்டு வந்தது. இப்போதைய சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகமே அக்காலத் துறைமுகமாக விளங்கியுள்ளது. அதோடுமுத்துக்குளிக்கும் தொழிலும் நடைபெற்றுள்ளது. இந்த துறைமுகத்தைக்கண்காணிக்கும் விதமாகவும் கோட்டை அமைந்துள்ளது.


மன்னர் மார்த்தாண்டவர்மா (1729 - 58) திருவிதாங்கூர் அரசைஉருவாக்கியபோது கிழக்கு எல்லையான குமரி முதல் ஆரல்வாய்மொழிவரையிலான எல்லைப் பகுதி பாதுகாப்பற்றதாக இருப்பதை உணர்ந்துபடைத்தளபதி டிலனாய் மேற்பார்வையில் இந்தக் கோட்டைபுனரமைக்கப்பட்டது. ஆனாலும், இந்தக் கோட்டைப் பணி மார்த்தாண்டவர்மாவுக்கு அடுத்துவந்த ராமவர்மா மகாராஜா காலத்தில் தான் முடிவுக்குவந்துள்ளது. அதன் அடையாளம் தான் RV என்ற முகப்புச் சின்னம்.திருவிதாங்கூர் அரசர்களால் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட இந்த கோட்டைபாண்டியர் காலத்தைச் சார்ந்தது என்பதற்கு அடையாளமாக கல்மண்டபங்களில்மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.


இந்த கோட்டையில் ஒரு சுரங்கப் பாதை மூடிய நிலையில்காணப்படுகிறது. அது அங்கிருந்து பத்மநாபபுரம் வரை செல்கிறது என்று கதைவிடுபவர்கள் இருக்கிறார்கள். கோட்டைக்கு வெளியே இரகசியமாகச் செல்லஅமைக்கப்பட்ட இரகசிய வழியாகவே அது இருந்திருக்கும். அகழ்வாய்வுசெய்துப் பார்த்தால் உண்மை தெரியவரும். கோட்டையினுள்ளே ஆறு அடிஅகலத்தில் ஒரு கிணறு தூய தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிது.


இது கோட்டையின் உள்பகுதி இங்க தெரியுற இந்த குளம் போன்ற நீர்தேக்கமும்அருகில் ஒரு கிணறும் இருக்கு பார்த்தீங்களா!அதுதான் இங்கே தங்கி இருந்த ராணுவ அதிகாரிகளுக்கும் படைகளுக்கும் தண்ணீர் தேவைகளுக்கு உபயோகப்படுத்தி இருக்காங்க.


இந்தக்கோட்டையின் சில பாகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கு. கடலரிப்பை தாங்கும் வண்ணம் பெரிய பெரிய கருங்கற்களால் ஆன பாறைகள் கோட்டையை சுற்றி அரணாக போடப்பட்டிருக்கு.

கோட்டையின் இருபக்கமும் சுற்றுலா வருபவர்கள் கோட்டையை சுற்றி உள்ள கடற்கரையில் ஆனந்தமாக நீராடிகொண்டு இருக்காங்க. உள்ளே இருந்து பார்க்கும் கோட்டையின் வளைந்த வட்டவடிவிலான சுவர்கள் பின்னணியில் மலைகள் அழகாக காட்சியளிக்குது.

அழகாய் வடிவமைக்கப்பட்ட உட்புறம்...கோட்டையினுள் இருந்து பார்க்கும் போது கடல் பரப்பு அழகாக தெரியுது. இந்த இடத்தில்தான் தளபதி டி லானாய் நின்று அதிகாரம் செய்து இருப்பார், அந்த இடத்தில் நாமும் நிற்கிறோம்ன்னு நினைக்கும் போதே உடல் புல்லரிக்குது.


நுழைவாயிலின் பக்கத்தில் கோட்டையின் ஆயுத கிடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பீரங்கி குண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு.

1809 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்தப்போது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுட்டாங்க. கோட்டை தங்கள் வசம் வந்ததும் கோட்டைடைகளை அழித்து ஆமணக்கு விதைகள் விதைத்து மண்ணோடு மண்ணாக்கி விடுதை வழக்கமாக கொண்டிருந்தாங்க ஆங்கிலேயர்கள்.  அதிலிருந்தெல்லாம் தப்பி இன்று கம்பீரமாக காட்சியளிக்குது இந்த கோட்டை. கோட்டையின் பராமரிப்பு இப்ப இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சித் துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கு. அவர்கள் நன்கு பரமறிக்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கோட்டை திறந்திருக்கும்

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top