Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: எண்டோ சல்ஃபான் - Endo Sulfan
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
அ ருமை நண்பர்களே!!! 'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’   என்னும் அதிபயங்கரமான பூச்சிக் கொல்லி மருந்தைப்பற்றி அறிவீர்கள் தானே?!!! .இ...
ருமை நண்பர்களே!!!

'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’  என்னும் அதிபயங்கரமான பூச்சிக் கொல்லி மருந்தைப்பற்றி அறிவீர்கள் தானே?!!!



.இந்த பூச்சிக்கொல்லி மருந்து உலகின் 81 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. நார்வே நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், கடந்த மாதம் நடந்த உலக சுகாதார மாநாட்டில், 2012 மத்தியில் எண்டோ சல்ஃபானுக்கு உலக அளவில் தடை விதிக்கத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் மக்கள் விரோத போக்குடைய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடைசெய்ய ஆனவரை சுணக்கம் காட்டி வருவது தான் கண் கூடு. 

லகே வெறுத்து ஒதுக்கும் இம்மருந்தை  இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்   உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்து இருக்கிறார்கள்,ஆனால் தீர்ப்பும் அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு சாதகமாக வருமா?!! அல்லது பூச்சி மருந்து முதலாளிகளுக்கும், அவர்களிடம்  கையூட்டு பெற்று வயிற்றை கழுவும் அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக வருமா?!!! என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

ண்டோ சல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனத்தை முந்திரி, பருத்தி, புகையிலை உள்ளிட்ட பணப் பயிர்களை தின்று அழிக்கும் சிறியவகைப் பூச்சிகளை கொல்ல அதிகம் பயன்​படுத்துகிறார்கள். 1950-ல்  அமெரிக்காவில் அறிமுகப்​படுத்தப்பட்ட இந்த பூச்சிக் கொல்லி, 1970-ல் இந்தியாவுக்கு வந்தது. இங்கு நிரந்தரமாக தங்கிவிட்ட இம்மருந்து நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலைகளையும் திறந்தது ,இங்கே ஆண்டுக்கு 8,500 டன் எண்டோ சல்ஃபான் உற்பத்தி செய்யப்பட்டு 4,000 டன் வெளிநாடுகளுக்கும் செல்கிறது, எஞ்சியது இந்தியாவுக்குள்ளேயே சந்தைப்படுத்தப்படுகிறது . கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரிக் காடுகள் அதிகம். இங்கு ஹெலிகாப்டர் மூலம் இந்த மருந்தைத் தொடர்ந்து முந்திரிப்பண்ணை முதலாளிகள் தெளித்து வந்ததில், இதுவரை 400க்கும் பேருக்கு மேற்பட்டோர் கொடூரமாக இறந்து விட்டார்கள்.

து மனித உடலுக்குள் போய்விட்டால், முதலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வலிப்பு, நடை தடுமாற்றம், மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, நினைவு இழத்தல் எனத் தொடங்கி இறுதியில் கோமா நிலைக்குக் கொண்டுபோய்விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் எட்டு வாரங்களிலேயே இது கருவைப் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பதில் சிக்கலை உண்டாக்குவதால், ஆண் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி பெண் சுரப்பிகளை அதிகப்படுத்தும். அதனால், பிறக்கும் ஆண் குழந்தைகள்கூட அதிகப் பெண்மைத்தன்மையுடன் இருப்பார்கள்.

ந்த பகுதியில் நிறைய குழந்தைகள் விகாரமாக பூசணிக்காய் அளவு கொண்ட பருத்த தலையுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு தைராய்டு ஒழுங்காக இருக்காது. இன்சுலினும் சுரக்காது. வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு விரைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். இவர்களுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டு பிறவியிலேயே இவர்கள் பார்வையும் இழக்க நேரிடும். 

பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் இந்த பூச்சிக்கொள்ளியின் வீரியம் பிறக்கும் குழந்தைகள் மீது தொடுக்கும் வெறியாட்டம்   சொல்லி மாளாது மேலே உள்ள படங்களே காண்போருக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். இதனால் எண்டோ சல்ஃபானுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரி, ஆளும் மார்க்சிஸ்ட்களே கேரளத்தில் தொடர்ந்து போராடுகிறார்கள்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், சொர்க்கா என்ற கிராமத்தில்  நிறைய குழந்தைகள்  எண்டோ சல்ஃபானின் வீரியத்தால் பாதிக்கப்​பட்டு பிறக்கும்போதே குருடாகப் பிறக்கின்றனர்.

நான்கு வயதான நிறைய குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பை வயிற்றுக்கு வெளியே தொங்கியபடி இருக்கிறது. 20 வயதான நிறைய இளைஞர்கள் வலிப்பு நோயினால் பீடிக்கப்பட்டு  வாழ்கையையே தொலைத்துவிட்டு கிடக்கிறார்கள். 28 முதல் 30 வயதுகளிலுள்ள  நிறைய பேர்களுக்கு, நான்கு வயது குழந்தைக்கான மன வளர்ச்சிகூட இல்லை. மனித உடலில் கலக்கும் எண்டோ சல்ஃபான் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் ஈரல் மூலம் வெளியேறுவதால், அவையும் பாதிக்கப்பட்டு இதயம் பலவீனமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.



பொது நல வழக்குத் தொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்'' எண்டோ சல்ஃபானுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து கேரள அரசு இதுவரை 11 கமிட்டிகளை நியமித்தும், இந்த பூச்சிக்கொல்லியை தடை செய்ய முடியவில்லை. எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படும் உற்பத்தி ஆலைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து இருக்கிறார்கள். ஆனாலும் இம்மருந்து  நீக்கமற எல்லா ஊர்களிலுமே விற்கப்படுகிறது, கேரளாவின் தட்பவெப்ப நிலையால் இம்மருந்தின் வீர்யம் சொல்லொனாத்துயரை இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொறுப்பது ஆகாது என்னும் அயற்சியும் கோபமும் பகுதி மக்களிடையே ஒருசேர ஏற்பட்டதால் தான்  நீதிமன்றத்தை மக்கள் அணுகி இருக்கின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெரும்பாலான மாநிலங்களும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்...'' என்றார்.

ண்டோ சல்ஃபான் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு  குணப்படுத்தும் மருந்துகள் இல்லவே இல்லை என்பது மற்றொரு துயரம்,திருடனாய் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும், அது போல கறை படிந்த அரசியல் வாதிகள், இனியேனும் மக்களை சோதனைச்சாலை எலியாக மாற்றி விளையாடாமல் இருத்தல் வேண்டும்,இந்தியாவில் இன்னொரு போபால் விஷவாயு சம்பவம் போன்றதோர் பேரிடர் வேண்டுமா?!!!, பாரதத்தில் நூற்று இருபது கோடி மக்கள் இருக்கிறார்களே அதில் ஐந்து ஆயிரம் பேர் செத்தால் ஒன்றும் குடி முழுகிபோய்விடாது என்னும் மெத்தனப்போக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சியாளர்களிடையே மறையவேண்டும், மக்களாகிய நாமும் அது கேரளத்து மக்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்துக்கு கேடு வருகையில் பார்த்துக் கொள்வோம் என்று பாராமுகம் காட்டாமல், இதை கண்டித்தும் எதிர்த்தும் ஃபார்வர்டு மெயில்களும், ஃபேஸ்புக்குகளில், ட்விட்டர்கள், பஸ் போன்ற ஊடகங்களில் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் வரவேண்டும்.செய்வீர்களா?!!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top