வேளாங்கண்ணி தமிழர்களிடை உள்ள மரியன்னை திருயாத்திரைத் தலங்களில் தலைசிறந்ததாக விளங்குகிறது. நாகைபட்டினத்திற்கருகே உள்ள இத்திருத்தலம் பிரான்சிலுள்ள லூர்த்து அன்னை, போர்த்துக்கல்லில் உள்ள பற்றிமா அன்னை போன்று பல இலட்சம் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய ஆலயமகா இன்று திகழ்கிறது. ஆயினும் தமிழர்களிடை கிறிஸ்தவத்திருமறையை முதலில் எடுத்து வந்த தத்துவபோதக சுவாமிகள் எனப்பட்ட றெபேர்ட்டு நோபிலி (1577-1656) மதுரைக்கு வருவதற்கு முன்னரே இவ்வாலயம் நிறுவப்பட்டிருந்துள்ளமை முக்கியமான வரலாற்றுத் தகவலாக உள்ளது. ஆயினும் இவரது நோக்கு கிறிஸ்தவ சமயக் கருத்துக்களைத் எழுதிய போதிலும் அவற்றில் கிறிஸ்தவ ஆலயங்கள் குறித்த விபரங்கள் எதனையும் தரவில்லை.
பின்னர் தைரியநாதர்; எனத் தமிழ்ப் பெயர் தாங்கி இன்று வீரமாமுனிவரெனப்படும் யோசப் பெஸ்கி (1680-1747) பூண்டிமாதா ஆலயத்தினை நிறுவி அங்கிருந்து திருக்காவலூர் கலம்பகம் தேம்பாவணி போன்ற அற்புதமான மரியன்னை புகழ்பாடு இலக்கியங்களைப் பாடிய பொழுதிலும் வேளாங்கண்ணி அன்னை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
வேளாங்கண்ணியில் அன்னாப்பிள்ளைத் தெருவில் உள்ள குளக்கரையில் பால் சுமந்தவண்ணம் தன் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம் கையில் குழந்தையுடன் தோன்றிய அழகிய பெண் ஒருவர் கையிலுள்ள தன் குழந்தைக்குப் பால் கேட்டாள். பாலைக் கொடுத்தால் பால் குறைந்து முதலாளிக்குப் பதில் சொல்ல வேண்டி வருமெனக் கலங்கினான் அச்சிறுவன். ஆனாலும் அந்தத் தாய்மையின் குரலுக்கு அடிபணிந்து பாலைக் கொடுத்து விட்டு தன் முதலாளி இல்லத்திற்குச் சென்றான் அச்சிறுவன். முதலாளி இடத்தில் தான் பால் கொடுத்ததைச் சொல்லி பால் குறைந்துள்ளதெனவும் கூறினான். முதலாளி பால் அண்டாவினைத் திறந்து பார்த்ததுமே பால் தானாகவே பெருகி வழிந்தோடத் தொடங்கியது. இதனால் அதிசயமுற்ற முதலாளியும் ஊராரும் அந்தப் பெண் பால் கேட்ட மரத்தடியில் அந்தப் பெண் அன்னை மரியாள் போல் இருந்ததினால் அன்னை மரியாளுக்கான வழிபாட்டை ஊரவர் தொடங்கியதாக ஒரு மரபு.
இயலாமை நீக்கிய அன்னை மரியாள்
காலிலாச் சிறுவனோ எழுந்து மோர் கொடுக்கத் தன்னால் இயலாது அருகே வந்து வாங்கிப் பருக்கும் படி சொன்னான். அப்பெண்ணோ எழுந்து தா என்றாள். வார்த்தை கொடுத்த அழுத்தத்தில் எழுந்து அடியெடுத்து நடந்து மோரைக் கொடுத்தான் அச்சிறுவன். கால் இயலாத சிறுவன் காலடி எடுத்து வைத்து நடத்தல் கண்டு அதிசயித்த அவ்வூரார் அவ்விடத்தில் மரியன்னைக்கு ஆலயம் அமைத்தனர் என்பது மற்றொரு நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறாக அந்த மரத்தடியில் தொடங்கிய மரியன்னை ஆலயம்தான் போர்த்துக்கேயர்களின் கப்பல் புயலுக்குக் கரை ஒதுங்கிய பொழுது அவர்களால் கோயிலாக்கப்பட்டுப் பரிணாம வளர்ச்சியில் இன்றைய வேளாங்கண்ணிப் பேராலயமாகத் திகழ்கிறது.
ன் தமிழகத்தின் வேளாங்கண்ணி தமிழீழத்தின் மருதமடு ஆகிய பகுதிகளில் போர்த்துக்கேயர் வணிக நோக்கில் வருவதற்கு முன்னரே மரியன்னையின் அருஞ்செயல்கள் திருவுருவங்கள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடற்கரை நோக்கிச் செல்லும் காட்டுப் பகுதிகளில் மக்களால் பேசப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளன. இவ்வாறு இப்பகுதிகளில் இருந்த முன்னைய திருவுருவங்கள் புயலுக்கு கரை ஒதுங்கியும் புது வணிகம் தேடியும் வந்த போர்த்துக்யேரால் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது முதற்கட்ட வரலாறு.
போர்த்துக்கேயக் கப்பல்கள் வணிகப்பாதை தேடிப்புறப்பட்ட அதே நேரத்தில் அவர்கள் செல்லும் கடல் வழிப்பயணம் ஆபத்துக்கள் நிறைந்தன என்பதாலும் பல கப்பல்கள் கடலிலேயே சங்கமமாயினதாலும் மிக நீண்டநாள் பயணமாக இருந்ததாலும் கப்பலில் வழிபாடுகள் நிகழ்த்துவதற்கு அவர்களுடன் கத்தோலிக்கக் குரு ஒருவரையும் கப்பலில் அனுப்புதல் வழமையாயிற்று. அதே வேளை மன்னன் ஸ்பெயினை மேற்குலகில் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கான பொறுப்புள்ள நாடாகவும் போர்த்துக்கல்லின் லிஸ்பென் நகரத்தை உலகெங்கும் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கான தலைமைப் பங்காகவும் அறிவித்து அதற்கான எல்லா உதவிகளையும் அளித்து வந்தான். இந்தப் பின்னணியில்தான் போர்த்துக்கேயர்கள் தாம் சென்ற நாடுகளில் கத்தோலிக்க ஆலயங்களை அமைத்தனர்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.