ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது.
கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலாத் துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.
அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலைப் பகுதியை அடைகிறது.
இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன.
நாஞ்சில் நாடு
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.