† இன்றைய புனிதர் †
( மார்ச் 10
)
✠ புனித யோஹானஸ் ஒகில்வீ ✠
( St. John Ogilvie )
மறைசாட்சி :
பிறப்பு : 1579
டுரும்நகெய்த் (Drumnakeith),
ஸ்காட்லாந்து
இறப்பு : 10 மார்ச் 1615
கிளாஸ்கோவ் கிராஸ் (Glasgow
Cross), ஸ்காட்லாந்து
அருளாளர் பட்டம் : 1929
புனிதர் பட்டம் : 17 அக்டோபர் 1976
திருத்தந்தை 6 ஆம் பவுல்
நினைவுத் திருநாள் : மார்ச் 10
பாதுகாவல் : எய்ட்ஸ் நோயாளிகள், இளைஞர்கள்
புனித யோஹானஸ் ஒகில்வீ, உயர்தர குடும்பத்தில் 'வால்ட்டர் ஒகில்வீ' (Walter Ogilvie) என்பவரின் மூத்த மகனாகப்
பிறந்தவர். இவர் பன்னிரண்டு வயதிலேயே கல்வி கற்பதற்காக பிற கண்டங்களுக்கு
அனுப்பப்பட்டார். இவர் மிகத் திறமையானவர். யோஹானஸ் தனது 17 வயதிற்குள்ளேயே ஏராளமான கத்தோலிக்க
பள்ளிகளில் படித்து பட்டம் பெற்றார். தனது 17ம் வயதில் கத்தோலிக்க விசுவாசத்தில் திளைத்தார். இவர்
திருத்தந்தையர்கள் கற்கும் பள்ளியில் சேர்ந்து தனது துறவற பயிற்சிகளைப் பெற்றார்.
பின்னர் 1599ல் இயேசு
சபையில் சேர்ந்தார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகள்
கிராஸ் (Graz), ஆஸ்திரியா (Austria)
நாடுகளில் மிக முக்கிய பணிகளுக்கு
பொறுப்பேற்றார். 1610ம் ஆண்டு
பாரிஸ் நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு மீண்டும் தன் தாய்நாடான
ஸ்காட்லாந்திற்கு திரும்பினார்.
அதன்பிறகு எடின்பூர்க் என்ற இடத்தில் வழக்கறிஞர் பணியாற்றிய
ஒருவரின் மகனுக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார். இவர் கத்தோலிக்க விசுவாசத்தை
கண்ணும் கருத்துமாக இருந்து பரப்பினார். இதனால் பலமுறை சிறைபிடித்துச்
செல்லப்பட்டார்.
இவர் 1614ம் ஆண்டு
கிளாஸ்கோவில் மறை பரப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் சிறைபிடித்து
செல்லப்பட்டார். கத்தோலிக்க விசுவாசத்தை கைவிடும்படி வற்புறுத்தப்பட்டார். ஆனால்
இவர் அவ்விசுவாசத்தில் சிறிதும் தளராமல் சிறையிலும் போதித்தார். இதனால் இவர்மீது
பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்க ஆணை பிறப்பிக்கபட்டது. அவ்வாணையின் பேரில் இவர்
தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இவர், தான் இறக்கும்போதும் கடவுளை வழிப்பட்டு விட்டு மரித்தார்.
செபம் :
தேர்ந்து கொண்டவரோடு உடன்படிக்கை
செய்து கொண்ட எம் இறைவா! தனது இறுதி மூச்சுவரை உம்மீது கொண்ட இறை விசுவாசத்தில்
சிறிதும் தளராமல் உம்மை பற்றிக்கொள்ள புனித யோஹானசிற்கு அருள் கூர்ந்தீர். அவர்
கொண்ட அவ்விசுவாசத்தை நாங்களும் எம் வாழ்வில் பிரதிபலிக்க செய்தருள வாய்ப்பளிக்க
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம், ஆமென் †
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.