( மார்ச் 12 )
✠ புனித ஃபீனா ✠
( St. Fina )
அருட் கன்னி :
பிறப்பு : 1238
சான் கிமிக்னானோ (San Gimignano), இத்தாலி
இறப்பு : 12 மார்ச் 1253
சான் கிமிக்னானோ (San Gimignano), இத்தாலி
பாதுகாவல் :
மாற்றுத் திறனாளிகள், நெசவாளர்கள்
நினைவுத் திருநாள் : மார்ச் 12
புனித ஃபீனா, ஓர் இத்தாலிய குடும்பத்தில் பிறந்த பெண். இவரது பெற்றோர், காம்பியோ சியார்டி மற்றும் இம்பீரியேரா (Cambio Ciardi and Imperiera) ஆவர். ஒருவேளை உணவு கூட வயிறார உண்ணமுடியாத அளவிற்கு ஏழ்மையாக வாழ்ந்தவர். அவ்வாறு இருந்தபோதிலும், தன்னிடம் உள்ள உணவில் சிறிதளவை மற்ற ஏழைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தார்.
இவர், அதி தூய கன்னி மரியிடன் தீவிர பக்தியுள்ளவர். தமது வாழ்நாளில், திருப்பலிக்காக ஆலயத்திற்குச் செல்வதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்வார். இவர் பிறரிடம் தீவிர அன்பு செலுத்துபவராக அறியப்படுகிறார்.
1248ல் இவர் பெரும் நோயால் தாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். தாங்க முடியாமல் நோயால் துடித்தபோதும், பொறுமையை இழக்காமல், இறைவனை இறுக பற்றி வாழ்ந்தார். தான் படும் வலிகளை இறைவனுக்காக அனுபவிக்கிறேன் என்று புன்னகையோடு ஏற்றார். இவரது இந்த தீவிர விசுவாசம் இவரது வேதனைகளை குறைத்தது.
இவரது இறப்பை முன்னறிவிக்க புனித பெரிய கிரகோரி தோன்றியது, பெரும் அதிசயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Tomb of st. fina
இவர் இறந்த பிறகு சான் கிமிக்னானோவில் இருந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அப்பேராலயத்தின் அருகில் இவர் பெயரில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
செபம் :
மருத்துவர் நோயற்றவர்க்கு அன்று, மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களை ஆசீர்வதியும். புனித ஃபீனாவைப் போல தங்களின் வலியிலும் உம்மை பற்றுக்கொண்டு, பொறுமையைக் கடைபிடிக்க செய்தருளும். நீரே குணமளிப்பவராக இருந்து, உமக்கு விருப்பமானால் நோய்களை குணமாக்கி நலமளித்திட வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.