† இன்றைய புனிதர் †
( மார்ச் 13 )
✠ புனித செவில் நகர் லியாண்டர் ✠
( St. Leander of Seville )
பேராயர் :
பிறப்பு : 534
கார்டாகெனா (Cartagena), ஸ்பெயின்
இறப்பு : 13 மார்ச், 600
செவில் (Seville), ஸ்பெயின்
நினைவுத் திருநாள் : மார்ச் 13
புனித லியாண்டர், உரோமையர் ஒருவரின் உயர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சகோதரர் புனித இசிதோர் (St. Isidore of Seville). இவரது அனைத்து சகோதரர்களும் புனிதர்கள் ஆவர். லியாண்டர் புனித பெனடிக்ட் சபையில் சேர்ந்த முதல் குரு ஆவார். இவர் அரசர் மகன் ஒருவனுக்கு ஆலோசகராக இருந்தார். அரசரின் மகனின் உதவியுடன், அந்நாடு முழுவதும் விசுவாசத்தை பரப்பினார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளில் இறைவார்த்தையை எடுத்துரைத்தார். பிறகு திருத்தந்தை பெரிய கிரகோரி அவர்களின் நட்பைப் பெற்றார்.
இவர் ஏறக்குறைய 583ம் ஆண்டில் செவிலா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் தன் மறைமாவட்ட மக்களை கிறிஸ்தவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்தவ விசுவாசத்தில் வளரச் செய்தார்.
செபம்
:
உலகை படைத்து பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! உம்மை இவ்வுலகில் பறைசாற்ற, பலவிதங்களில் பணியாற்றிய உம் இறையடியார்களை நினைவுகூறும். உமக்கெதிராக செயல்படும் மக்களை ஆசீர்வதியும். உம் மக்களை நீர் ஆசீர்வதியும். தூய ஆவியால் நிரப்பியருளும். உம்மேல் அன்பும் அக்கறையும் கொண்டு வாழச் செய்தருளும், ஆமென் †
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.