இன்றைய புனிதர் ஜூலை 25 செபதேயுவின் மகன்
புனிதர் யாக்கோபு திருத்தூதர்
(St. James, son of Zebedee) Apostle
திருத்தூதர்
மற்றும் மறைசாட்சி : (Apostle and martyr)
பிறப்பு
: கி. பி. 1ம் நூற்றாண்டு பெத்சாயிதா, யூதேயா, ரோம (Bethsaida, Judaea, Rome
இறப்பு
: கி. பி. 44 ஜெருசலேம், யூதேயா, ரோம பேரரசு (Bethsaida, Judaea, Roman Empire)
முக்கிய
திருத்தலங்கள் : சந்தியாகு டி கம்போஸ்டேலா பேராலயம், கலீசியா (ஸ்பெயின்), புனித ஜேம்ஸ் பேராலயம்,
ஜெருசலேம், ஆர்மேனியன் குவார்ட்டர் (இஸ்ரயேல்) (Cathedral of Santiago de Compostela, Galicia (Spain), Cathedral of St. James,
Jerusalem, Armenian Quarter (Israel)
நினைவுத்
திருவிழா : ஜூலை 25
Jesus calling to James
செபதேயுவின்
மகன் யாக்கோபு, (James, son of Zebedee) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு
திருத்தூதர்களுள் ஒருவர் ஆவார். முதன்முதலில் மறைசாட்சியாக மரித்த திருத்தூதர்
இவரேயாவார் என்று மரபுகள் கூறுகின்றன. இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர்
(Zebedee and Salome). இவர் திருத்தூதரான புனித யோவானின் (John the Apostle)
சகோதரர் ஆவார். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து (James, son of Alphaeus)
இவரைப் பிரித்து காட்ட, இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும்,
“இயேசுவின் சகோதரர் யாக்கோபு” (James the brother of Jesus) என்றும்
அழைக்கப்படுகின்றார்.
Santiago de compostela cathedral galicia spain
யாக்கோபு,
இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி
நூல்களின்படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு
பெறும்போது தங்களின் தந்தையோடு கடற்கரையில் இருந்தனர். இயேசுவின் தோற்றம் மாறியதை
(Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார்.
சமாரியர்கள்
இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபுவும் யோவானும் இயேசுவிடம், “ஆண்டவரே,
வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று
கேட்டார்கள்.
அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். திருத்தூதர் பணிகள் 12:2ன்படி ஏரோது அரசன், யாக்கோபுவை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.
அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். திருத்தூதர் பணிகள் 12:2ன்படி ஏரோது அரசன், யாக்கோபுவை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.
இவர்
ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள
சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக
இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயற்சி புனித யாக்கோபுவின் பாதை என
அழைக்கப்படுகின்றது. இப்பக்தி முயற்சி நடுக்காலம் முதல் பல இடங்களில்
இருப்பவர்களிடம் பரவியது.
Santiago de compostela cathedral galicia spain interier
இவரின்
நினைவுத் திருவிழா நாள் ஜூலை மாதம், 25ம் நாளன்று, கத்தோலிக்க திருச்சபை,
ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில்
கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் ஏப்ரல் மாதம், 30ம் நாளன்று,
கொண்டாடப்படுகின்றது.
Santiago de compostela cathedral galicia spain interier
ஸ்பெயினில்
: பாரம்பரியப்படி கி.பி. 40ம் ஆண்டு, ஜனவரி மாதம், இரண்டாம் நாளன்று, இவருக்கு
ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக் கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி
கிடைத்ததாகவும், அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும்
நம்பப்படுகின்றது.
Tomb of St.James santiago de compostela cathedral galicia spain
மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம்
அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள்
இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே
இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON