அகத்தே,
அகத்தீசனுன்டு அது
ஆதிசித்தன் தேசமென்றும்
அவ் தேச செல்லு வழியில் மய்யத்தே....
நந்தீசரும் வீற்றிருப்பார்..
வணங்கி செல்.
மீதி கிணற்றையும் தாண்ட வைப்பார்..
என்று
சகலருக்கும்......
சாமான்யர்க்கும்......
சத்திரியர்க்கும்.......
அசுரர்க்கும்......
ஊன் பாதையில்
ஒரு பாதைக் காட்டி...
சிந்தையில்
சித்த மார்கத்தை நிறுவி
மார்கத்தில் சென்றவர்களை
மார்கண்டேயர்களாக்கியவரே ........!!!
உம்மால் தான்...
சித்த மார்க்கம் .!
உம்மால் தான்.....
பதிணென்பர்!
உம்மால் தான்
சீவனை சிவனாக்கினர்!
உம்மால் தான்......
சகலரும் சித்தர்ஆனர்.
உம்மால்தானே......
தத்துவமும்.....
தற்பரமும்.......
தாரணையும்.....
தந்திரமும்.....
அட்டமாவும்.....
ரச வாதமும்......
சித்த மூலிகையும்...
தமிழ் சொத்தானது!!!!
பதினென்பரின் மூத்தவரே
பர வெளி காட்டியவரே....
ஆதி சித்தரும்
ஆதி சத்தியும்
கணபதிநாயரும்
மகான் சுப்ரமணியரும
ஓர் குடும்பம் என்றும்
இல்லறத்தில்
சித்த மார்க்கத்தையும்
சித்த மார்கத்தில்
இல்லறத்தையும்...இணைத்து
சன்மார்க்க சங்கம் வழங்கியவரே!
தமிழ் தந்த சித்தரே.....
தமிழை சித்தத்தோடும்
சித்தர்களோடும்......
சிவனோடும்.......
சத்தியோடும்.......
சிவகுமாரர் யோடும்..
சீவனே என்றும்
தமிழே சித்தம்.....
தமிழிலுள் உள் கடந்தால்
ஊன் உயிர்ப்பாகலாம்....
என்று
தென்கோடியை சமன் செய்து......
சகலருக்கும் சிவத்தை சமம் செய்தவரே!
ஆசான் அகத்தியரே போற்றி!
ஆசான் அகத்தீசரே
போற்றி!
கும்ப முனியே போற்றி!
குரு மனியே போற்றி!!
செந்தமிழ்ச்சேர் சித்தர் பதினெண்பர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தையணியாய் சேர்த்தி வாழ்வாம்.....!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.