போகர் (Bogar, Boyang
Wei) பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும்,
தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டில்
பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று தமிழர்களால் நம்பப்படுகிறது. இவரது காலம்
கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவர்
நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின்
சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி சித்தர், கருவூரார்
சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில்
அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக
சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற
குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும்
நமக்கு கிடைக்கப்பெருகின்றன.என்றால் அவர், போகர்தான். அகத்தியர், இவரைத்தான் முதல்
சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.
அதன்பின் இவர் புகழ்
பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச்
சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே,
தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார். அண்டை நாடான சீன தேசமும்,
நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள்
கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே
வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின்
போகர் அவருடைய சீடருடன் மலை உச்சியில் நுட்பமான அமுதம் ஒன்றினை தயாரிப்பதாய்
பலவித அனுபவங்களால்
பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே
முக்தியும் அவருக்குக் கிட்டியது. பழனி முருகனின்
மூலத்திருவுருவச் சிலை போகரால் நவபாடாணங்களை கொண்டு உறுவாக்கப்பட்டது.
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி - மூலவர் திருவுருவச்சிலை
சித்தர் போகர் ஜீவசமாதி பழனிமலை
இவரை பற்றிய ஒரு தகவலை
அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து
அவர் பறந்ததையும் தெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார். அது மட்டும் அல்ல 1926 ஆம்
பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும்
கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறார். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன்
கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை.
போகர் என்றால்
‘நவநாயகர்’ என்றும் கூறலாம்.
அகஸ்திய முனிவர் போக
சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர்
சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும்
அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில்
வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய
வரலாறு பேசப்படுகிறது.
பதினெண் சித்தர் வரிசை
தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின்
யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த சஞ்சாரம் செய்யும் ஒரு
வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள்
ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.
போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு
பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன்
பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும்,
வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச்
சாதாரணமாகியது.
சித்தபுருஷர்கள்,
போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு
கொண்டு, ‘அமிர்தமணிப்பழம்’ என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி,
அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க
பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே
இங்குள்ளோர் காலத்தை
வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின்
பிணியாகிய ‘பசி, தாகம், மூப்பு’ என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.
இப்படி படிப்படியாக
முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க
மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது?
அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின்
வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும்
வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்?
எவ்வளவு முயன்றும்
அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை? இப்படிப் பலவித
கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத்தெரியாமல் வாழ்ந்து
விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர்,
மனித சமூகத்தை
காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை
ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் ‘போகர் ஏழாயிரம்’, போகர்
நிகண்டு, 17000
சூத்திரம், 700 யோகம் போன்றவை. இவர் உள்ளத்தில் மனித
சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.
அதேசமயம், இவருக்கு
எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை
எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க
முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே
வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி
ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி
பின்பு அதை கைப்பற்றி
காட்டினார். அந்த மந்திரம், தம்பணா
மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர்
தம்பணா மந்திரத்தை
மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.
வழக்கமாகியது.
போகர் சீன தேசத்தில்
"போயாங் வேய்" என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் கிழக்கு ஹான் ஆட்சிக்
காலத்தில் (கி.மு. 167 - கி.மு.147) வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெருகின்றன.
சீனாவின் கிழக்கு யின் ஆட்சிகாலத்தில் வாழ்ந்த சீன அறிஞரும், எழுத்தாளருமாகிய
"ஜி ஹாங்" (கி.பி 283 - கி.பி 364) என்பவர் இயற்றியுள்ள
"ஷென்ஷியான் ஜுவான்" (தமிழ்: தெய்வங்கள் மற்றும் இறவா நிலை
எய்தியவர்களின் வாழ்கை வரலாறு), (சீனம்: 神仙传), (ஆங்கிலம்: Shenxian
Zhuan - Biographies of the Deities and Immortals ) என்னும் நூலில் போகரினுடைய
வாழ்கை வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்.
அவர் குறிப்பிடுவதாவது,
"போயாங் வேய்" உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் எனவும் சீனாவில் கிழக்கு
ஹான் அரச பரம்பரையுடன் இவருடைய குடும்பம் பலகாலம் நெருங்கிய தொடர்ப்பில்
இருந்ததாகவும், தாவோவோயிசம் எனப்படும் உயர்ந்த கோட்பாட்டை பின்பற்றி பல காலம்
வாழ்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்நூலில்
போயாங் வேய் ஒரு சமயம் சீன தேசத்தில் மரணத்தை வெல்லும் அமுதத்தினை உண்டாக்கும்
முயற்சியில் ஈடுபட முடிவுசெய்து, அதற்காக தன் நம்பிக்கைக்கூரிய மூன்று சீடர்களுடன்
மற்றும் தன் செல்ல நாயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனிமையான ஒரு மலை உச்சியில்
ஆய்வுக்கூடம் ஒன்றை உறுவாக்கினார்.எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களைப் பிழைக்க
வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத
சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம்
தந்தனர். போகரும்
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார். தகுதியுள்ளவர்களுக்கு
காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக
மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர்
அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.
தஞ்சையில் பிரகதீசுவரர்
ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு
அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
போகர், தட்சிணா
மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது
மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது
குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம்
முறையிட்டனர். தட்சிணாமூர்த்தி போகரை
அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு
வேதங்களையும்
உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று
தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம்
விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு
காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின்
நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
"பாங்கான பாடாணம்
ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால்
தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு
சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி
கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" --- போகர் --
ஆறு ஆதாரங்களில்
முக்கியமான ஆக்ஞா எனப்படும் புருவமத்திக்கும், உச்சந்தலைக்கும் மத்தியில்
குடிகொண்டிருக்கும் மனோன்மணியின் அனுக்கிரகத்தாலே (பீனியல் சுரப்பி அல்லது
கூம்புச் சுரப்பி என்று அறிவியல் ரீதியாக அறியப்படுகிற அரிசியின் அளவே உள்ள ஒரு
சிறிய சுரப்பி ஆகும்) ஒன்பது வகையான பாஷாணங்களாகிய;
1. கௌரிப் பாஷாணம் :
Arsenic pentasulfide
2. கெந்தகப் பாஷாணம் :
Sulfur
3. சீலைப் பாஷாணம் :
Arsenic Di sulphite
4. வீரப் பாஷாணம் :
Mercuric Chloride
5. கச்சாலப் பாஷாணம் :
சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
6. வெள்ளைப் பாஷாணம் :
Arcenic Tri Oxide
7. தொட்டிப் பாஷாணம் :
சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
8. சூதப் பாஷாணம் :
Mercury
9. சங்குப் பாஷாணம் :
சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
இவைகளை பல
செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை சுத்திகரித்து பழனி தண்டாயுதபாணி விக்கிரகம்
வடிவமைக்கப்பட்டதாக போகர் இப்பாடலில் கூறியிருக்கிறார். இன்றளவும் இதன் செய்முறை
புதிராகவும், நவீன அறிவியலுக்கு சவால் விடும் விதமாக அமைந்திருப்பதால்
தண்டாயுதபாணி சிலை என்பது ஆச்சரியமாக கருதப்படுகிறது.
இச்சிலைகான வழிப்பாடு,
திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் மறைப்பொருளாக இயற்றி வைத்திருக்கும்
ஒருசில குறிப்புகளின் வாயிலாக கிடைக்கப்பெருகிறது.
"பாரப்பா
மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட
சமாதியருகே
கட்டான பாடாணவகை
எட்டுடனொன்று
காணவே சேர்த்துவார்த்த
சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான்
செய்து
நவிலுவேன் பூசைசோ
டசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள்
தானும்
ஆரப்பா அறிவார்க
ளாருமில்லை." - புலிப்பாணி
இச்சிலை தற்போது
சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை.
போக முனிவர் தமிழில்
ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில்
எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத்
தருகிறார்.
1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு –
1700
4. போகர் வைத்தியம் –
1000
5. போகர் சரக்கு வைப்பு
– 800
6. போகர் ஜெனன சாகரம் –
550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் –
100
10. போகர் ஞானசாராம்சம்
– 100
11. போகர் கற்ப
சூத்திரம் – 54
12. போகர் வைத்திய
சூத்திரம் – 77
13. போகர் மூப்பு
சூத்திரம் – 51
14. போகர் ஞான
சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க
யோகம் – 24
16. போகர் பூஜாவிதி –
20
இவைகளில் போகர் 12000
மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும்
என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக
சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.
பழனியில் சிலகாலம்
வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது
சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த
புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும்
உள்ளது. போகரின் சமாதி
அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை
ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும்
சதுரகிரி
தலப்புராணத்தில் கூறப்பட்டவை.
சித்தர் போகர் சன்னதி பழனிமல
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON