Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கமலமுனி சித்தர் வரலாறு- திருவாரூர் கமலமுனி சித்தர் பீடம்- kamalamuni siddhar history- kamalamuni siddhar jeeva samadhi
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூவுலகில் மனிதனை பண்படுத்த அவர்கள் ஏற்படுத...
சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூவுலகில் மனிதனை பண்படுத்த அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த கலையே சித்து. சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள். இரும்பை தங்கமாக்கும் வித்தையை கற்றவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கொண்டவர்கள். முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள். நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக்கொள்வார்கள். நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் என புகழப்படுகிறார்கள்.

திருவாரூர்" தியாகராஜர் கோயில்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயில் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள் உள்ளது .கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
தமிழகத்திள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

திருவாரூர்"-கமலமுனி சித்தர் பீடம்
அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது. வெளி சுற்று பிரகாரத்தில் ஆனந்தீஸ்வரர் எனும் சிவ ஆலயத்தின் உள்ளே கமலமுனி சித்தர் இருக்கிறார் ..சித்துக்களில் கமலமுனி நிகரற்றவர் என போகர் கூறுகிறார்

                            திருவாரூர்"-கமலமுனி சித்தர் பீடம்
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.

பெயர்:கமலமுனி சித்தர் ..
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பூசம்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவாரூர்
குரு:போகர், கருவூரார்
சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top