Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கொங்கணர் சித்தர் வரலாறு - கொங்கணர் ஜீவசமாதி திருப்பதி- konganar siddhar history- konganar siddhar jeeva samadhi-Konganar Siddhar Temple
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்த...
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் என்ற நு}லும், போகர் ஏழாயிரமும் என்ற நு}லும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும், மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
கொங்கணர் அரிய மூலிகைகளின் இரகசியத்தை அனைத்தையும் கண்டறிந்தார்.அனைத்து காய சித்திகளையும் மூலிகையும் தெரிந்துக்கொண்டார். மகா சித்தர் போகரையும் அகத்தியரையும் சந்தித்து அவர்களிடமிருந்து ஞானம் பெற்றார். பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தை உணரலாம்.அந்த ஆதிப்புள்ளியையும் போகரிடம்இருந்து அறிந்து வைத்திருந்தார்.அந்த ஆதி,அந்தம் புள்ளியை நோக்கி, அக்கானகத்தில் மூச்சடக்கி நிஷ்டையில் ஆழ்ந்தார். கவிந்த வாழைப் பூவைப்போல முகத்தை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு, பெண்பாம்பு (வாலை) போல் சுருட்டிச் சீறியபடி கிடக்கும் குண்டலினி சோதியைத் தட்டி எழுப்பினார். மூலத்தில் சோதியை கண்டவரே கொங்கணர். தடையற்ற அந்த ஆனந்த மகிழ்ச்சியில் நிஷ்டையில் இருந்த போது ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று ‘சட்டெனக் கண்ணிமையில் எச்சமிட.., சித்தரின் இமைப்பகுதி திறக்க கோபக்கனல் பட்டு அந்தக் கொக்கு எரிந்து சாம்பலாகித் தரையில் விழுந்தது.

                                       18 சித்தர்கள்
நிஷ்டை கலைந்து போயிற்று. நீண்ட காலம் ஆகாரமற்று இருந்த காரணத்தால் வயிறு பசித்தது. ஆகாரம் வேண்டி ஒரு இல்லத்தில் முன் நின்று உண்ண உணவு வேண்டினார். அந்த இல்லத்தரசி கொங்கணர் வந்து நின்றதையே கண்டு கொள்ளாது, வெளியிலிருந்து வந்த தன் கணவனுக்கு ஆசனமிட்டு, தலைவாழை இலை விரித்து சாப்பாடும்,பதார்த்தங்களையும் இட்டுப் பரிமாறினாள்.கணவனுக்கு உணவு பரிமாறுவதிலும், தாகம் தீர்க்க தண்ணீரும், தாம்பூலம் தரித்து கொடுப்பதிலும் கவனம் பிசகாது நடந்துகொள்வதைக் கண்ட கொங்கணருக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. இல்லத்தில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் அற்ப மானுடப் பெண், சகல சித்திகளும் கைவரப் பெற்ற தன்னை வாசலில் காத்து நிற்க வைத்து காயப்படுத்தி விட்டாளே என்று அவளைச் சினம் பொங்க விழித்துப் பார்த்தார்.

“ ஓ..., என்னை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா “ என்று அவரது சினப்பார்வையச் சட்டை செய்யாது அந்தப் பதிவிரதை கேட்டதும் அப்படியே அதிர்ந்து போனார் கொங்கணர்.இந்த சாமான்ய பெண்மணிக்கு இந்த உடன் அறியும் சித்து எப்படி சாத்தியமாயிற்று? மனமானது நம்மிடத்திலேயே உள்ளது என்ற போதிலும், நமக்கே தெரியாத ஆழ்கடல் இரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன. இம்மண்ணுலகில் சாதாரண மானுடர் இடத்திலும் அதீத சித்து இருப்பதை கொங்கணர் அறியக்கூடிய வாய்ப்பு இது. 

இச்சம்பவத்தினால் மிகவும் மனம் நொந்த போனார் கொங்கணர்.இதனிலும் மேல் தனது வலிமையைப் பெருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான இடமும்,வழிமுறைகளயும் தேடி அலைந்தார். கானகத்தில் இடம் தேடி அலைந்தபோது அவர் காதுகளில் சங்கு, செகண்டிகள் முழங்க, மத்தளம், பேரிகையும் ஒலியும் கேட்டது. அப்போது கொங்கணர் கண்ணெதிரே ஒரு சமாதி தெரிந்தது.கைகூப்பி வணங்கி நின்றபோது போது சமாதியிலிருந்து சோதி சொரூபியாககெளதம மகரிஷி வெளியே வந்தார். கொங்கணர் கெளதம மகரிஷி வணங்கியபடி தன் வாழ்க்கைவரலாற்றினை அனைத்தும் அவருடன் பகிர்ந்து கொண்டார்.

”சுவாமி நான் இன்னும் மேலான பரிபூரண சித்து அடைய விழைகிறேன். அதற்கு தாங்கள் அருள் புரிய வேண்டும்” என்று கொங்கணர் வேண்டினார்.
நான் அது ஆனேன் என்பது வேதாந்தம். அது நான் ஆனேன் என்பது சித்தாந்தம். முன்னதில் நான் எனும் முனைப்பு தோன்றி ஆன்மா முற்பட்டு நிற்க , பிரம்மம் பிற்பட்டு நிற்கிறது. ஆனால்,பின்னதில் பிரம்மம் முன்னிற்க, நான் எனும் ஆன்மா பின்னிற்கிறது .இவைகளை தாண்டி நீ இன்னும் உயர் சித்தி அடைய சமாதி நிலை தேவை. அதற்கேற்ற இடமும் இதுதான் ” என்று ஓரிடத்தினை கெளதம மகரிஷி காட்டினார்.

கொங்கணர் அந்த இடத்தில் இறங்க மழை பொழிகிறது. அவர் சமாதி இருந்த இடத்தில் பூமி மூடிக்கொண்டது.துக்கமிலா ஒளிமயமான மனநிலை மனநிலை மனத்தை உறுதிப்படுத்துகிறது.மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் நிலைக்காதிருக்க அதுவே சமாதி.பரத்தோடு சேர்ந்து பரம் பொருளாக ஆகும் நிலை அது.
ஆழந்த நிஷ்டை மூலாதாரத்தில் சித்தி சித்தி செய்தபோது ஆறாதாரமும் பணிந்து ஒளிரும்.அண்டம் கைக்குள்ளடங்கி சித்தித்தது. காயசித்தி, வாதசித்தி, யோகசித்தி, ஞானசித்தி அனைத்தும் பெற்றார். தன்னை அறிந்து அர்ச்சிக்க உடல் தத்துவம் அறிய வரும். உலகம் அணுவின் சேர்க்கை. உடல் இறந்த பின்பு பஞ்ச பூதங்களும் அதனதன் கூட்டில் கலந்துவிடும். உடல் அழியாமல் காக்கும் நெறி அறிந்தவர்கள் சித்தர்கள்.

ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் சமாதி நிலையில் இருந்தார் கொங்கணர். பற்றற்ற சித்தருக்கும் சித்துக்கள் மீதான ஆசைப் பற்று அற்றுப் போய்விடுவதில்லை.சமாதி நிலையிலிருந்து திரும்பியகொங்கணர் இன்னும் உயர்நிலை பெறும் வேட்கையில் யாகம் செய்ய முற்பட்டார்.

இதனை அறிந்த கெளதம மகரிஷி கோபமுற்று கொங்கணர் சித்தரிடம் வந்தார். “சித்தர்கள் வாழ்க்கை முறை வேறு; முனிவர்கள் வாழ்க்கை முறை வேறு. முனிவர்கள் செய்யும் யாகங்களை சித்தர்கள் செய்தல் தவறு. சித்தர் செய்யும் ஒரு நாளும் முனிவராவதில்லை. சாபங்களும் வரங்களும் அருளும் சக்தி எங்களுக்கு மட்டுமே உரியது. நீ செய்தது அதிக பிரசங்கித்தனமான செயல். செயலுக்குரிய செயலால் இதோ பிடி சாபம்..” என்று கெளதம மகரிஷி சபித்தபோது கொங்கணர் மிரண்டு போனார்.

“சுவாமி, சாபம் ஒன்று உண்டெனில் விமோசனம் என்ற ஒன்று உண்டல்லவா? தயை கூர்ந்து சாப விமோசனம் தாருங்கள் “ என வேண்டினார்.

“நீ தில்லை வனத்துக்குச் சென்று தாயாரைத் துதித்து சாப விமோசனம் பெறுவாய்..” தில்லை வனத்துக்குச் சென்ற கொங்கணர் தாயாரை துதித்த போது அங்கு வந்த பராசர முனிவரை வணங்கி சாப விமோசனம் பெற்றார். திருமாளிகைத் தேவரைக் கண்டு வணங்கி பல இரகசிய சாதனை முறைகளை அறிந்து கொண்டு தீட்சை பெற்று, நிர்வாண தீட்சையும் பெற்றார். செரூப மணியை வாயில் வைத்துக்கொண்டும் கமலினியை இடுப்பில் கட்டிக்கொண்டும் அட்டமா சித்திகள்யாவும் செய்தபடி ஆகாய மார்க்கமாக உலகமெங்கும் உலா வந்தார் கொங்கணர்.

கொங்கணருக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் யோக ஞான சித்திகளைப் பெற வழிகாட்டினார். இறுதியாகத் திருவேங்கடமலைக்குச் சென்று தவம் செய்து அங்கேயே சமாதி நிலையடைந்தார்.
                          கொங்கணர் குகைக்கு செல்லும் பாதை
கொங்கணர் தவம் செய்த இடங்கள் : தாராபுரம் காங்கேயம் ரோடு, ஊதியூர் மலை கொங்கணர் குகை, கோவை-சேலம் மெயின் ரோடு சங்ககிரி அருகாமை சூரியவனம் கொங்கணர் குகை, திருப்பூர் கொங்கணகிரிமலை போன்றவை கொங்கணர் தவம் செய்த இடங்களாகும்.
                             கொங்கணர் தவம் செய்த குகை
கொங்கணர் இயற்றிய நூல்கள் : கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
                             கொங்கணர் தவம் செய்த குகை
கொங்கணச் சித்தர் இயற்றிய பாடல்கள் ‘’ கொங்கண நாயனார் வாலைக் கும்மி” என அழைக்கப்படுகின்றன, இப்பாடல்கள் மிகச் சிறந்த கருத்துகளைக் கொண்டவை. மக்களுக்கு நல்லறிவைப் புகட்டுபவை.
இவ்வுடலை மாயமென்றும், நிலையில்லாமை என்று எண்ணாதே.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இவ்வுடல் மூலம் தான் யோகம் செய்து குண்டலினி சக்தியை வசப்படுத்தி இறவா நிலையை எய்த முடியும். இவ்வுடலை ‘ஊத்தைச் சடலமென்றுஎண்ணாதே” உப்பு என்பது உணவு, வெறும் உணவை மட்டுமே உட்கொள்கின்ற உடலல்ல. இந்த உடலைக்கொண்டுதான் சித்தம் அடைய முடியும்.

          திருப்பதி எட்டாவது மலையில் கொங்கணர் சித்தர் ஜீவசமாதி
திருமலையில் உள்ள எட்டாவது மலையில்தான் பாபாஜி என்ற பக்தருடன் பெருமாள் சொக்கட்டன் ஆடியதாக சொல்வார்கள். அவர்கள் சொக்கட்டன் ஆடிய இடத்தில் கொங் கண சித்தர் ஜீவசமாதி இருப்ப தாக சில நூல்களில் குறிப்பு உள்ளது. அந்த ஜீவ சமாதி மீது ஒரு மரம் வளர்ந்துள்ளது. அந்த மரத்தின் இலையை பக்தர்கள் பொக்கிஷமாக கருது கிறார்கள். அதை வைத்து கொங் கணரை போற்றி வழிபடுவதும் உண்டு.

கொங்கணருக்கு செய்யும் வழிபாடு ஏழுமலையான் அருளை பரிபூரணமாகப் பெற்றுத்தரும் என்று சொல்கிறார்கள். சொங்கணரை வழிபட 8-வது மலைக்கு ஜீப்பில் சென்றுவர வசதி உள்ளதாம். திருப்பதி செல்பவர்கள் விசாரித்து தெரிந்து கொள்ளவும்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top