கொங்கண சித்தர் ! தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்னும்
பழமொழியும் பிறந்தது இதிலே...ஊதியூர் (பொனூதிமாமலை) வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த
ஊராகும்! அந்த மலையை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை
என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலையானது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய
கொங்கண சித்தர் தவம் செய்து ஒளி ஐக்கியம் பொருத்திய...இவரின் பரிபூரண
கிருபை பொருந்திய தலமாகும் இங்குள்ள பழமை வாய்ந்த கோவிலில் உத்தண்டவர் எனும் திருநாமத்தில்
அருள் பாலிக்கிறார் முருகப்பெருமான் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால்
பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் .
அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் நுழைவாயில் – ஊதியூர்,
இங்கு கொங்கண சித்தர் தவம் செய்துள்ளார் ... சொர்ண ஆகார்ஸன பைரவ
பெருமான் காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை கைவரப்பெற்றவர் .
இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில்
பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..பொன் செய்து
மக்களுக்கு தானமாக தந்தார் சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய
பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து
..இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என கூறி மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில்
ஆழ்ந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை
மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று
அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார்.
கொங்கணர் சுனை
#தப்பித்தது_தம்பிரான்_புண்ணியம் எனும் பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது
ஆபத்தின் உச்சிக்கு சென்றவர் கூட தம்பிரானை தரிசிக்க -அவர்கள் காப்பாற்றப்
படுவார்கள்..தம்பிரானின் ஜீவ சமாதி இங்குதான் உள்ளது .
ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி
அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர்
பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் .
நீண்ட நேரம் தபோ நிஷ்டை கொள்ள ஏற்ற இடமாகும்.உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே
வருவதற்கு வேறு வழி ...வெளியே படுத்து தவழ்ந்து தான் வரமுடியும்.
சித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை
ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர்
முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி ..அதற்கு மேல் இரண்டு
கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம் ...அதற்கும்
சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது...அமாவாசை,பௌர்ணமி தினங்களில் கொங்கணர் கோவில்
சிறப்பு தரிசனம்,அன்னதானம் நடை பெறுகிறது
தம்பிரான் செட்டி குகை
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை
காச்சி எல்லோருக்கும் அளிப்பார்கள் , அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக
இருக்கும் முடிந்தவர்கள் சென்று ரசத்தை அருந்தி வாருங்கள் .கொங்கணர் ஜனன
நட்சத்திரம் உத்திராடம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய
புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்.
கொங்கணர் குகைக்கு செல்லும் பாதை
ஒரு முறை தஞ்சையில் கொங்கணர் சித்தர் பிரகதிஸ்வரர் ஆலய - 13 பற்களை
கொண்ட நந்தியை பாடி பரவி யோகநிஷ்டையில் அமர்ந்த போது எதிர்பட்ட சிவபெருமானை தனது
சடையில் கட்டி யோகத்தில் ஆழ்ந்தார் ...சிவனை காக்க புலியாய் வந்த இந்திரனை காலால்
மிதிக்க சிவம் சடை முடியில் இருந்து வெளிப்பட்டார் .சடையில் தான் கட்டியது சிவம்
என்பதை அப்போது தான் உணர்கிறார் கொங்கணர் ...சிவனால் ஆட்கொள்ளப்பட்ட கோலத்தில்
இன்றும் உள்ளது தஞ்சை கோவிலில் மேற்கு புறத்தில் கொங்கநேஷ்வரர் ஆலயம் ...காலில்
புலியோடு காட்சிதருகிறார்.
சித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை
கொங்கணர் சித்தர் சொர்ண பைரவரின் அருளை பரிபூரணமாக பெற்றவர்
ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில்
20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழைய பெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON