கண்ணாடியை கையில் ஏந்தி ஒரு பெண் நெற்றியில் பொட்டு வைப்பதைப் போன்ற இந்த சிற்பத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அவள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் என்ன! அவளின் ஆடை அலங்காரமென்ன இடுப்பு வளைவு என்ன!! அப்பப்பா!! சாதரணமாக பார்ப்பவர் கண்களுக்கு இவ்வளவு மட்டும் தான் தெரியும். இந்த பொட்டு வைக்கும் காட்சியை நாம் இன்னும் சற்று வெவ்வேறு கோணங்களில் யோசித்துப் பார்ப்போம். பொதுவாக எல்லா பெண்களும் பொட்டு வைக்கும் போது முகத்திற்கு குறுக்கே கையை எடுத்துச் சென்று நெற்றியில் வைப்பது வழக்கம். அப்படி செய்தால் கை குறுக்கே சென்று நெற்றியை தொடும் போது மூக்கு வாய் போன்ற பகுதிகள் மறைத்துவிடும் பார்க்க நன்றாக இருக்காது. சரி இப்படி யோசித்துப் பார்ப்போம்... அவள் நின்றிருக்கும் இருபக்க தூண்களில் ஏதோ ஒரு பக்கம் சுவர் போன்று செய்து, அந்த சுவரில் கண்ணாடியை மாட்டி பொட்டு வைப்பதைப் போன்று இருந்திருந்தால், அந்த பெண் ஒரு பக்கமாக திரும்பி நின்றிருப்பாள். அப்படி நிற்கும் போது அவளின் முழு உருவத்தை நாம் கண்டு ரசிக்க முடியாது. ஒரு பக்க நகைகளும் உடையும் மட்டுமே தெரிந்திருக்கும். வேறெப்படி யோசித்தாலும் இதை விட அழகாக காட்டி இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
இந்த சிற்பத்தில் உள்ள சின்ன சின்ன விசயங்களை கூர்ந்து நோக்குங்கள் !! ஒரு காலை நேராக வைத்து மறு காலை சற்று திருப்பி வைத்தால் மட்டும் தான் இடுப்பு இந்த அளவிற்கு வளையும். இடது கையில் கண்ணாடியை கொடுத்தால் அந்த கையில் இருக்கும் வளையல்களையும் சேர்த்து காட்டிவிடலாம். முகத்திற்கு மேலே கையை தூக்கி பொட்டு வைத்தால், முகம் எங்கும் மறையாது. இன்னும் இது போன்று எத்தனையோ சொல்லலாம் !! நம் கோயில்களில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் இது போல தான் உருவாகி உள்ளது. ஒரு சிற்பத்தை கல்லில் வடிப்பது மட்டுமே வேலை இல்லை, முதலில் யோசிக்க வேண்டும், யோசித்ததை எப்படி கல்லில் கொண்டு வர முடியும் என்று செயலாற்ற பல கணக்குகள் போட வேண்டும். அந்த காலத்து சிற்பிகள் இதற்காக எவ்வளவு ஹோம் வொர்க் செய்திருப்பார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இக்கோவில் கல்வெட்டில் "குழல் ஊதும் பிள்ளை திருக்கோயில்" என்றும், அதுவே தற்போது "வேணுகோபாலர் சன்னதி" என்றும் அழைக்கப்படுகின்றது. உங்கள் ஊர்களில் இருக்கும் சிற்பங்களை காப்பாற்றுங்கள்.
ஹொய்சல அரசர்களின் கொடை (கர்நாடகம்)
இடம் : ஸ்ரீரங்கம், தமிழ்நாடு
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.