Home
»
Agricultural Garden
»
பசுமை தோட்டம்
»
விவசாயம்
» மனதையும் கொள்ளை கொள்ளும் தொங்கும் தோட்டம் - Hanging Garden
தொங்கும் தோட்டம் என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது எது என்று கூறுங்கள்
பார்க்கலாம். சரிதான் நீங்கள் சரியாக சொல்லி விட்டீர்கள். ஆம் அது “பாபிலோன்
தொங்கும் தோட்டம்” தான் உலகம் வியக்கும் அளவிற்கு மிகவும்
பிரபலமாக இருப்பது பாபிலோனிலுள்ள அந்த தொங்கும் தோட்டம்தான். சாதாரணமாக
நாம் காணும் தோட்டங்களில் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்ததால் அந்த
தொங்கும் தோட்டம் மிகவும் பிரபலமானது.
அது சரி நமது வீட்டு தொங்கும் தோட்டம் எப்படி அமைப்பது என சீக்கிரம் சொல்லுங்கள்
என்று தானே நீங்கள் நினைக்கிறீங்க. சரி சரி அலங்காரமாக நாம் வளர்க்கும் பூச்
செடிகள், தொட்டிச் செடிகள் மற்றும் அலங்ககார கொடி
வகைப்பூக்கள் போன்றவைகளில் சில செடிகளே நாம் தொங்கும் தோட்டமாக அமைக்கலாம்.
தொங்கும் தோட்டம்
தொங்கும் தோட்டம் என்பது என்ன என்று நீங்கள் கேட்பது கேட்கிறது தொங்கும்
தொட்டிகளிலோ (Hanging Basket) வீட்டின் முகப்பறையின் முன்னரோ அல்லது
காம்பவுண்டு சுவரிலோ அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலோ (planter box) அல்லது
மாடியிலுள்ள கைப்பிடிச் சுவரில் அமைக்கப்பட்டுள்ள செடி வளர்க்க உள்ள
தொட்டிகளிலிருந்தோ தொங்கும் வகையில் வளரும் செடிகள் அல்லது கொடிகளை மிக அழகாக
பராமரிப்பதே தொங்கும் தோட்டம் ஆகும் என்னென்ன செடிகள் உகந்தவை சிடம் (sedum) மணி பிளாண்ட்
(money plant) டிரடஸ்கேன்ஸியா
(Tradescansia) குளோரோபைட்டம் (chorophytum) சேட்கிரீசியா (zetcresia) படரும் ரோஜா
வகைகள் பிச்சி அல்லது ஜாதி மல்லி மற்றும் முலலை போன்ற பூச் செடிகள் போர்டிகோ கொடி
(portigo creeper) அலமாண்டா (alamanda) போன்றவை எளிதாக நமது வீட்டு தொங்கும்
தோட்டத்தில் வளர்க்க உகந்தவை. இது மட்டுமல்லாமல் மேலும் பல வகைச் செடிகள்
உள்ளன. அவை வளர்ப்பக்குத் தகுந்த சீதோஷ்ண நிலை , காற்றின்
ஈரப்பதம் பராமரிப்பு போன்றவை தனியாக அமைக்க வேண்டி இருக்கும். ஆகவே நமது
சூழ் நிலையில் எளிதாக வளரக்கூடிய செடிகள் சிலவற்றை உங்களக்கு தந்துள்ளேன்.
தொங்கும் தொட்டிகள்
நமது வீட்டின் கூறையில் தொட்டிகளை தொங்கவிடுவதற்கு உகந்த கம்பி வளையங்கள்
உள்ளதா எனப் பார்க்கவேண்டும். அப்படி இல்லையயன்றாலும் கவலை வேண்டாம் Bullet hook எனப்படும்
இரும்பு கொக்கிகளை மேற்கூறையில் 2 இன்ச் அளவு துளையிட்டு இந்த கொக்கிகளை
அறைந்து மாட்டி விடலாம். அந்த கொக்கிகளில் தொங்கும் தொட்டிகளை மாட்டப்
பயன்படுத்தலாம். தொட்டிகளை இரும்பு வளையங்களில் மாட்டுவதற்கு
தகுந்த இரும்பு சங்கலிகள் அல்லது மூங்கில் சங்கலிகள் அல்லது பிளாஸ்டிக் கயிறினால்
செய்யப்பட்ட சங்கலி போன்றவைகளால் கட்டி தொங்கவிட பயன்படுத்தலாம்.
செடி தொட்டி அமைப்புகள்
செடி தொட்டி அமைப்புகளை நமது வெளி சுற்றுச் சுவரிலோ அல்லது மாடியிலுள்ள
கைப்பிடிச் சுவரிலோ அமைக்கலாம். 1/2 அடி முதல் 1 அடி அகலத்திலும் 3 அடி முதல் 5 அடி நீளம்
வரையிலும் 1 அடி முதல் 2 அடி வரை ஆழமாகவும் செங்கற்களால் கட்டப்பட்டு
சிமெட்டால் பூசப்படுகிறித. அதில் நட்ட செடிகளுக்கு அதிகப்படியாக
ஊற்றப்படுகிற தண்ணீர் வெளியேறும் வகையில் 1 அல்லது 2 துவாரங்கள் இடப்பட்டிருத்தல் அவசியம். அதனால்
செடிகளில் வேர் ஆழுகல் ஏற்படாடமல் பார்த்துக் கொள்ளலாம்.
செடி நடவு
தொங்கும் தொட்டி அல்லது செடித் தொட்டிகளில் முதலில் செடி வளர்க்க தேவையான உரக்
கலவை மண்ணினை நிரப்ப வேண்டும். நன்கு மக்கிய எரு செம்மண், மணல் ஆகிய மூன்றினையும்
சமபங்கில் எடுத்து நன்கு கலக்கி இடவேண்டும். பின்னர் நாம்
விரும்பும் செடிகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
பராமரிப்பு
தொங்கும் தோட்ட செடிகளை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். சரியான அளவு
தண்ணீரை மட்டுமே ஊற்ற வேண்டும். அதிகமான ஊற்றும் போது அது வீட்டின்
சுவர்களிலோ, வீட்டின் வராந்தா பகுதிகளில் கசிந்து தண்ணீர்
தேங்கி கிடக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும்.தொட்டிகளுக்கு உரமிடுதலும் மிகவும்
அவசியமாகும். மக்கிய எருவினை 1 கிலோ எடுத்து
ஒரு வாளியில் போட்டு அதனுடன் 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் வைத்து
விட்டால் மறுநாள் காலையில் உரநீர் தயாராக இருக்கும். அதனை வடிகட்டி
செடிகளுக்கு ஊற்றலாம். அதிகமாக வெயிலோ, நிழலோ இருக்கும் போது அதனை மாற்றி வைத்து
பராமரிப்பதன் மூலம் எப்போதும் நமதுவீட்டு தொங்கும் தோட்டம் அழகாக காட்சி
அளிக்கும். நமது மனதையும் பார்பவர்களின் மனதையும் கொள்ளை
கொள்ளும் தொங்கும் தோட்டம் அமைக்க தயாராகிவிட்டீர்களா?
About Author

Advertisement

Related Posts
- மனதையும் கொள்ளை கொள்ளும் தொங்கும் தோட்டம் - Hanging Garden23 Aug 20170
தொங்கும் தோட்டம் என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது எது என்று கூறுங்கள் பார்க்கலாம். சரிதான் ந...Read more »
- வீட்டுப்பழத் தோட்டம் - home based fruits garden23 Aug 20170
பழத்தோட்டம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரே வகையான பழ மரத்தைப்பெரிய அளவில் வளப்பதோ அல்லது...Read more »
- மனசுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்வீடு என் தோட்டம் வீட்டுப் பூந்தோட்டம் - home garden23 Aug 20170
பூந்தோட்டம்னு சொன்ன உடனேயே நமக்கு என்ன ஞாபகம் வருதுன்னு சொர்லுங்கப்பார்க்கலாம். ஊட்டில இருக்கு...Read more »
- மாடி தோட்டம் அமைக்கும் முறை வீடியோ உடன்23 Aug 20172
உங்க வீட்டுல மொட்டை மாடி இருந்தா, துணி, வடாம் காயப்போடுறதுக்கு... பழைய தட்டுமுட்டு சாமான்களை...Read more »
- பார்த்தீனியம் நச்சுக்களை அழிக்கும் முறைகளும் இதனால் ஏற்படும் பாதிப்புகள்களும்24 Aug 20170
அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பார்த்தீனியம் என்ற நச்சுக்களை 1955-ம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்...Read more »
- மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMICOMPOS25 Aug 20170
நான் ‘நம்மாழ்வார்’ ஐயாவின் வழியைப் பின்பற்றுபவன் என்று மிகுந்த பெருமையுடன் கூறினார்திரு.செ.கண்...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.