Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மனசுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்வீடு என் தோட்டம் வீட்டுப் பூந்தோட்டம் - home garden
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பூந்தோட்டம்னு சொன்ன உடனேயே நமக்கு என்ன ஞாபகம் வருதுன்னு சொர்லுங்கப்பார்க்கலாம். ஊட்டில இருக்குற அரசு தாவரவியல் பூங்கா அல்லது கோவையில ...

பூந்தோட்டம்னு சொன்ன உடனேயே நமக்கு என்ன ஞாபகம் வருதுன்னு சொர்லுங்கப்பார்க்கலாம். ஊட்டில இருக்குற அரசு தாவரவியல் பூங்கா அல்லது கோவையில இருக்குற வ.உ.சி.பூங்கா அல்லது நீர்த்தேக்கம் அணைக்கட்டு இருக்குற இடத்தில இருக்கும் பூங்கா தான் இல்லையா? பிளாக் தண்டர் அல்லது கோவைக் கொண்டாட்டம் அல்லது மகாராஜா தீம் பார்க் என்பன போன்ற இடங்களையும் பார்த்து இருக்கலாம். இல்லைனா உங்க வீட்டுக்கு அருகிலேயே மாநகராட்சியோ அல்லது பஞ்சாயத்து மூலமாவோ பராமரிக்கப்படுகிற சிறிய அளவு பூங்காவுக்கு நீங்க போயிருக்கலாம், அங்கு உங்க குழந்தைகளோட நீங்களும் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்திருக்கலாம். அது போன்ற ஒரு சூழ்நிலையை நம்ம வீட்டிலயும் உருவாக்குனா அதுதாங்க வீட்டுப் பூந்தோட்டம்.

ஏன் பூந்தோட்டம்
நமக்கு வேலையில் இருக்குற மன அழுத்தம் அல்லது வீட்டுச் சூழ்நிலையில் ஏற்படுற மன வருத்தங்கள் உடனே குறைக்கிறதுங்கிறது அவ்வளவு சுலபமில்ல. ஒவ்வொருவரும் மனபாரத்தைக் குறைக்க அவங்களுக்கு தெரிஞ்ச வழிகளைப் பின்பற்றுறாங்க. ஆனா எல்லாருமே நம்ம வீட்டு கின்ன குழந்தைகள் பேசுறதையோ, விளையாடுறதையோ, குறும்பு பண்றதையோபாக்குறப்போ மன அழுத்தம்லாம் எளிதாக் குறையுறத உணர்ந்திருப்போம். அந்த சின்ன குழந்தைகளைக் கொஞ்சி அவுங்களோடச் சேர்ந்து நாமளும் சின்ன குழந்தையா மாறி விளையாடுறப்போ நமக்கே மனசுக்குச் சந்தோசமாவும், புத்துணர்ச்சியாவும் இருக்குறதையும் நடைமுறையிலப் பார்த்திருப்போம். அதேப் போல ஒரு அனுபவம் பூந்தோட்த்தில நாம இருக்குறப்போ உணர முடியும்.

இயற்கை நமக்கு அளித்த ஒரு நன்கொடை கலர் கலரா நாம பாக்குற பூக்கள்தான். அந்தப்பூக்கள்ளதான் எத்ன ரகங்கள், வண்ணங்கள், வாசனைகள்அப்பப்பா. அந்த பூக்களும்,
அந்த அழகுச் செடிகளும், கொடிகளும் , புல் வெளிகளும் நமக்கு நல்ல ஆனந்தத்தை தருதுங்கிறதுல்ல எந்த சந்தேகமும் இல்ல. உடலுக்கும், மனசுக்கும் நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்குது..காசு செலவளித்து வெளியிடங்களுக்குச் சென்று பூங்காவில் நேரத்தை செலவளிப்பது ஒன்று. அதுபோலச் சிறிய அளவில் நமது வீட்டிலேயே அழகியப் பூந்தோட்டம் அமைத்து மனசுக்கும்உடலுக்கும் ஆரோக்யத்தினைக் கொடுப்பதற்காகத்தான் இந்த வீட்டுப் பூந்தோட்டம்.


என்னென்ன பூச்செடிகள் வளர்க்கலாம்?
பூந்தோட்டத்தில் நாம் நினைக்கும் செடிகள், கொடிகள், புல்தரைகள் போன்றவைகளை வளர்க்கலாம். ரோஜா, சம்பங்கி, செண்டு மல்லி, கனகாம்பரம் போன்றவைகளைத் தொட்டியிலோஅல்லது நிலத்திலோ வளர்க்கலாம். மல்லிகை, முல்லை, பிச்சி அல்லது ஜாதிமல்லி கொடிகளை வீட்டு முகப்பிலோ, வேலியிலோ அல்லது குட்டைச் செடியாகவோ வளர்க்கலாம். குரோட்டன்ஸ்பனை வகைச் செடிகள், கோலியஸ், டைபென்பேக்கியா போன்றச் செடிகளை அலங்காரத் தொட்டிகளில் வளர்த்து வீட்டின் உள்ளும், வெளியிலும் அழகாக அடுக்கி வைத்து பயன்படுத்தலாம்செம்பருத்தி, பவழமல்லி நத்தியாவட்டை, இட்லிபூ, தங்கஅரளி போன்ற மரங்களை வீட்டின்
முன்புறமோ, ஒரங்களிலோ வளர்க்கலாம். அதிலிருந்து வரும் பூக்களை அலங்காரம் செய்வதற்கோ, பூஜை செய்வதற்கோ பயன்படுத்தலாம்.வீட்டின் முன்புறம் எவ்வளவு இடம் கிடைக்கிறதோ, அந்த இடத்தில் ஒரு பகுதியை புல்வெளியை
அமைக்கப் பயன்படுத்தலாம். 

புல்வெளியில் நடுவில் தூஜா அல்லது விசிறி வாழை அல்லது கிறிஸ்துமஸ் மரம் போன்ற அழகு மரங்களை நட்டு வளர்க்கலாம். புல்வெளியின் ஓரங்களில் குட்டையாக வளரக் கூடிய டூரண்டாச் செடியோ பொன்னாங்கன்னி கீரையோ அல்லது சவுக்குச் செடிகளை நட்டு ஒரு அளவுக்கு வளர்த்து அதனைப் பராமரிக்கலாம்.இந்தப் பூங்காவில் உள்ளே உட்காரும் இருக்கை, ஊஞ்சல், நீர் வீழ்ச்சி அமைப்பு போன்றவைகளையும் அமைத்து நமது தேவைக்கேற்ப அழகுபடுத்தி மகிழலாம்.


பராமரிப்பு
பூந்தோட்டத்தை நாமே நேரம் கிடைக்கும் போது பராமரிக்கலாம் அல்லது தோட்டம்பார்ப்பவர்களிடம் சொல்லி பராமரிக்கலாம். தோட்டத்தில் வளரும் களைச் செடிகளை அவ்வப்போதுஅகற்ற வேண்டும். அதிகமாக வளர்ந்த செடிகளை தேவையான உயரத்தில் வெட்டி பராமரிக்கலாம்இயற்கை எரு இட்டு உரமிடலாம். செடிகள் காய ஆரம்பித்தால் உடனடியாக தேவையான அளவு தண்ணீர் விடலாம். அடிக்கடி தண்ணீர் விடுவது தேவைப்படாது. பூந்தொட்டிகள் தொடர்ந்து வீட்டில்உள்ளே அல்லது நிழலில் இருந்தால் அதனை சிறிது வெளியில் வெயில் படும்படி வைக்கலாம். அப்படி செய்வதன் மூலம் செடிகள் வெளிர் நிறத்தில் மாறி இலைகள் உதிர்வதைத் தடுக்கலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் நமது பூந்தோட்டத்தை அழகாகப் பராமரிப்பதுடன், உடலுக்கும்ஆரோகியம் கிடைக்கும். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் விளங்கும்.
23 Aug 2017

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...