Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வீட்டுப்பழத் தோட்டம் - home based fruits garden
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பழத்தோட்டம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரே வகையான பழ மரத்தைப்பெரிய அளவில் வளப்பதோ அல்லது பல வகையான பழ மரங்களை வளர்க்கும் இடமோ ப...

பழத்தோட்டம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரே வகையான பழ மரத்தைப்பெரிய அளவில் வளப்பதோ அல்லது பல வகையான பழ மரங்களை வளர்க்கும் இடமோ பழத் தோட்டம் எனப்படும். அது என்ன வீட்டுப்பழத்தோட்டம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நமக்குத் தேவையான பழங்களை நமது வீட்டிலேயே வளர்த்துப் பயன்படுத்துவது வீட்டுப் பழத்தோட்டம்ஆகும்

பழ மரங்கள் தேர்வு:
நமது பேச்சு வழக்கில் முக்கனிகள் என நாம் கூறுவது என்னென்ன பழங்கள்எனக் கூறுங்கள் பார்க்கலாம். நீங்கள் நினைத்தது சரிதான். மா, பலா, வாழைஎனும் அந்த மூன்று பழங்கள்தான் நாம் முககனிகள் என அழைக்கும்பழங்கள். இது மட்டும் அல்லாமல் பப்பாளி, சீதா, சப்போட்டா, கொய்யா, மாதுளை , எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களையும்வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

சீதோஷ்ண நிலைக்குத் தகுந்த பழங்கள்
அதிகமாக வெய்யில் உள்ள பகுதிகளில் மா, வாழை. கொய்யாபப்பாளி, சப்போட்டா போன்ற பழங்களை வளர்க்கலாம். வறட்சி அதிகமாக உள்ள இடங்களில் சீதா, சீமை இலந்தை போன்ற பழங்களை வளர்க்கலாம். காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள
இடங்களில் பலா, அன்னாச்சி , ஆரஞ்சு வகைப் பழங்களை வளர்க்கலாம். மலைப் பிரதேசங்களில் குளிர் அதிகம் உள்ள இடங்களில் ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், ஸ்ட்ராபரி போன்ற பழங்களை வளர்க்கலாம்.

சமவெளிப் பகுதிகளில் பழத்தோட்டம் பெரும்பாலான இடங்கள் சமவெளிகளில் வெயில் அதிகமாகவும்மழையளவு சராசரி அளவிலும், குளிரோ, ஈரப்பதமோ குறைவாகவும்இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் உள்ள வீட்டுப் பழத்தோட்டங்களில்நாம் மா, பப்பாளி, கொய்யா, சீதா, மாதுளை, வாழை போன்றபழங்களைப் பயிரிடலாம்.


கன்று தேர்வு
பப்பாளி விதையை வளர்த்து, சிறு செடிகளாக இருப்பதில் எடுத்து நட்டுக் கொள்ளலாம். விதை நல்ல தரமான வீரிய ரக விதையாக இருக்க வேண்டும். வாழைக்கு நல்ல தரமான மரத்திலுள்ள பக்கக்கன்றைச் சேகரித்து வைத்து நடலாம். மா, கொய்யா, சப்போட்டா,
மாதுளை போன்ற மரங்களுக்குத் தரமான ஒட்டு ரக மரங்களைப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

இடத்தேர்வு
பப்பாளி அதிக ஆழமாக வேர்விடாமல் வளரும். ஆகவே இதனைப் பெரிய அளவு சிமெண்ட்தொட்டியில் வைத்து மாடியில் வளர்க்கலாம். அல்லது வீட்டில் முன்னர் அல்லது சைடில் அல்லது பின்புறம் உள்ள இடங்களில் நட்டு வளர்க்கலாம். ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் சுமார் 10 அடி இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

நடவு முறை
10 அடி இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். குழி அளவு 2 அடி நீளம், 2 அடிஅகலம், 2 அடி ஆழம் இருக்கும்படி எடுத்துக்கொள்ள வேண்டும். குழியின் அடியில்
பசுந்தாள் உரத்தினைப் போட்டு, சிறிது மணல் போட்டு 10 – 15 நாட்கள் ஆறப் போடவும்அதன் மேல் நன்கு மக்கிய எரு, செம்மண், மணல், குழியில் எடுத்த மேல் மண் ஆகியவற்றைநன்கு கலந்து குழியில் நிரப்ப வேண்டும். குழியில் மேலிருந்து 15-20 செ.மீ. ஆழத்திற்கு குழி எடுத்து நாம் நடவேண்டிய பழ மரக் கன்றினை நட வேண்டும். அ ப்போது பழ மரத்தின் மண் தொட்டியோ அல்லது பாலிதின் கவரையோ கவனமாகப் பிரித்து எடுத்துவிட்டு மரத்தின்வேரும் மண்ணும் கலந்து உள்ள வேர்ப் பகுதி உடைந்து விடாமல் கவனமாக நடவு செய்ய வேண்டும். நட்ட பின் மண்ணை மேலே போட்டு மரத்தின் தண்டுப் பகுதியைச் சுற்றிலும் நன்றாகஅமுக்கி வைக்க வேண்டும்.

நீர்ப் பாய்ச்சுதல்
மரம் நட்டவுடனே தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் நீரை உரிஞ்சி மரக்கன்று சிறிது சாய்வதுபோல இருந்தால் சிறிது மண் போட்டு மரக்கன்றின் தண்டுப்பகுதியை நன்றாக அமுக்கிவிட வேண்டும். அதன் பின்னர் தினசரி ஒரு முறை சிறிதளவு தண்ணீர் விடவும். செடி நன்குவளர்ந்த பின்னர் நிலத்திலுள்ள ஈர அளவினைப் பார்த்துத் தண்ணீர் ஊற்றவும்.

மரம் பராமரிப்பு
மரம் நட்ட பின்னர் ஒரு மூங்கில் குச்சியினை அருகில் நட்டு வைத்து ஒரு கயிரினால் கட்டி வைக்கவும் . அதனால் காற்று அதிகம் அடிக்கும் போது ஒட்டுக்கட்டிய மரம் பிரியாமல் காப்பாற்றப்படும். 6 மாதங்களுக்கு ஒரு முறை நன்கு மக்கிய எருவினை இடவும். சாம்பல்அல்லது மஞ்சள் இஞ்சிப் பூண்டு கரைசல்களைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.மிக்கதாகவும் இருக்கும்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top