Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தேவையற்ற முடியை நீக்க இயற்கையான வழி குறிப்புகள்..!!! - Hair removing tips for naturals
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
எப்போதும் தற்காலிக பயன்களைத் தரும் Chemical Products க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களு...

எப்போதும் தற்காலிக பயன்களைத் தரும் Chemical Productsக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
இப்போது உடம்பில் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கையான முறைகள் பற்றி இங்கு காண்போம்

கடலை மாவு + மஞ்சள்தூள் + கடுகு எண்ணெய்
இந்த மூன்றையும் கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

மஞ்சள்தூள் + உப்பு + எலுமிச்சை சாறு + பால் 
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வந்தால், தேவையற்ற ரோமங்கள் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை + எலுமிச்சை சாறு + தண்ணீர் 
இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையற்ற முடிகள் இருக்கும் இடங்களில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், குணமாகும்.

எலுமிச்சை சாறு + தேன் 
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்கள் வராமல் தடுக்கலாம்.

மஞ்சள்தூள் + உப்பு
இந்த கலவையை மட்டும் நன்றாக குழைத்து பூசவும். நன்றாக காய்ந்த பின்பு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்.
வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top