Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: அகத்தி கீரை, SESBANIA GRANDIFLORA.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மூலிகையின் பெயர் – அகத்தி. தாவரவியல் பெயர் -  SESBANIA GRANDIFLORA. தாவரக் குடும்பம் – FABACEAE. பயன் தரும் பாகங்கள் –: இலை ...

மூலிகையின் பெயர் அகத்தி.

தாவரவியல் பெயர் -  SESBANIA GRANDIFLORA.

தாவரக் குடும்பம் – FABACEAE.

பயன் தரும் பாகங்கள் –: இலை, பூ, வேர், பட்டை மற்றும் மரம்.
வளரியல்பு அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப் படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது. நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும். இலைகள் 1530 செ.மீ. நீளம் உடையது 10 -20 சதையாக இருக்கும். ஒரு இலையில் 4080 சிறு இணைக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.53.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன் படுத்துவார்கள். இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும். விதை 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா. பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.


அகத்தியின் மருத்துவப் பயன்கள் -:

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.
அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.
அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.
அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது.
அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன் படுகிறது.
அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன் படுகிறது.



.அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

"மருந்திடுதல் போகுங்காண் வன் சிரந்தி வாய்வரம்

திருந்த வசனம் செரிக்கும் வருந்தச்

சகத்திலெழு பித்தமது சாந்தியா"

அகத்திக் கீரையை உண்ண இடு மருந்து நீங்கும். கிரந்தி வாய்வு உண்டாகும். மருந்தை முறிக்கும் தன்மையுண்டு. புழுவை வெளியேற்றும்ம். எளிதில் சீரணம் தரும். அகத்தி, செவ்வகத்தி, சாழையகத்தியென வேறு இனமும் உண்டு. செவ்வகத்தியின் வேரைத் தண்ணீர் விட்டு அரைத்து வாத வீக்கங்களுக்குப் போம்.

அகத்திக்குப் பெரும்பாடு தீரும்

அகத்திக்கு வேக்காடுதனை யகற்றும்.’ (போ.நி.1500)

பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிள்ளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன் படும்.
கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அல்லைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காப்பபி டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையும், வேர் பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கைகால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்கடுப்பு, நீர்தாரை எரிவு, அம்மைசுரம், ஆகியவை தீரும்.


இலைச்சாறும் நல்லெண்ணையும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமுறக் காச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top