அந்த வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்களைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்..
# வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.
# வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண தாதுவிருத்தி உண்டாகும்.
# வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.

# வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும்.
சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை,கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.