1. மூலிகையின் பெயர் :- அத்தி.
2. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE.
3. தாவரக்குடும்பம் :- MORACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.
5. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம்
மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை
உடைய பெரு மரவகை. அத்தி கல்க மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும்
மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது
அதனால் இதை காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும்
சொல்வர். அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.
துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப்
பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால்
மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும்
உண்டு. விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
6. மருத்துவப்பயன்கள் :- அத்தியின்
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை,
நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும்
செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம்
சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத
நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை,
கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப்
போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி
கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம்
ஆகியவை தீரும்.
அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப்
பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக்
கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த
பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க
அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை,
நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி
நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.
அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை,
சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து
சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள
ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம்,
வயிற்றுப்போக்கு தீரும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக்
காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத
பெரும்பாடு தீரும்.
அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20
என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5
நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து
சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச்
சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.
அத்தி மரத்தை வெட்டினால் பால்
வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து
வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால்
சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி.
வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும்.
எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.
இதன் அடிமரப்பட்டையை இடித்துச்
சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண்
குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு
அருந்தலாம்.
அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து
10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.
அத்திப்பிஞ்சை பருப்புடன்
கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில்
சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.