வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் ‘சிபில்’!
கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையைப் பயன்படுத்தும்
அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு, Credit
Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு, அதை புள்ளிவிவரமாக வழங்குவதே.
இதன்மூலம் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் வங்கிக்கு `அல்வா ` கொடுப்போரைக் கண்டறிந்து கொள்ள
முடியும் என்பது வங்கிகளின் நம்பிக்கை.
அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும்
வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்டு – பான் கார்டு போன்றவற்றின் எண்களும்
இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத
வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு
வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற
முடியாது.
ஏற்கெனவே ஆதார் அடையாள அட்டை மூலம் ஒருவரின் தகவல்கள் பிறப்பு ,வசிக்கும் இடம், ரத்த வகை,தொழில்,கண் அடையாளம்,கை ரேகை என அனைத்தும் அரசாங்கத்திடம்
கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பல்வேறு விமர்சனங்கள்
வெளிவந்துள்ளன. பிரைவசி என்ற தனிமனித சுதந்திரம் இல்லாத சூழல், தீவிரவாதிகளின் செயல்களுக்கு எளிதாக
இந்த தகவல் உதவும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இப்போது, ` CIBL` எனப்படும் க்ரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ லிமிடட் ஆன `கடன் தகவல் பணியகம் (இந்தியா)
லிமிடெட்` ஒரு புதிய கோரிக்கையை இந்திய ரிசர்வ்
வங்கியிடம் வைத்துள்ளது குறித்தும் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிறுவனம், இந்திய வங்கி
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாங்கி உள்ள
கடன்களைக் கவனிக்க ட்ராய் (Telecom
Regulatory Authority of India -TRAI) மற்றும் இர்டா ( Insurance
Regulatory and Development Authority -IRDA) ஆகிய நிறுவனங்கள் உதவ வேண்டும்
என்பதே அந்த கோரிக்கை.
`ட்ராய்` மற்றும் `இர்டா`இந்த கோரிக்கையை நிறைவேற்றி உதவும்
பட்சத்தில் வாடிக்கையாளர்களின்
டிஜிட்டல் டேட்டாக்கள், இமெயில்கள், தொலைபேசி
அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக், கணினித் தகவல்கள் என்று அனைத்துமே கண்காணிக்கப்படும் ஆபத்து
உள்ளது. சுத்தமாக பிரைவசி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதே
யதார்த்தம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு
எட்வர்ட் ஸ்னோடன் என்ற கணிணி வல்லுநர், அமெரிக்க நாடானது உலகின் அனைத்து
நாடுகளின் மீதும் டிஜிட்டல்
முறையில் கண்காணிக்கிறது என்று கூறி இருந்தார்.
மேலும் அவர், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, சேகரித்த செய்திகள், உளவுத் தகவல்கள் , ஆவணங்கள், ரகசியங்கள் தோராயமாக எண்ணிகையில் 6.3 பில்லியன்கள் என்றும், உலக அளவில் அமெரிக்க கண்காணிப்பில்
இந்தியா 5 ஆம் இடத்தில்
உள்ளதையும் அம்பலப்படுத்தினார்.
இதற்கு உடந்தையாக இருந்தது
டெல் என்ற கணினி நிறுவனம். டெல் நிறுவனம்தான் இந்த கண்காணிப்பு சாப்ட்வேர்கள், ப்ரோகிராம்கள், கணினி வல்லுநர்களுக்கு பயிற்சி என்று
சகலமும் அளித்தது. இத்தனைக்கும் அமெரிக்காவின் பல அரசு மற்றும் அரசு சார்ந்த
நிறுவனகளின் வெப்சைட்கள் டெல் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது
கவனிக்கத் தக்கது.
இந்நிலையில் இந்த சிபில் நிறுவனம் சேவை மனப்பான்மையிலேயே செய்வதாகக்
கூறினாலும், இதை வேறு ஒரு தனியார் நிறுவனமோ
அல்லது தீவிரவாத இயக்கமோ பயன்படுத்திக்
கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த 26-11-2008
ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவம்
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடுதான் நிறைவேற்றப் பட்டது என்று இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. அந்த
சம்பவத்திற்குக் காரணம் டிஜிட்டல் டேட்டா
என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். பாகிஸ்தானின்
ஐஎஸ்ஐ அமைப்பு ஒரு கத்துக்குட்டி
அமைப்பு அல்ல. பல நேரங்களில் அமெரிக்கா
உதவும் , அமெரிக்கா பயிற்சியும் கொடுத்து வளர்க்கும் அமைப்பு என்பது பல முறை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் நிரூபணம் செய்கின்றன.
இந்நிலையில், சிபில், ட்ராய் மற்றும் இர்டா உதவியை பெற்றால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய சிக்கல் வரும்
ஆபத்து உள்ளது. பாதுகாப்பிற்கென
பிரத்யேகமாக வேலைபார்க்கும் `ஐ பி`க்கும், வெளி நாட்டு விவகாரங்களின்
பாதுகாப்பு பணியில் இருக்கும் `ரா` விற்கும் எந்த வித்தியாசமும்
இல்லாமல் போய்விடும்.
இப்போதே நம் தொலைபேசி எண்ணிற்கு ஏதேதோ நிறுவனங்களில் இருந்து பல
குறுஞ்செய்திகள், அழைப்புகள்
வருகின்றன. இதனை யாரும் மறுத்திட
முடியாது. இந்நிலையில் பேஸ்புக் போன்ற
சமூக வலைத்தளங்கள் தனி மனிதர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என்பதை
நிரூபணம் செய்கின்றன.
இந்நிலையில் CBIL
என்ற தனியார்
நிறுவனம் ஒன்றிடம் மக்களை, வங்கிகளின்
வாடிக்கையாளர்களைக் கண்காணிக்கும்
அனுமதியை மத்திய அரசு தருவதை மறுபரிசீலனை செய்வது நல்லது.
About Author

Advertisement

Related Posts
- ஆண்களின் ஏழு பருவங்கள்..!! | Do you know the seven stages of Men?26 Apr 20200
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் பு...Read more »
- பெண்களின் ஏழு பருவங்கள் தெரியுமா? | Do you know the seven stages of women?22 Apr 20200
ஜனனம் முதல் மரணம் வரை உறவுகள் அடிப்படையில் நாம் பல பரிணாமங்களால் அடையாளப்படுத்தப்படுகிறோம். பெ...Read more »
- ஏழு என்ற எண்ணுக்கு இத்தனை மகத்துவமா? | How great is the number seven?22 Apr 20200
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் ...Read more »
- இறப்பதற்கு முன் பிரபல மனிதர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்!28 Mar 20200
இறப்பதற்கு முன் பிரபல மனிதர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்! இறப்பதற்கு...Read more »
- தீர்ப்பு எழுதிய பேனா எதற்காக உடைக்கப்படுகிறது?22 Jul 20170
ஒரு வழக்கினை நடத்தும் நீதிபதி, அந்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பை வழங்கி அதனை நிறைவு செய்யும் ப...Read more »
- உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!! twelve freaky women that exist the world27 Feb 20170
உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!!! நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்ம...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.