இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில்
இருக்கிறது. இது கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. இது மேற்கு
தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும். நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்)
தொலைவில் இருக்குகிறது இந்த அணைக்கு. போறதுக்கு நாகர்கோவில்ல இருந்து நிறைய பஸ்
வசதிகள் இருக்கு. பேச்சிபாறை போற வழிலாம்
மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். இங்க
இருக்கும் மக்கள் கூட கேரள கலாச்சாரங்களையே பிரதிபலிக்குறாங்க.
பேச்சிபாறையிலும் சிறிய பஸ் ஸ்டான்ட்
இருக்கு. இந்த அணை மாணவ மாணவியருக்கும் கல்வி சுற்றுலாகவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இது தொழிநுட்ப சுற்றுலாகவும் போறதுக்கு
தகுந்த இடம்.
இந்த அணைக்கட்டு திருவிதாங்கூர்
மகாராஜா மூலம் திருநாள் காலத்தில்
ஐரோப்பிய பொறியாளர் திரு ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் அவர்களால் 1897-1906 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்ட
செலவழிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இந்த அணையின் உயரம்
முதலில் 42 அடியாகதான் இருந்ததாம். . பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டி
முடிக்கப்பட்டதாம்.
இந்த அணையை கட்டிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவுச்
சின்னமும், கல்லறையும் இங்க காணப்படுது.
இவரது காலம் (பிறப்பு) 08.10.1868 -(இறப்பு) 25-09-1913 அவர் முதலில் சென்னை பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில்
நகராட்சி பொறியாளராக பணியாற்றினாராம். பின்னர், திருவிதாங்கூர்
அரசாட்சியில் அணைகட்டுவதற்காக பணியில் அமர்த்தபட்டதாக கூறப்படுது. ஹம்ப்ரி
மிஞ்சின் தனது 45 வயதில் 1913 ல்
காலமானார்.
இந்த அணையின் கொள்ளளவு 207.19 சதுர கிலோமீட்டர்கள். ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள். இந்த பகுதியில்
காணப்படும் நீர்நிலைக்கு பின்புறம் இருக்கும் மலையில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள்
படகுமூலம் தான் போக்குவரத்து செய்கின்றனர்.
இந்தமலையில் எல்லாவிதமான
காட்டுமிருகங்களும் இருக்குறதா சொல்றாங்க இங்க வாழும் மலைவாழ் மக்கள். இந்த இடம் முழுதும் பாரஸ்ட் துரையின்
கட்டுபாட்டில்இருக்கு. இந்த பரந்த நீர்நிலையால் கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும்
ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுது. சுமார் 50
ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றதாம்.
பேச்சியம்மன் கோவில்
இங்கு கரையில் பேச்சியம்மன் கோவில் உள்ளது
இந்தக் கோவில் கேரளபாணி கட்டிடகலை அமைப்பில்
இருக்கு. பூஜை செய்பவர்கள் கூட நம்பூதிரி வகையினர் போலதான் இருக்காங்க.
பசுமையான மரங்களுக்கு இடையில் கோவில் பார்க்க
ரொம்ப அழகா இருக்கு. பார்பதற்கு பரவசமூட்டும் அம்மனின் சிலை கருணை வடிவாக
அலங்காரத்துடன் இருந்தது. அம்மனை கும்பிட்டு அங்கே இருந்து கிளம்பலாம்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON