Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தேங்காய்ப்பட்டணம் கடற்கரை - தேங்காய்ப்பட்டினம் கடற்கரை- Thangaipattanam Beach Kumari Dist
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். அரபிக்கடலில் அமைந்துள்ள இக் கடற்கரை ...
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். அரபிக்கடலில் அமைந்துள்ள இக் கடற்கரை முழுவதும் தென்னை மரங்களால் சூழ்ந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த கடற்கரையில் தான் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கின்றது. இதை தேங்காய்ப்பட்டணம் காயல் என்றும் அழைப்பர்.
குமரியின் மெரீனாவான தேங்காய்ப்பட்டணம் கடற்கரை  வெள்ளை மணலுடன் பரந்து விரிந்து பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் திகழ்கிறது கடற்கரை கிராமம். இது பழங்காலத்தில் வெளிநாடுகளுடன் குறிப்பாக அரேபியாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இந்தக் காயலில் படகு சவாரி செய்யும் அனுபவம் தனிப்பரவசம். விளவங்கோடு வட்டம் பேயன்குளம் கிராம் அருகே மேற்குக் கடற்கரை சாலையில் தேங்காய்ப்பட்டினம் அமைந்துள்ளது. இந்தக் கடலோர கிராமத்தை கண்டுகளிக்க நாகர்கோவிலிருந்து 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.




About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top