Home
»
TRAVELLING BLOG
»
சுற்றுலா
»
பயணம்
» பூலோக சொர்க்கத்தை பார்க்க விரும்பினால் செலா பாஸ் மலைப்பாதை பகுதி மற்றும் தவாங் சென்று வாருங்கள் - sela pass to tawang
Subash KumarLinkAuthorThe part time Blogger love to blog on various categories
Title: பூலோக சொர்க்கத்தை பார்க்க விரும்பினால் செலா பாஸ் மலைப்பாதை பகுதி மற்றும் தவாங் சென்று வாருங்கள் - sela pass to tawang
Author: Subash Kumar
Rating 5 of 5
Des:
செலா பாஸ் - நுழைவாயில் பூமியிலேயே இருக்கும் ஒரு சொர்க்கத்தை பார்க்க விரும்பினால்...
செலா பாஸ் - நுழைவாயில்
பூமியிலேயே இருக்கும் ஒரு சொர்க்கத்தை பார்க்க விரும்பினால் இந்த செலா பாஸ்
எனும் மலைப்பாதை பகுதிக்கு நீங்கள் கட்டாயம் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். அப்படி
ஒரு அற்புதமான இயற்கை எழிலோடு இப்பிரதேசம் ஜொலிக்கிறது.
குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள மலைகள் பனியால் மூடப்பட்டு வெள்ளிமலைகள்
போன்று ஒளிர்கின்றன. பெரும்பாலும் வருடம் முழுக்கவே இப்பகுதியிலுள்ள மலைகள்
பனிமூடி காட்சியளிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் காணப்படும் கிழக்கு இமாலய மலைகளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள்
விசேஷமான ஸ்தலமாக கருதுகின்றனர். 101 ஏரிகள் இந்த செலா பாஸ் மலைப்பாதையை
சுற்றிலும் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஒவ்வொரு ஏரியும் மத நம்பிக்கைகளின்படி புனிதமானதாக கருதப்படுகிறது.
குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவினாலும் இந்த செலா பாஸ் திறந்தே
வைக்கப்படுகிறது. நிலச்சரிவு அல்லது கடும்பனி உறைவு நிகழும் சமயங்களில் மட்டும்
இப்பாதை தற்காலிகமாக மூடப்படும்.
தவாங் tawang – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச
மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில்
கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது.
வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா
மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது
எல்லைகளாக கொண்டுள்ளது.
தவாங் வார் மெமோரியல் - முகப்புத் தோற்றம்
இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது
குறிப்பிடத்தக்கது. தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில்
இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. ‘த’ என்பது
குதிரையையும் ‘வாங்’ என்பது ‘தேர்ந்தெடுத்த’ என்பதையும் குறிக்கிறது.
வழங்கி வரும் கதைகளின்படி, இந்த மடாலயம் அமைந்திருக்கும் இடமானது மேராக்
லாமா லோட்ரே கியாம்ட்சோ எனும் மதகுரு வைத்திருந்த குதிரை தேர்ந்தெடுத்த ஸ்தலமாக
சொல்லப்படுகிறது. ஒரு மடாலயம் அமைப்பதற்கு ஏற்ற ஒரு ஸ்தலத்தை இந்த மேராக் லாமா லோட்ரே
கியாம்ட்சோ தேடிக்கொண்டிருந்தபோது அதற்கேற்ற இடத்தை அவரால் முடிவு செய்ய
இயலவில்லை. எனவே அவர் தியானத்தில் அமர்ந்து இறைவழிகாட்டலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
பின்னர் தியானம் முடிந்து அவர் கண்விழித்தபோது தனது குதிரை காணாமற்போயிருப்பதை
தெரிந்துகொண்டார். குதிரையை தேடித்திரிந்த அவர் இறுதியில் அது ஒரு மலையின் உச்சியில் நிற்பதை
கண்டார் மடாலயம் அமைப்பதற்கேற்ற இடம் குறித்த இறைவழிகாட்டல் தனது குதிரை மூலமாக
கிடைத்தது போன்று அவர் உணர்ந்தார். எனவே ‘குதிரை தேர்ந்தெடுத்த இடம்’ எனப்பொருள்படும்
‘தவாங்’ என்ற பெயரில்
அந்த ஸ்தலம் அழைக்கப்படலாயிற்று.
தூய இயற்கைச்சூழலும், பிரமிப்பூட்டும் மலை எழிற்காட்சிகளும்
நிறைந்த சொர்க்கபூமி போன்றே இந்த தவாங் நகரம் காட்சியளிக்கிறது. சூரிய உதயத்தின் கதிர்கள் இப்பகுதியிலுள்ள சிகரங்களில் பட்டுத்தெறிப்பதும்
சூரிய அஸ்தமனத்தின் வெளிச்சம் தொடுவானமெங்கும் கவிழ்ந்திருப்பதும் வேறெங்கும்
காணக்கிடைக்காத தரிசனங்களாகும்.
தவாங் மலைவாசஸ்தலம் மற்றும் ஒட்டியுள்ள சுற்றுலா அம்சங்கள்
தவாங் மலைநகரத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் அம்சங்களாக
மடாலயங்கள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை
அமைந்திருக்கின்றன.
தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இவற்றில்
குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல
நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும்
அற்புத தோற்றங்களாகும்.
ஒரு விசேஷமான இடத்துக்கு விஜயம் செய்ய விரும்பும் தீவிர இயற்கை ரசிகர்கள்
யோசிக்காமல் தங்களது அடுத்த பயணத்திற்கு இந்த தவாங் மலை வாசஸ்தலத்தை
தேர்ந்தெடுக்கலாம். ஒரு சொர்க்கலோகம் போன்று இந்த தவாங் மலைநகரம் மலையுச்சியில்
வீற்றிருக்கிறது.
தவாங் மலைநகரத்திற்கு விஜயம் செய்ய உகந்த பருவம்
வருடத்தின் பெரும்பான்மையான மாதங்களில் இங்கு மிதமான பருவநிலையே நிலவுகிறது.
பொதுவாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு
சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் காணப்படும்.
தவாங் மலைநகரத்திற்கு எப்படி பயணம் மேற்கொள்வது
நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும்
தேஜ்பூர் வழியாக தவாங் மலைநகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். குவஹாட்டி வரையில்
உள்நாட்டு விமான சேவைகள் உள்ளன. டெல்லியிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ்
நிறுவனங்களின் விமான சேவைகள் குவஹாட்டிக்கு தினசரி இயக்கப்படுகின்றன. இது தவிர
குவஹாட்டி நகரத்துக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.
தக்த்சங் மடாலயம் (புலிக்குகை), தவாங்
தவாங் மலைநகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த தக்த்சங் மடாலயம்
அமைந்துள்ளது. இது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக
கூறப்படுகிறது. ஒரு மலைக்குன்றின் சரிவான விளிம்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த
மடாலயத்தை சுற்றிலும் பசுமையான வனப்பகுதிகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள்
சூழ்ந்து காட்சியளிக்கின்றன.
இந்த மடாலயத்திற்கு விஜயம் செய்யும் யாத்ரிகளுக்கு குரு பத்மஷாம்பவா தியானம்
செய்த ஸ்தலத்தை நோக்கி ஒரு தீர்த்த யாத்திரையும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
தக்த்சங் மடாலயத்தின் சூழலும் நிசப்தமும் பார்வையாளர்களின் மனோநிலையை அடியோடு
மாற்றும் சக்தி கொண்டவையாக காட்சி அளிக்கின்றன.
அதாவது மனோகர்வமும் கசடுகளும் அகன்று குழந்தை போன்ற மனத்தூய்மை நம்முள்
நிறைவதை இங்கு அனுபவித்துணரலாம். இயற்கை ஏற்படுத்தும் பிரமிப்பு ஒருபுறம் இருக்க, மதத்துக்காக
மனிதன் எடுத்துக்கொண்ட சிரமம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
மதம் மனத்தூய்மைக்காக என்றால் அதனை உயர்த்திக்காண்பிக்க நம் மூதாதையர்கள் பல
வகையில் முயன்றிருக்கின்றனர் என்பது இந்த கோயிலின் அபாயகரமான ஸ்தலத்திலிருந்து
புலனாகிறது. செலா பாஸ் மலைப்பாதை பகுதி மற்றும் தவாங் பயண வீடியோ உங்கள் பார்வைக்கு
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.