Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து , இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே பி...
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே செல்கிறது.

உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!
- திருமந்திரம் – 309

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!
- திருமந்திரம் 197

இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள். மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது என யாருக்காவது தெரியுமா என்றால் அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
- திருமந்திரம் 1777

ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!
- மாணிக்கவாசகர்

ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
- திருமந்திரம் 1797

உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே!

- சிவவாக்கியர்

இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு எனக் கூறப்படுகிறது.
 

இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.

தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்
- திருமந்திரம் 1823-

வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின் அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள்.

ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால் ,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின் அளவாகுமாம். இதைக் கூறியது நம் திருமூலர்தான்.
 



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top