Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: முத்தம் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்! - information about the kiss you know
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நீங்கள் முதல் முறை முத்தமிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? அது விசித்திரமான , அருமையான , அதே சமயம் அதிசயமான அனுபவமாக இருந்ததா ? உண்மை தா...
நீங்கள் முதல் முறை முத்தமிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அது விசித்திரமான, அருமையான, அதே சமயம் அதிசயமான அனுபவமாக இருந்ததா? உண்மை தான். முத்தமிடுவது சிற்றின்ப சம்பந்தமான அனுபவமாக அமையும். இந்த முத்த விளையாட்டு அடுத்த கட்டமான உடலுறவுக்கு உங்களை அழைத்து செல்லுமா என்றால், அது அந்த முத்தத்தின் தன்மையை பொறுத்து தான் உள்ளது. முத்தங்கள் பற்றி நீங்கள் அறிந்திராத சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உள்ளன. அதனைப் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

முத்தம் என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை உடலுறவுக்கு ஒரு படி மேலேயே எடுத்துக் கொள்ளலாம். பின்ன என்ன முத்தமிடுவதால் கர்ப்பம் ஆக முடியாது அல்லவா! ஆனால் முத்தமிடுவதால் STD நோய்கள் வரக்கூடும். அதனால் கவனமாக இருங்கள். உங்கள் உதட்டிலோ அல்லது வாயிலோ வெட்டுக் காயம் அல்லது புண் ஏதேனும் இருந்தால் பாலியல் நோய்கள் பரவலாம்.

முத்தத்திற்காக நீங்கள் ஏங்குவது புரிகிறது. அதனை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். இப்போது முத்தங்கள் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முத்தத்தினால் உடல்நல பயன்கள் உள்ளது
எப்படி முத்தமிடுவது என இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? யோசனை வேண்டாம், செயலில் இறங்குங்கள்! இதில் பலவித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் பற்களுக்கு நல்லதாகும். மேலும் உங்கள் துணைக்கு இருக்கும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் நீங்கும். முக்கியமாக உங்களை இளமையுடன் காண வைக்கும்.

மகிழ்ச்சிகரமான அனுபவம்; உடற்பயிற்சியும் கூட
முத்தமிடுவது என்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்; அதே சமயம் அது ஒரு மணிநேரத்திற்கு 1500 கலோரிகளை எரிக்கும். முத்தமிடும் வழிகளைப் பற்றி பேசுகையில், ஃபிரெஞ்ச் கிஸ் முகத்தில் உள்ள 34 தசைகளை செயல்பட வைக்கும். அதனால் முகத்திற்கு இது சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது.

முத்தத்திற்கு அடிமையாவது
முத்தத்தைப் பற்றிய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் அது ஒரு போதை மருந்தை போல் செயல்படும்! முத்தமிடும் போது வெளிப்படும் என்டார்பின்கள், மார்ஃபைன் மருந்தின் அளவை காட்டிலும் சக்தி வாய்ந்த தாக்கத்தை கொண்டிருக்கும். முத்தமிடுவது பழக்கம் நம்மை அதற்கு அடிமையாக்கும். ஆனால் இதற்கு அடிமையாவதைப் பற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை; சட்டப்படியும் அதனை செய்யலாம்.

முத்தத்தின் பின்னணியில் உள்ள அறிவியல்
நாம் ஏன் முத்தமிடுகிறோம் என்ற காரணம் தெரியவில்லை என்றாலும் கூட, நம்மை முத்தமிட தூண்டும் அறிவியலை ஃபில்லேமாட்டோலஜி என அழைக்கின்றனர். இதற்கிடையில் முத்தமிட ஏற்படும் பயத்தை ஃபில்லேமாஃபோபியா என அழைக்கின்றனர். பாலியல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் பிற காரணங்களால் இந்த பயம் ஏற்படலாம்.

உணர்ச்சிமிக்கவை நம் இதழ்கள்
உதடுகளில் எண்ண முடியாத அளவில் நரம்பு முடிவுகள் உள்ளது. உங்கள் துணையை நீங்கள் முத்தமிடும் போது எழும் உடனடி தூண்டுதலுக்கு இதுவே காரணம். கண்டிப்பாக இது உங்களுக்கு தெரிந்திருக்காது.

முத்தமிடும் போது கிருமிகள் பரவும்
உங்கள் துணையை முத்தமிடுவதற்கு முன்பு பற்களை நன்றாக துலக்கி விடுங்கள். அதற்கு காரணம் உங்கள் வாயில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கும். நீங்கள் முத்தமிடுவதை உங்கள் துணை விரும்பினாலும் கூட, உங்கள் வாயில் இருந்து வரும் கிருமிகளை அவர் விரும்பமாட்டார்.

டெஸ்டோஸ்டிரோனை ஆண்கள் இடமாற்றுவார்கள்
மற்றொரு முத்தமிடும் தகவல்; குறிப்பாக ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் போது ஆண்கள் தங்களிடம் இருந்து டெஸ்டோஸ்டிரோனை அனுப்புவார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஆண்களின் எச்சிலில் தான் டெஸ்டோஸ்டிரோன் இருக்கும். பெண்களின் வாயில் இருக்கும் சீத சவ்வுகள் டெஸ்டோஸ்டிரோனை உறிஞ்சிடும். இதனால் உடலுறுவு கொள்ளும் வாய்ப்புகளும், இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

ஆண்கள் மற்றும் பெண்களின் குணம்
மோசமாக முத்தமிடுபவருடன் உடலுறவில் ஈடுபட பெண்கள் விரும்ப மாட்டார்கள். உடலுறவில் ஈடுபட ஆண்கள் தங்களது போக்கில் முத்தமிடுவார்கள். ஆனால் பெண்களுக்கோ உடலுறவு செய்த முடித்த பின்னர் முத்தமிட வேண்டும். ஆண்களுக்கோ உடலுறவு முடிந்த பிறகு எல்லாம் முடிந்து விடும், பெண்களுக்கோ உடலுறவு முடிந்த பிறகும் அன்பை பரிமாற வேண்டும். இது ஆண் மற்றும் பெண்ணுக்கு உள்ள வேறுபட்ட உளவியலாகும்.

நீண்ட முத்தம்
உலகத்திலேயே நீண்ட முத்தம் 58 மணிநேரம், 35 நிமிடங்கள் மற்றும் 58 நொடிகள் வரை நீடித்தது. அதை கொடுத்தவர்கள் தாய்லாந்து தம்பதியான எக்கச்சை டிரனராத் மற்றும் லக்சனா டிரனராத். தாய்லாந்து நாட்டில் 2013 ஆம் ஆண்டில் காதலர் தின கொண்டாட்டத்தின் போது, ரிப்லீயின் பிலீவ் இட் ஆர் நாட் நடத்திய நிகழ்வின் போது அவர்கள் இந்த சாதனையைப் புரிந்தனர்.



15 Feb 2015

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...