மகப்பேறு உதவிகள்
மகப்பேறு உதவிகள் என்பது காப்பீடு பெற்றுள்ள பெண் தொழிலாளர்களுக்கு அவர்கள் கர்ப்பம் தரித்திருக்கும்போது, கருச்சிதைவு அல்லது கர்ப்பத்தால் ஏற்படும் சுகவீனத்திற்கு, பிரசவம், குழந்தை முன்கூட்டியே பிறப்பது
போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலையில் இருந்து விடுப்பு பெறுவதற்காக வழங்கப்படும் பயன்களாகும். பிரசவம் என்பது 26 வார கால கர்ப்பத்துக்குப் பிறகு குழந்தை பிறப்பது என்று அர்த்தமாகும். கருச்சிதைவு என்றால் கர்ப்பிணியின் கருப்பையில் இருக்கும் கரு சிதைந்து போவது என்று அர்த்தமாகும். இது கர்ப்பகாலத்திற்குள் ( 26 வாரம் வரை ) ஏற்படக்கூடியதாகும். கிரிமினல் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக பயன் எதுவும் கிடைக்காது.
இந்த பயன்கள் கீழ்க்கண்ட விதத்தில் வழங்கப்படும்.
(அ) பிரசவத்துக்கு
குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கும் தேதிக்கு 6 வாரங்கள்
முன்பாகவோ அல்லது குழந்தை பிறந்த பிறகு மொத்தமாக 12 வாரங்களுக்கு
மிகாமல் இந்த பயன் கிடைக்கும். ஒரு வேளை காப்பீடு பெற்ற நபர் பிரசவத்தின் போது அல்லது அதற்குப்பிறகு 6 வார காலத்துக்குள் இறந்து விட்டால் குழந்தை உயிருடன் இருந்தால் இந்த பயன் முழு காலகட்டத்துக்கும் (12 வாரம்) வழங்கப்படும். ஆனால் குழந்தையும் அந்த காலத்துக்குள் இறந்து விட்டால் அதாவது அந்த குழந்தை இறந்த நாள் வரை பயன் கிடைக்கும்.
குறிப்பிடப்பட்ட பிரசவ நாளுக்கு 42 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது
அதன் பின்னரோ, அல்லது பிரசவம் முடிந்து பணிக்குத் திரும்புவதற்கு முன்போ, அல்லது அதற்கு பின்னரோ, உரிய மருத்துவச் சான்றுகள் மற்றும் நிறுவன உரிமையாளர் சான்றுகள் பெற்று உரிய கோரிக்கை மனுவுடன் சமர்ப்பித்து இவ்வுதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
(ஆ) கருச்சிதைவு
கருச்சிதைவு ஏற்பட்ட தினத்தை அடுத்துள்ள 6 வாரங்களுக்கு பயன்
கிடைக்கும்.
(இ) கர்ப்பம், பிரசவம், குழந்தை முன்கூட்டியே பிறப்பது போன்ற காரணங்களால் மேலே குறிப்பிட்டிருக்கும் 12 வார கா லத்திற்கு பின்னும் (நோய்கள் அல்லது கருச்சிதைவு ஏற்பட்டதால் உண்டாகும் நோய் ஆகியவற்றிற்கு கூடுதலாக 1 மாத காலத்திற்கு பயன் கிடைக்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும் காப்பீடு பெற்ற பெண் காப்பீட்டு நபர் வேறெந்த சலுகைக்காகவும் அந்த கால கட்டத்தில் தனது தொழிலகத்தில் வேலை செய்யாதபோது மட்டுமே கிடைக்கும்.
பேறுகால உதவி
பெண் காப்பீட்டு நபர்கள் தாய்மையடையும் பட்சத்தில் பணிக்குச்செல்ல
இயலாத நிலை ஏற்படுகிறது. சுமார் மூன்று மாத காலமாவது அவர்களுக்கு முழு ஓய்வு தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பேறுகால உதவித்தொகை அதிகபட்சமாக 84 நாட்களுக்கு பெண் காப்பீட்டு நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏறக்குறைய முழுச் சம்பளம் அவர்களுக்கு ஈடு கட்டப்படுகிறது.
மற்றும் கருச்சிதைவின் காரணமாக பணியாற்ற முடியாத காலத்தில்
பெண் காப்பீட்டு நபர்கள் உரிய மருத்துவச் சான்று பெற்று 42 நாட்கள் வரை
குறைபிரசவத்திற்கான உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். இது பேறுகால
உதவித்தொகையை ஒத்திருக்கும்.
இந்த உதவித்தொகையை வாரந்திரமாகவோ, (7-நாட்களின் மடங்கு)
அல்லது ஒட்டு மொத்தமாக காசோலையாக 84 நாட்களுக்குப்பின்னும்
பெற்றுக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட சாதாரண நோய்க்கால உதவித்
தொகையைப் போல் இரு மடங்கு கணக்கிடப்பட்டு அதிகபட்சமாக 84 நாட்கள்
வரை வழங்கப்படுகிறது. முன்பணம் வழங்கப்பட மாட்டாது.
தகுதிகள்
எதிர்பார்ப்பு பிரசவ நாள் அல்லது பிரசவ நாள் ஆகிய ஏதோ ஒன்றில்,
காப்பீட்டு நபரின் மகப்பேறு உதவித்தொகை கோரிக்கையின் அடிப்படையில்,
பயனீட்டு காலத்தின் முந்தைய, அடுத்தடுத்து இருக்கும் இரண்டு சந்தாக்
காலங்களில் செலுத்தப்பட்ட சந்தா த்தொகை நாட்களுக்கு கணக்கிடப்
படவேண்டும். மேலும் இவ்விரு சந்தாக் காலத்திற்குள்ளும் அவர் சந்தா தொகை செலுத்தப்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் இவ்விரு சந்தாக் காலத்திலும் சேர்ந்து குறைந்த பட்சம் 70 நாட்கள் சந்தாத் தொகை செலுத்தியிருக்க வேண்டும்.
பிரசவத்திற்கான மருத்துவ செலவீட்டுத்தொகை
இ.எஸ்.ஐ. திட்ட மருத்துவமனைகளில் பிரசவிக்கும் வசதிகள் இல்லாத
ஊர்களிலும் திட்ட அமலாக்கம் இல்லாத ஊர்களிலும் பெண் காப்பீட்டு நபர் ,
காப்பீட்டு நபரின் மனைவி பிரசவிக்க நேரிடுகையில் அவர்களுக்கு ஏற்படும்
செலவுத்தொகையை ஈடு செய்வதற்காக அதிகபட்சம் ரூ.1000/- வழங்க இத்திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளது.
நன்றி !!

Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON