சீனாவில் இணையதளங்களில் ஒரு விநோத விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. $6000 டாலருக்கு வியட்நாமைச் சேர்ந்த ஒரு மனைவியை விலைக்கு வாங்கலாம் என்றும், அவ்வாறு வாங்கப்படும் பெண்ணுக்கு கன்னித்தன்மை கேரண்டி கொடுக்கப்படும் என்றும், ஆர்டர் செய்த 90 நாட்களுக்குள் மனைவி டெலிவரி செய்யப்படுவார் என்றும்,$6000 தவிர வேறு எதுவும் கட்டணங்கள் கிடையாது என்றும், ஒருவேளை விலை கொடுத்து வாங்கப்படும் மனைவி, ஒரு வருடத்திற்குள் உங்களை விட்டு ஓடிவிட்டால், அவருக்கு பதிலாக வெறொரு பெண் இலவசமாக வழங்கப்படுவார் என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.
இந்த விளம்பரத்தால் இணைய உபயோகிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏதோ பொருட்களை வாங்குவதை போல விளம்பரம் கொடுத்துள்ள இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் தங்கள் விளம்பரத்தில் தங்களது தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளனர். அந்த எண்கள் உண்மையானவையா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன பெண்கள் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் சமீபகாலமாக விபச்சாரம் கொடிகட்டி பறக்கின்றது என்றும், தனிமனித ஒழுக்கம் என்பது அதிகளவில் குறைந்து கொண்டே வருகிறது என்றும், ஒரு கருத்துக்கணிப்பு கூறுகின்றது. எனவேதான் சீனாவில் புதியதாக இந்த வருடம் மட்டும் 70000 எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த சர்வே கூறியுள்ளது. எனவே இந்தியா போன்ற நாடுகள் கடைபிடிக்கும் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையை சீன மக்கள் இடையே பரப்பி தனிமனித ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.