Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கலைப்பொக்கிஷம் நிறைந்த வரலாற்று சின்னம் பேலூர் சென்னகேசவர் திருக்கோவில்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
க லைப்பொக்கிஷம் நிறைந்த வரலாற்று சின்னமாக திகழ்கிறது கர்நாடகா மாநிலத்தில் உள்ள பேலூர் சென்னகேசவர் திருக்கோவில். கர்நாடகா மாநிலம் ஹாசன்...

லைப்பொக்கிஷம் நிறைந்த வரலாற்று சின்னமாக திகழ்கிறது கர்நாடகா மாநிலத்தில் உள்ள பேலூர் சென்னகேசவர் திருக்கோவில். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் பேலூர்.

 யாகாச்சி நதியின் ஓரத்தில் கம்பீரமாக வளமையான பகுதியாக இந்நகரம் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் பேலூர் என்கிற இந்நகரம் வேலாபுரி என அழைக்கப்பட்டது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தக்காணம் வரை ஹோய்சால மன்னர்கள் அரசான்டனர். சாலா என்பவர் புலியுடன் தனியாக மோதினார். அப்போது ஹோய்சாலா ஹோய்சாலா என மக்கள் ஊக்கம் தந்தனர். ( ஹோய் என்றால் கன்னடத்தில் மோது, சாலா என்பது பெயர்.) இரண்டும் இணைந்து ஹேய்சாலா என மாறியது. புலியையும் வென்றார். அந்த சாலாவிற்கு பின் வந்தவர்களே ஹோய்சாலா வம்சம் என அழைக்கப்பட்டனர். 

கி.பி 10ம் நூற்றாண்டில் இருந்து 14 நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் ஹோய்சாலா வம்ச மன்னர்கள் அரசாண்டனர். 950 ஆம் ஆண்டு ஆரக்கௌ;ள என்பவரின் தலைவனாக இவ்வம்சத்தின் வரலாறு தொடங்குகிறது. பின்னர் நிரிபா காமா, வினாயதித்தா, ஈரேயேங்கா, பல்லாலா, விஷ்ணுவர்தனா, நரசிம்மா, வீரபல்லாலா, வீரநரசிம்மா, வீரசோமஸ்வரா, நரசிம்மா 2, வீர பல்லாலா 3, ஹரிஹர ராயார் கடைசி அரசராவார். 

சாளுக்கியர்கள், சோழர்கள் ஆகியோர்களை வெற்றி பெற்று அரசை பலமாக்கினர். விஷ்ணுவர்தன் அரசனாக இருந்தபோது பேலூர் நகரத்தில் இருந்து ஹலபேடு என்ற மற்றொரு நகருக்கு தலைநகரத்தை மாற்றினார். இரண்டு நூற்றாண்டுக்கு பின் வீர பல்லாலா-3 காலத்தில் அதாவது கி.பி 1311ல் டில்லி சுல்தான் படையெடுப்பால் ஹலபேடு சிதைக்கப்பட்டபின் மீண்டும் பேலூருக்கேதலைநகரம்மாற்றப்பட்டது. 

ஹோய்சாலா நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திவந்த சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற விஷ்ணுவர்தன்,   கி.பி. 1117 ஆம் நூற்றாண்டில் பேலூரில் சென்னகேசவருக்கு கோயில் கட்ட தொடங்கினார். இத்திருக்கோவில் போர் வெற்றியை குறிக்கவே கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் கட்டுமானப்பணி விஷ்ணுவர்தனின் பேரன் வீரபல்லாலா காலத்தில் தான் முடிவுற்றது. 


வரலாறு:
சென்னகேவசன் என்பது கம்பீரமான விஷ்ணு என்பது பொருளாகும். கர்ப்ப கிரகத்தில் உள்ள சென்னகேசவர் திருவுருவத்திற்கு பின் சுவாரஸ்யமான வரலாறு உண்டு.   தும்கூர் மாவட்டம் கைதாலா என்ற கிராமத்தில் புகழ்பெற்ற சிற்பியாக இருந்தவர் ஜகனாச்சாரி. பேலூரில் கோயில் கட்ட கிளம்பும்போது அவரின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். கோயில்கான சிற்பங்கள் செதுக்கும் பணியில் இருந்தபோது அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து வளர்ந்து வாலிபனமாக தந்தையை தேடி வந்துள்ளார்.

அப்போது அவரது தந்தை சென்னகேசவரின் சிலையை செதுக்கி கொண்டிருந்துள்ளார். அதனை கண்ட இளைஞன் நீங்கள் செதுக்கும் சிலையில் பிழையுள்ளது என குற்றம் சாட்ட, புகழ் பெற்ற அந்த சிற்பிக்கு தலைகணம் அதிகமாகி என் சிற்பத்தில் குற்றம்மில்லை. நீ நிரூபித்தால் என் வலது கையை வெட்டிக்கொள்கிறேன் என சபதமிடுகிறார். அந்த சிறுவன் சந்தனத்தை எடுத்து சிலையின் முழுவதும் தடவி விட்ட பின் சிறிது நேரத்தில் சிற்பத்தின் தொப்புள் பகுதியை தவிர மற்றவை காய்ந்துபோயின. அந்த தொப்புள் பகுதியை உளியை கொண்டு தட்டியபோது அந்த தொப்புள் வழியே தவளை, நீர், மணலும் வந்துள்ளது. தவறை உணர்த சிற்பி தன் கையை துண்டித்துக்கொண்டார்


நான் உங்கள் மகன் என தன் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வறுந்தியுள்ளான். அசரீரி வழியாக என் உருவத்தை உனது ஊரில் செதுக்கி நிர்மாணி உன் கை வலர்ந்து பழைய நிலையை அடையும் என்றதாம். அதன்படி சென்னகேசவ கோயில் அவரின் கிராமத்தில் கட்ட அதன்படி அவரின் கை வளர்ந்து பழைய நிலைக்கு வந்துள்ளது. அந்த கோயில் உள்ள கிராமம் கைதாலாவாகும். 

தினமும் புது செருப்பு :

பேலூர் சென்னகேசவருக்கு தினமும் செருப்பு தைக்கும் தொழிலாளார்கள் முறைவைத்து தினமும் ஒரு புது செருப்பு தைத்து வைப்பதாகவும் அதை சென்னகேவசர் பயன்படுத்துவதால் மாயமாய் மறைந்துவிடுவதாக கூறுகின்றனர். சென்னகேவசருக்கு செருப்பு தருவதற்கும் பின்னாலும் ஒரு கதையுள்ளது. விஷ்ணுவர்தன் போரில் வெற்றி பெற்றபின் பாபாபுதன் என்ற காட்டுக்குள் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது கனவில் வந்த சென்னகேவசர், எனக்கு ஒரு கோயில் கட்டு என கூறியதால் இவர் பேலூரில் ஒரு கோயில் கட்டியுள்ளார்.

அது சென்னகேவசருக்கு மட்டும் கட்டப்பட்டதாம். இதனால் தேவியரை காட்டிலேயே விட்டு வந்துவிட்டாராம். இதனால் தனது தேவியை காண காட்டுக்குள் நடந்துசெல்ல செருப்பு கேட்ட தாகவும் அதனை தான்,  காலம் காலமாக அங்குள்ள செருப்பு தைத்து தரும் குடும்பத்தார் தினமும் புது செருப்பு படைப்பதாக கூறுகின்றனர். சென்னகேசவர் சங்கு, சக்கரம், கமலம், கதாயுதம் கைகளில் வைத்துக்கொண்டு ஒரு பக்கம் பூமாதேவி மற்றொரு புறம் ஸ்ரீதேவியை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறார். 


அமைப்பு:

இக்கோயிலின் முகப்பில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியகோபுரம் கம்பீரமாகவுள்ளது. கோயில் உள்ளே நுழைந்ததும் 42 உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கம்பம் தனியாக நிற்கிறது. கர்ப்ப கிரகம் சதுர வடிவில் கோபுரம்மில்லாத நட்சத்திர வடிவில் கலை பொக்கிஷத்துடன் சென்னகேசவர் கருவரையின் வடபுறத்தில் காப்பேசன்னிகிராயர் கோயிலும், இலட்சுமியம்மன் சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் உள்ளது. 


கருவரைக்குள் செல்ல மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ள. வாயிலின் கதவுகள் அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவரத்தின மண்டபம், மோகனித்தூண், நரசிம்ம தூண் போன்றவை அழகிய, ஆச்சர்யமான, பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டியகாரியின் சிற்பத்தில் அந்த நாட்டியகாரியின் கையில் உள்ள வளையலை மேலும் கீழும் அசைக்க முடியும், விரலில் உள்ள மோதிரத்தை சுற்ற முடியும், துவரம் பருப்பு அளவில் நந்தியும் இந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 



அமைப்பு:

இக்கோயிலின் முகப்பில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியகோபுரம் கம்பீரமாகவுள்ளது. கோயில் உள்ளே நுழைந்ததும் 42 உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கம்பம் தனியாக நிற்கிறது. கர்ப்ப கிரகம் சதுர வடிவில் கோபுரம்மில்லாத நட்சத்திர வடிவில் கலை பொக்கிஷத்துடன் சென்னகேசவர் கருவரையின் வடபுறத்தில் காப்பேசன்னிகிராயர் கோயிலும், இலட்சுமியம்மன் சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் உள்ளது. 


கருவரைக்குள் செல்ல மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ள. வாயிலின் கதவுகள் அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவரத்தின மண்டபம், மோகனித்தூண், நரசிம்ம தூண் போன்றவை அழகிய, ஆச்சர்யமான, பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டியகாரியின் சிற்பத்தில் அந்த நாட்டியகாரியின் கையில் உள்ள வளையலை மேலும் கீழும் அசைக்க முடியும், விரலில் உள்ள மோதிரத்தை சுற்ற முடியும், துவரம் பருப்பு அளவில் நந்தியும் இந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 


சூடு தராத கற்கள்:
ஹோய்சால மன்னர்கள் கட்டிடகலையில் நிரம்ப ஆர்வம் கொண்டு தங்களது ஆட்சிக்காலத்தில் கோவில்களையும், நினைவுச்சின்னங்களையும் எழுப்பியுள்ளார்கள். அதில் பேலூர், ஹலபேடு போன்ற நகரத்தில் அமைக்கப்பட்ட கோயில்கள் தனித்தன்மை வாய்ந்த கற்களை கொண்டு கட்டியுள்ளனர். பேலூரில் இருந்து 200கி.மீ தொலைவில் உள்ள தும்கூர் நகரத்தில் உள்ள மலையில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட சோப்பு கற்களை கொண்டு கட்டியுள்ளனர்.

இந்த கற்களின் சிறப்பு உளியால் சிற்பத்தை செதுக்க செதுக்க பூபோல் உடையும், செதுக்கி முடித்தபின் இறுகிவிடும் தன்மை கொண்டது. எவ்வளவு வெயில் அடித்தாலும் இந்த கற்களின் மேல் நடக்கும்போது கால்களில் சூடு தெரியாது. ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த அழகிய சிற்பங்களை பாதுகாக்க எண்ணி மத்தியரசின் தொல்பொருள் துறை இக்கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்கிறது. தொடர்ந்து 900 ஆண்டுகளாக ஆகமவிதிப்படி இரண்டு கால பூஜை நடக்கும் திருக்கோயிலில் இதுவும் ஒன்று. 

கோயிலை வடிவமைத்தவர்கள்:

இக்கோயிலை சுற்றி 42 முக்கிய சிற்பங்கள் உள்ளன. ஓவ்வொன்றும் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவை. பெண்களை மையமாக கொண்டு தான் பெரும்பாலான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதைக்கு உட்பட்டதாகும். அதோடு சிறு சிறு சிற்பங்கள் அப்போதே போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. சிற்பிகளில் மிக முக்கியமானவர்களாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது. இன்றைய சிமோகா மாவட்டத்தை சேர்ந்த தசோஜா மற்றும் அவரது மகன் சவ்வனா ஆகியோர் அச்சு போன்ற சிற்பங்களை 9 தூண்களில் செதுக்கி இக்கோயில் கட்டியவர்கள், மல்லியானா மற்றும் நகோஜா ஆகிய இருவரும் பறவை, விலங்குகள் போன்ற சிற்பற்களை செதுக்கியவர்கள். ஒவியங்களை சிக்கம்பா, மல்லோஜா போன்றவர்கள் மேற்பாற்வையில் வரையப்பட்டன என குறிப்பிடுகின்றனர்.  இக்கோயிலை கட்டிய சிற்பிகளுக்குள் போட்டி அதிகமாக இருந்துள்ளது. மற்றவர்களின் சிற்பத்தை விட தன் சிற்பம் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணி பணி செய்துள்ளனர். அவர்கள் செதுக்கிய சிற்பத்துக்கு கீழ் தங்களை பற்றிய குறிப்புகளை செதுக்கியுள்ளனர். அதில், தசோஜா என்ற சிற்பி தான் சிற்பிகளின் முதல்வன், தர்மேஸ்வரரின் காலடியில் இருக்கும் தேனீ எனவும், மல்லிங்கனா என்பவர் சிற்பிகளின் புலி என்றும், நகோஜா சிற்பிகளின் முன்னோடி என்றும் தங்களை குறிப்பிட்டுக்கொள்கின்றனர். 

வழிதடம்: 
சென்னையில் இருந்து ஹாசன் நகரத்திற்கு இரயில் வசதியும் உள்ளது. தங்கும் விடுதிகள் வசதிக்கு ஏற்றாற்போல் உள்ளது. கர்நாடகா மாநில சுற்றுலா கழகம் குறைந்த செலவில் ஒரு நாள் சுற்றுலாவாக இப்பகுதிக்கு அழைத்துசெல்கிறது. தங்கும் விடுதிகள் பல இங்குள்ளன.

நன்றி !!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top