Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மரத்தக்காளி , டமிட்டா பழம், betaceum, Tree Tomato, Tamarillo
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மரத்தக்காளி அல்லது குறுந்தக்காளி (Tamarillo) என்பது உருளைக் கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பூக்கும் தாவரம் ஆகும் . இ...


மரத்தக்காளி அல்லது குறுந்தக்காளி (Tamarillo) என்பது உருளைக் கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பூக்கும் தாவரம் ஆகும். இது முட்டை வடிவ உண்ணத்தகு பழங்களை விளைவிக்கிறது. மரத்தக்காளியானது ஒரு சிறு மரப்பயிர் ஆகும்.

இது பெரு நாட்டின் மலைக் கிராமங்களில் இருந்து தோன்றியது. பின்னர் அங்கிருந்து நியூசிலாந்து, பிரேசில், இந்தியா, இலங்கை நாடுகளுக்குப் பரவி பயிரிடப்படுகிறது. இதை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்றாலும் இது மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது என்பதால், சமவெளிப் பகுதிகளில் பயிரிட முடியாதது. இவை தொடர்ந்து 5, 6 ஆண்டுகள் மகசூல் தரக்கூடியன. இப்பயிர் கடல் மட்டத்தில் இருந்து 1,000 முதல் 7,500 அடி உயரமான இடங்களில் வளர்கிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், நாகாலாந்து, இமாசலப்பிரதேச மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது 

தமிழ்நாட்டில் சிறுமலை, கொடைக்கானல், ஊட்டி, தாண்டிக்குடி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் விவசாயிகள் மரத்தக்காளியை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். முட்டை வடிவப் பழங்கள் 4-10 செ. மீ நீளமுடையன. அவற்றின் நிறம் மஞ்சள் முதல் செம்மஞ்சள், சிவப்பு, ஊதா எனப் பல உள்ளன. இவை தக்காளியைப் போன்ற சுவைகொண்டதாக உள்ளன. சாதாரண தக்காளி, செடியில் இருந்து பறித்த பழம் ஒரிரு நாளில் அழுகிவிடுகின்றன. ஆனால், மரத்தக்காளி பழங்கள் 7 முதல் 8 நாட்கள் வரை சாதாரணமாக கெடுவதில்லை. குறைந்த சீதோஷ்ண நிலையில் சுமார் 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதாரண தக்காளியைப் போல் இதை அப்படியே பயன்படுத்த முடியாது. தோலை சுற்றி கசக்கும் தன்மை இருக்கும். அதனால் தோலை நீக்கிவிட்டு, பயன்படுத்துகின்றனர் 
                   

புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து உள்ளிட்ட தக்காளியில் இருக்கும் எல்லா சத்துக்களும் மரத்தக்காளியிலும் உள்ளன. அதிக மருத்துவ குணமிக்க இப்பழங்கள் தக்காளியின் குண நலங்களை பெற்றவை. ஒரு மரத்தில் இருந்து 20 கிலோ வரை இந்த வகை தக்காளி கிடைக்கிறது. 

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்ப்பதால் வேண்டும்போது அறுவடை செய்துகொள்ளலாம். தக்காளிக்கு மாற்றாக இந்த பயிரை மலைப்பிரதேசங்களில் சாகுபடி செய்ய விவசாயிகளை தோட்டக்கலைத்துறை ஊக்குவித்தால் நடுத்தர, ஏழை மக்கள் தக்காளிக்கு மாற்றாக இந்த பழங்களை பயன்படுத்தலாம். இதுவும் தக்காளி போன்றே இருக்கும். அதன் சுவையும் அப்படியே இருக்கும்'

Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top