Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூன் 25 புனிதர் வில்லியம் (St. William of Montevergine)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூன் 25  புனிதர் வில்லியம்  (St. William of Montevergine) நிறுவனர்/ மடாதிபதி : (Founder/ Abbot) பிறப்பு : கி.பி. 1085 ...
இன்றைய புனிதர் ஜூன் 25 புனிதர் வில்லியம் (St. William of Montevergine)
நிறுவனர்/ மடாதிபதி : (Founder/ Abbot)
பிறப்பு : கி.பி. 1085 வெர்சில்லி, இத்தாலி (Vercelli, Italy)
இறப்பு : ஜூன் 25, 1142 சேன் ஆன்ஜெலோ டே லொம்பார்டி, இத்தாலி
(Sant'Angelo dei Lombardi, Italy)
நினைவுத் திருநாள் : ஜூன் 25

புனிதர் வில்லியம், ஒரு கத்தோலிக்க துறவியும் (Catholic Hermit), “மோன்ட்டே வெர்ஜின்” அல்லது “வில்லியமைட்ஸ்” (Congregation of Monte Vergine, or "Williamites") எனும் துறவற சபையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.வடமேற்கு இத்தாலியின் (Northwest Italy) “வெர்செல்லி” (Vercelli) பிராந்தியத்தில் கி.பி. 1085ம் ஆண்டு பிறந்த வில்லியம், தமது பெற்றோரின் மரணத்தின் பின்னர் உறவினர் ஒருவரால் வளர்க்கப்பட்டார். இவர், ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள “சந்தியாகு டி கம்போஸ்டலா” (Santiago de Compostela) எனுமிடத்திலுள்ள “செபதேயுவின் மகனான புனித யாக்கோபு” (St. James, son of Zebedee) திருத்தலத்திற்கு திருயாத்திரை சென்றார். போகுமுன்னர், கொல்லர் பணி புரியும் ஒருவரிடம், தமது உடலைச் சுற்றி இருக்குமாறு ஒரு இரும்பு வளையம் செய்து தரச் சொன்னார். அந்த இரும்பு வளையத்தை தமது உடலைச் சுற்றி அணிந்தபடியே அவர் திருயாத்திரை சென்று வந்தார். 

                              Santuario di Montevergine, Avellino, Italy
சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும், எருசலேம் (Jerusalem) செல்ல தீர்மானித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி, வழியில் தென் இத்தாலி (South Italy) வந்தடைந்தார். அங்கே, கொள்ளைக்காரர்கள் அவரை அடித்து உதைத்து அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுவே இறைவனின் சித்தம் என்றுணர்ந்த வில்லியம், தென் இத்தாலியிலேயே தங்கி கிறிஸ்துவின் நற்செய்தி பரப்ப தொடங்கினார். இதன் காரணமாக, எருசலேம் செல்வதில்லை எனவும் தென் இத்தாலியின் “நோலா” (Nola) மற்றும் “பெனேவென்ட்டோ” (Benevento) ஆகிய பிராந்தியங்களின் இடையிலுள்ள பகுதியில் ஒரு துறவியாக தங்கினார். இங்கே அவர் எண்ணற்ற சீடர்களை ஈர்த்தார். அத்துடன், “மோன்ட்டேவெர்ஜின்” (Monastery of Montevergine) எனும் துறவு மடத்தினை நிறுவினார்.
                                   Santuario di Montevergine, Avellino, Italy
“மோன்ட்டேவெர்ஜின்” துறவு மடத்தில் வில்லியம் அற்புதங்கள் செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது. “சிசிலி” (Sicily) தீவில் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக எண்ணற்ற துறவு மடங்களை நிறுவிய சிசிலியின் அரசனான “இரண்டாம் ரோகர்” (Roger II of Sicily) வில்லியமின் பாதுகாவலராக இருந்தார். “கத்தோலிக்க கலைக் களஞ்சியத்தின்” (The Catholic Encyclopedia) கூற்றின்படி, வில்லியமை தமது அருகிலேயே வைத்திருக்கும் நோக்கத்தில், “சலேர்னோ” (Salerno) நகரிலுள்ள தமது அரண்மனையின் எதிரிலேயே ஒரு துறவு மடம் கட்டினார்.
       incorrupted  Body of St. William  at  Santuario di Montevergine, Avellino, Italy
தம்மைப் பின்பற்றி துறவு மடத்திற்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. துறவு மடத்தில் துறவியரின் கடின வாழ்க்கை முறையை பொறுத்துக்கொள்ள இயலாத உடனிருப்பவர்களால் பூசல்களும் அதிகரித்தன. அதனால் கி.பி. 1128ம் ஆண்டு, “மோன்ட்டேவெர்ஜின்” துறவு மடத்தை விட்டு வெளியேறிய வில்லியம், “கம்பானியா” (Campania) மற்றும் “பஸிலிகட்டா” (Basilicata) ஆகிய பிராந்தியங்களின் இடையேயுள்ள “கொலேட்டோ” (Goleto) என்னுமிடத்தின் சமவெளிகளில் தங்கினார். அங்கே, ஒரு இரட்டை துறவு மடத்தினை பெண்களைக் கொண்டே கட்டினார். தொடர்ந்து எண்ணற்ற துறவு மடங்களை கட்டிய வில்லியம், கி.பி. 1142ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் தேதியன்று, “கொலேட்டோ” (Goleto) என்னுமிடத்தில் மரித்தார்.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top