Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூன் 23 புனிதர் எத்தெல்டிரெடா (St. Etheldreda)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூன் 23  புனிதர் எத்தெல்டிரெடா  (St. Etheldreda) அரசி/ இளவரசி/ மடாதிபதி : (Queen/ Princess/ Abbess) பிறப்பு : கி.பி. ...
இன்றைய புனிதர் ஜூன் 23 புனிதர் எத்தெல்டிரெடா (St. Etheldreda)
அரசி/ இளவரசி/ மடாதிபதி : (Queen/ Princess/ Abbess)
பிறப்பு : கி.பி. 636 எக்ஸ்னிங், ஸஃபோல்க் (Exning, Suffolk)
இறப்பு : ஜூன் 23, 679 எலி, கேம்ப்ரிட்ஜ்ஷைர் (Ely, Cambridgeshire)
முக்கிய திருத்தலம் : புனிதர் எத்தெல்டிரெடா ஆலயம், எளி பிளேஸ், ஹோல்போர்ன், லண்டன்; முன்பு எளி ஆலயம் (தற்போது அழிந்துவிட்டது)
(St Etheldreda's Church, Ely Place, Holborn, London; Originally Ely Cathedral (Now Destroyed)
நினைவுத் திருநாள் : ஜூன் 23

புனிதர் எத்தெல்டிரெடா, ஓர் அரசர் குடும்பத்தில் மகளாக பிறந்தவர். இவர் ஒரு “கிழக்கு ஆங்கிலியன் இளவரசியும்” (East Anglian Princess), “ஃபின்லாந்து” மற்றும் “நார்தும்ப்ரியன்” அரசியும் (Fenland and Northumbrian Queen), “எளி” என்ற இடத்திலுள்ள துறவு மடத்தின் (Abbess of Ely) மடாதிபதியும், “ஆங்கிலோ-சாக்சன்” (Anglo-Saxon Saint) புனிதருமாவார்.
                 Church of St Etheldreda in Ely, Cambridgeshire, UK
“கிழக்கு ஆங்கில்ஸ்” (East Anglia) நாட்டின் அரசனான “அன்னா’வுக்கு” (Anna of East Anglia) பிறந்த நான்கு புனிதர்களான பெண்களில் ஒருவர்தான் எத்தெல்டிரெடா. இந்த சகோதரிகள் நால்வருமே இவ்வுலக சுக வாழ்வினை துறந்து துறவறம் பெற்றவர்களேயாவர்.
எத்தெல்டிரெடா, கி.பி. 652ம் ஆண்டு, தமது பதினாறாவது வயதிலேயே “தெற்கு ஜிர்வ்” (South Gyrwe) நாட்டின் இளவரசனான “டோன்ட்பெர்க்ட்” (Tondberct) என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டார். தாம் ஏற்கனவே தமது திருமணத்தின் முன்பே கன்னிமை காப்பதாக இறைவனிடம் எடுத்துக்கொண்ட பிரமாணிக்கத்தின்படி, தன் கணவன் தம்மை நிரந்தரமாக கன்னித்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதற்கு இணங்கச் செய்தார். திருமணமான மூன்றே வருடத்தில், கி.பி. 655ம் ஆண்டு, அவரது கணவர் “டோன்ட்பெர்க்ட்” (Tondberct) இறந்து போனார். தமது கணவர் தமக்கு பரிசாக தந்த “எலி” (Isle of Ely) எனும் வரலாற்றுப் பிராந்தியத்திற்குச் சென்றார்.
                 Church of St Etheldreda in Ely, Cambridgeshire, UK
அதன்பின்னர் தொடர்ச்சியாக, கி.பி. 660ம் ஆண்டு, அவர் “எக்ஃபிரித்” (Ecgfrith of Northumbria) என்பவரை அரசியல் காரணங்களுக்காக மறுமணம் செய்துகொண்டார். கணவர் அரியணை எரிய சிறிது காலத்திலேயே, கி.பி. 670ம் ஆண்டு, எத்தெல்டிரெடா துறவறம் பெற்றார். எத்தெல்டிரெடாவின் இந்த நடவடிக்கை, அவரது கணவர் “எக்ஃபிரித்” மற்றும் “யோர்க்” மறைமாவட்ட ஆயர் (Bishop of York) “வில்ஃபிரிட்” (Wilfrid) ஆகியோரிடையேயான நீண்ட கால சண்டைக்கு வழி வகுத்தது.
 Relic of St Etheldreda in Ely, Cambridgeshire, UK
ஆரம்பத்தில், எத்தெல்டிரெடா கன்னியாகவே வாழ சம்மதம் தெரிவித்திருந்த “எக்ஃபிரித்”, 672ம் ஆண்டு, தங்களது திருமணத்தை முறித்துக்கொள்ள விரும்பினார். அரசி நம்பவேண்டும் என்பதற்காக, வில்ஃபிரெட்டுக்கு லஞ்சம் கொடுத்து தமது செல்வாக்கை உபயோகிக்க முயற்சித்தார். இந்த தந்திரோபாயம் தோல்வியுற்றதும், மன்னர் தனது ராணியை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயன்றார். எத்தெல்டிரெடா திரும்ப இரண்டு விசுவாசமுள்ள அருட்சகோதரியருடன் “எளி” (Ely) பறந்தார். தாம் கைப்பற்றப்படுவதை தவிர்க்க முடிந்தது. சிறிது காலத்தின் பின்னர் “எயோர்மென்பர்க்” (Eormenburg) என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்ட “எக்ஃபிரித்” (Ecgfrith) கி.பி. 678ம் ஆண்டு, ஆயர் வில்ஃபிரிடை தமது நாட்டை விட்டு நாடுகடத்தினான். கி.பி. 673ம் ஆண்டு, எத்தெல்டிரெடா “எளி” (Ely) தீவில் ஒரு “இரட்டை துறவு மடம்” (Double Monastery) நிறுவினார். பிற்காலத்தில், 870ம் ஆண்டு, இவ்விரட்டை மடம் “டேனிஷ்” (Danish) எனும் மன்னனின் முற்றுகையின்போது முற்றிலும் தகர்க்கப்பட்டது.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top