Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிறந்த இந்திய சாலைப் பயணங்கள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பைக் எடுத்துகிட்டு எப்ப விடுமுறை கிடைத்தாலும் எங்கியாவது பயணம் போவதை விட சந்தோசமான விஷயம் எதுவுமே இருக்க முடியாது. அதுவும் இந்தியா மாதிரி ...
பைக் எடுத்துகிட்டு எப்ப விடுமுறை கிடைத்தாலும் எங்கியாவது பயணம் போவதை விட சந்தோசமான விஷயம் எதுவுமே இருக்க முடியாது. அதுவும் இந்தியா மாதிரி ஒரு நாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் போது நிறைய மனிதர்களையும், மாறுபட்ட அவர்களின் கலாச்சார பின்னணி மற்றும் முற்றிலும் வேறுபட்ட அவர்களின் வாழ்விடங்கள்  புதிய அனுபவங்களை நமக்கு வழங்கும். அப்படி நாம் கட்டாயம் செல்ல வேண்டிய சிறந்த இந்திய சாலைப் பயணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கூர்க் - மூணார் : சொக்க வைக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே அற்புதமான பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் கூர்கில் இருந்து மூணார் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். கூர்க், மூணார் ஆகிய இரண்டு இடங்களுமே தெனிந்தியாவில் இருக்கும் முதன்மையான சுற்றுலாத்தலங்கலாக இருப்பது இந்த பயண அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது.

கூர்க் - மூணார் : 446 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தின் போது கேரளாவில் இருக்கும் மாஹே, தலசேரி, கோழிகோடு, குருவாயூர் போன்ற நல்ல சுற்றுலாத்தங்களுக்கும் செல்லலாம். 446 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தை கூர்கில் முதல் குருவாயூர் வரையும் பின் குருவாயூரில் இருந்து மூணார் வரையிலும் என இரண்டு கட்டமாக பயணம் மேற்கொள்ளலாம்.

சென்னை - பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை : இதுவரை கிழக்கு கடற்கரை சாலையில் நீங்கள் பயணித்ததில்லை என்றால் அதி அற்புதமான ஒரு பயண அனுபவத்தை நீங்கள் பெற்றதேயில்லை என்று நிச்சயம் சொல்லாம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்க கடற்கரை சாலை(Gold Cost Road) பயணத்துக்கு இணையானது இந்த கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்.

சென்னை - பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை : உலகின் நீளமான கடற்கரை ஒன்றில் 169 கி.மீ தூரம் பயணிக்கையில் அதன் ஒவ்வொரு கி.மீ தூரத்தையும் நீங்கள் என்றென்றைக்கும் மறக்க மாட்டீர்கள். இந்த பயணத்தின் வழியில் மாமல்லபுரம் கற்கோயில்கள், முட்டுக்காடு படகுசவாரி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கும் செல்லலாம்


ரன் ஆப் கட்ச், குஜராத்: குஜராத்தில் பரந்து விரிந்திருக்கும் ஒன்றுமே இல்லாத உப்பு பாலைவனம் தான் ரன் ஆப் கட்ச். தனிமையை, எதுவுமே இல்லாத வெறுமையை அனுபவிக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய பயணம் இது. முறையான சாலைகள் எதுவும் இல்லையென்றாலும் வாகனங்கள் பயணிக்க தகுதியான புவியமைப்பு இந்த இடத்தில் உள்ளது.

ரன் ஆப் கட்ச், குஜராத்: இந்த இடத்தின் சிறப்புகளில் ஒன்று இங்கு அந்தி மாலை நேரத்தில் வானில் 'சீர் பட்டி' என்று அழைக்கப்படும் ஒளி மாயாஜாலம் நிகழ்கிறது. என்னவென்று விவரிக்க முடியாத இந்த நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு ரன் ஆப் கட்ச்சில் பயணிக்கும் போது நமக்கு கிடைக்கலாம். இதை ஒட்டியே பாகிஸ்தான் எல்லை அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரம் - பாம்பன் : இராமாயண காவியத்தில் வரும் முக்கிய இடங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமலிங்கேஸ்வரர் கோயில் மிகப்பிரபலமான யாத்ரீக ஸ்தலமாக திகழ்கிறது. இந்திய பெருநிலப்பரப்பின் தென் கோடி முனைகளில் ஒன்றான இவ்விடம் சற்று மாறுபட்ட பாலைவனத்தை போன்ற நிலப்பரப்பை கொண்டுள்ளது.
ராமேஸ்வரம் - பாம்பன் : ராமேஸ்வரம் தீவில் ராமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கியமான இடமென்றால் அது கைவிடப்பட்ட நகரமான தனுஷ்கோடி தான். நாம் ராமேஸ்வரத்தில் தனுஸ்கோடி வரையிலான பயணத்தை தான் இங்கே மேற்கொள்ளவிருக்கிறோம்
 ராமேஸ்வரம் - பாம்பன் : ராமேஸ்வரத்தில் இருந்து தனுஸ்கோடி வெறும் 20 கி.மீ தூரம் தான் என்றாலும் சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க நாம் மட்டும் தனியே பயணிப்பது போன்று இருக்கும். உங்கள் மோட்டார் சைக்கிள் டைரியில் நிச்சயம் இடம்பெற வேண்டிய பயணம் இது.

மணாலி - ரோஹ்டங் கணவாய்: இமய மலையில் சாகசப்பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு பயணமாக மணாலியில் இருந்து ரோஹ்டங் கணவாயின் வழியாக கோடை காலத்தில் நாம் பயணம் மேற்கொள்கையில் இமயமலையின் பேரழகை கண்டு லயிக்கலாம்.

மணாலி - ரோஹ்டங் கணவாய்: 51கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தின் போது கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற மிக ஆபத்தான சாலைகளில் பயணிக்க வேண்டியிருக்கும். குளிர் காலத்தில் மூடப்படும் இந்த சாலை மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே திறந்திருக்கிறது. இந்த பயணத்தை நிறைவு செய்ய 5-6 மணி நேரம் வரை ஆகும்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் உதய்பூர் - ஜெய்பூர்: இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனமான ராஜஸ்தானத்தின் தார் பாலைவனத்தின் வழியாக பயணித்து உதைபுரில் இருந்து ஜெய்பூர் வரை பயணிக்கலாம். 420 கி.மீ தொலைவு கொண்டது இந்த சவால் மிக்க பயணம்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் உதய்பூர் - ஜெய்பூர்: இந்த பயணத்தை அதி காலை நேரத்திலும் பின்னர் மாலை தொடங்கி இரவு நேரத்திலும் மேற்கொள்வது நல்லது. அகண்டு விரிந்த பாலைவனத்தின் நடுவே நண்பர்களுடன் பயணிப்பது நிச்சயம் ஒரு புதிய அனுபவம் தானே.

தி க்ராண்ட் டிரன்க் ரோடு: இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புகள் கொண்ட இந்திய பெருங்கண்டத்தில் இருக்கும் நான்கு நாடுகளையும் இணைக்கும் சாலை தான் இந்த க்ராண்ட் டிரன்க் ரோடு. மவுரிய பேரரசர்கள் காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் இந்த சாலையில் பயணிப்பது நாம் பார்த்திராத இந்தியாவின் வேறொரு முகத்தை நாம் காணலாம்.
தி க்ராண்ட் டிரன்க் ரோடு: பங்களாதேசின் சிட்டகாங் நகரில் துவங்கி கொல்கத்தாவின் துர்காபூர், வாரணாசி, அலகாபாத், கான்பூர், தில்லி, அம்ரித்சர் வழியாக இந்திய பாகிஸ்தான் எல்லையை அடைந்து பின் லாகூர், பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தானின் காபுல் நகரத்தில் முடிவடைகிறது இந்த 2500 தூர நீளம் கொண்ட சாலை.
தி க்ராண்ட் டிரன்க் ரோடு: இந்தியாவில் மொத்தம் 1700 கி.மீ தூரத்திற்கு இந்த சாலை உள்ளது. இந்தியாவில் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரை இந்த சாலையில் நாம் பயணிக்கலாம். மலைகளில் அமைந்திருக்கும் பசுமையான பெங்கால் தேயிலைத் தோட்டங்கள், பஞ்சாபின் கோதுமை வயல்கள், பழமை மாறாத பழைய தில்லியின் கட்டிடங்கள், காவியுடை அணிந்த சாதுக்கள் என வேறுபட்ட இந்தியாவின் பண்முகங்களை நாம் இந்த பயணத்தின் போது காணலாம். 
மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்: இந்தியாவில் இருக்கும் மிக சிறந்த சாலைப் பயணங்களில் ஒன்றாக பயண விரும்பிகளால் சொல்லப்படும் பயணம் தான் மணாலியில் இருந்து லெஹ் வரையிலான 475 கி.மீ பயணம். 'A journey of dreams' என்று வர்ணிக்கப்படும் சிறப்பை கொண்டது இந்த சாலைப்பயணம்

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்: வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான பனி இல்லாத நான்கு மாதங்கள் மட்டுமே இந்த சாலை திறந்திருக்கிறது. மணாலியில் இருந்து லஹால், ஸ்பிதி, சன்ச்கர் பள்ளத்தாக்குகள் வழியாக லெஹ்வை அடைகிறது இந்த தேசிய நெடுஞ்சாலை 3. 


மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்: வருடத்தில் இரண்டு வாரங்கள் தொடர் விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பயணங்களுள் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளுங்கள். அதேபோல இது போன்ற உங்களின் பயண அனுபவங்களையும் இங்கே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top