தமிழர்களின் கிறிஸ்தவாக்கத்தி்ன் வேளாங்கண்ணியின் பங்களிப்பு
மரியன்னையின் பிறந்த நாளே வேளாங்கண்ணியின் திருநாள்
வேளாங்கண்ணி தமிழர்களிடை உள்ள மரியன்னை திருயாத்திரைத் தலங்களில் தலைசிறந்ததாக விளங்குகிறது. நாகைபட்டினத்திற்கருகே உள்ள இத்திருத்தலம் பிரான்சிலுள்ள லூர்த்து அன்னை, போர்த்துக்கல்லில் உள்ள பற்றிமா அன்னை போன்று பல இலட்சம் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய ஆலயமகா இன்று திகழ்கிறது. ஆயினும் தமிழர்களிடை கிறிஸ்தவத்திருமறையை முதலில் எடுத்து வந்த தத்துவபோதக சுவாமிகள் எனப்பட்ட றெபேர்ட்டு நோபிலி (1577-1656) மதுரைக்கு வருவதற்கு முன்னரே இவ்வாலயம் நிறுவப்பட்டிருந்துள்ளமை முக்கியமான வரலாற்றுத் தகவலாக உள்ளது. ஆயினும் இவரது நோக்கு கிறிஸ்தவ சமயக் கருத்துக்களைத் எழுதிய போதிலும் அவற்றில் கிறிஸ்தவ ஆலயங்கள் குறித்த விபரங்கள் எதனையும் தரவில்லை.

தமிழில் நூல் எழுதிய முதல் ஐரோப்பியர் றெபேர்ட்டு நோபிலி தமிழகத்தில்
கிறிஸ்தவத் திருமறையை அறிமுகம் செய்ய சேதுபதி மன்னனால் சிரச் சேதம் செய்யப்பட்டவர் அருளானந்தர் எனத் தமிழ்ப்பெயர் பூண்ட
யோன் பிரிட்டோ (1647 – 1693). இவரது காலத்திலும் வேளாங்கண்ணி குறித்த தகவல்களை இவரது எழுத்துகளில்
பெறமுடியவில்லை.
பின்னர் தைரியநாதர்; எனத் தமிழ்ப் பெயர் தாங்கி இன்று வீரமாமுனிவரெனப்படும் யோசப் பெஸ்கி (1680-1747) பூண்டிமாதா ஆலயத்தினை நிறுவி அங்கிருந்து திருக்காவலூர் கலம்பகம் தேம்பாவணி போன்ற அற்புதமான மரியன்னை புகழ்பாடு இலக்கியங்களைப் பாடிய பொழுதிலும் வேளாங்கண்ணி அன்னை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

வேளாங்கண்ணி 400 வருடங்களுக்கு முன்னரான அருட்தன்மை கொண்டதாகத் தமிழ்
மக்களிடை நம்பிக்கை நிலவுகிறது. இறையருள்
பெருக்கின் அறிகுறியாகப் பால் பெருக்கு
வேளாங்கண்ணியில் அன்னாப்பிள்ளைத் தெருவில் உள்ள குளக்கரையில் பால் சுமந்தவண்ணம் தன் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம் கையில் குழந்தையுடன் தோன்றிய அழகிய பெண் ஒருவர் கையிலுள்ள தன் குழந்தைக்குப் பால் கேட்டாள். பாலைக் கொடுத்தால் பால் குறைந்து முதலாளிக்குப் பதில் சொல்ல வேண்டி வருமெனக் கலங்கினான் அச்சிறுவன். ஆனாலும் அந்தத் தாய்மையின் குரலுக்கு அடிபணிந்து பாலைக் கொடுத்து விட்டு தன் முதலாளி இல்லத்திற்குச் சென்றான் அச்சிறுவன். முதலாளி இடத்தில் தான் பால் கொடுத்ததைச் சொல்லி பால் குறைந்துள்ளதெனவும் கூறினான். முதலாளி பால் அண்டாவினைத் திறந்து பார்த்ததுமே பால் தானாகவே பெருகி வழிந்தோடத் தொடங்கியது. இதனால் அதிசயமுற்ற முதலாளியும் ஊராரும் அந்தப் பெண் பால் கேட்ட மரத்தடியில் அந்தப் பெண் அன்னை மரியாள் போல் இருந்ததினால் அன்னை மரியாளுக்கான வழிபாட்டை ஊரவர் தொடங்கியதாக ஒரு மரபு.

வேளாங்கண்ணி கிராமத்துக் கால் வலுவிழந்த சிறுவன்
ஒருவனை அவன் தாயார் இந்தக் குளத்தங்கரை மரத்தடியில் இருத்தி மோரைக் கொடுத்து
அவனைக் கொண்டு விற்பித்துப் பிழைப்பது ஒரு ஏழைத்தாயின் வழக்காக இருந்தது. அன்று
ஒருநாள் அந்த காலிலாச் சிறுவனிடம் ஒரு அழகிய பெண் வந்து தன் கையிலிருந்த குழந்தைக்கு
மோர் கேட்டாள்.
இயலாமை நீக்கிய அன்னை மரியாள்
காலிலாச் சிறுவனோ எழுந்து மோர் கொடுக்கத் தன்னால் இயலாது அருகே வந்து வாங்கிப் பருக்கும் படி சொன்னான். அப்பெண்ணோ எழுந்து தா என்றாள். வார்த்தை கொடுத்த அழுத்தத்தில் எழுந்து அடியெடுத்து நடந்து மோரைக் கொடுத்தான் அச்சிறுவன். கால் இயலாத சிறுவன் காலடி எடுத்து வைத்து நடத்தல் கண்டு அதிசயித்த அவ்வூரார் அவ்விடத்தில் மரியன்னைக்கு ஆலயம் அமைத்தனர் என்பது மற்றொரு நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறாக அந்த மரத்தடியில் தொடங்கிய மரியன்னை ஆலயம்தான் போர்த்துக்கேயர்களின் கப்பல் புயலுக்குக் கரை ஒதுங்கிய பொழுது அவர்களால் கோயிலாக்கப்பட்டுப் பரிணாம வளர்ச்சியில் இன்றைய வேளாங்கண்ணிப் பேராலயமாகத் திகழ்கிறது.

ன் தமிழகத்தின் வேளாங்கண்ணி தமிழீழத்தின் மருதமடு ஆகிய பகுதிகளில் போர்த்துக்கேயர் வணிக நோக்கில் வருவதற்கு முன்னரே மரியன்னையின் அருஞ்செயல்கள் திருவுருவங்கள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடற்கரை நோக்கிச் செல்லும் காட்டுப் பகுதிகளில் மக்களால் பேசப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளன. இவ்வாறு இப்பகுதிகளில் இருந்த முன்னைய திருவுருவங்கள் புயலுக்கு கரை ஒதுங்கியும் புது வணிகம் தேடியும் வந்த போர்த்துக்யேரால் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது முதற்கட்ட வரலாறு.
இந்த வகையில் ஒரு முறை போர்த்துக்கேயரின் கப்பல்
ஒன்று புயலுள் சிக்கி மாலுமிகள் மரணத்துடன் போராடிய நிலையில் செபமாலை சொல்லித்
தம்மைக் காக்கும்படி வேண்டினார்கள். அக்கப்பல் வேளாங்கண்ணிக் கடற்கரையில்
கரையொதுங்கியது. அந்நேரம் அவர்கள்; மகிழ்ந்து தமக்குதவிய மரியன்னைக்கு வெண்மணற்பரப்பில் நின்று நன்றி சொல்லி
ஆனந்தக் கூத்தாடினர். அந்நேரம் அங்கு வந்த ஊர்மக்கள் அண்ணாப்பிள்ளைத் தெருக்
குளக்கரையில் தாம் கும்பிட்டு வந்த மரியாளின் திருவுருவை அவர்களுக்குக் காட்ட
அவர்கள் அவ்விடத்தில் முறைப்படியான ஆலயம் ஒன்றை அமைத்துத் தாம் தம்முடன் கொண்டு
வந்திருந்த மரச்சிலுவை ஒன்றையும் அங்கு நிறுவினர். இவர்கள் தாம் நிறுவிய மரியாளின்
இவ்வாயலயத்தில் தம்முடன் வந்திருந்த பிரான்சிஸ்கன் சபைக் குருவின் மூலம் மரியாளின்
பிறந்த நாளைச் செப்டெம்பர் 8ம் நாளில் திருப்பலியுடன் பெருவிழாவாக் கொண்டாடினர். இதுவே வேளாங்கண்ணி
ஆலயத்தின் திருவிழாவாகப் பெருவிழாவாக இன்று வரை தொடர்கிறது.
போர்த்துக்கேயக் கப்பல்கள் வணிகப்பாதை தேடிப்புறப்பட்ட அதே நேரத்தில் அவர்கள் செல்லும் கடல் வழிப்பயணம் ஆபத்துக்கள் நிறைந்தன என்பதாலும் பல கப்பல்கள் கடலிலேயே சங்கமமாயினதாலும் மிக நீண்டநாள் பயணமாக இருந்ததாலும் கப்பலில் வழிபாடுகள் நிகழ்த்துவதற்கு அவர்களுடன் கத்தோலிக்கக் குரு ஒருவரையும் கப்பலில் அனுப்புதல் வழமையாயிற்று. அதே வேளை மன்னன் ஸ்பெயினை மேற்குலகில் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கான பொறுப்புள்ள நாடாகவும் போர்த்துக்கல்லின் லிஸ்பென் நகரத்தை உலகெங்கும் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கான தலைமைப் பங்காகவும் அறிவித்து அதற்கான எல்லா உதவிகளையும் அளித்து வந்தான். இந்தப் பின்னணியில்தான் போர்த்துக்கேயர்கள் தாம் சென்ற நாடுகளில் கத்தோலிக்க ஆலயங்களை அமைத்தனர்.

1662 முதல் இங்கு பங்குத்தந்தையுடன் கூடிய வழிபாடுகள் வளர்ச்சியடையத்
தொடங்கி இன்று தமிழர்களின் கிறிஸ்தவ மயப்படுத்தலின் முக்கிய அடையாளமாக அனைத்து இன
மொழி மத மக்களாலும் போற்றப்படும் பேராலயமாகத் திகழ்ந்து வருகிறது.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON